Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள்-2023:மிதுனம்|Sani Peyarchi Palangal 2023

சனி பெயர்ச்சி பலன்கள்-2023:மிதுனம்|Sani Peyarchi Palangal 2023

சனி பெயர்ச்சி பலன்கள்-2023:மிதுனம்(அதிஷ்ட சனி )

புதனின் அருள் பெற்ற மிதுன ராசி அன்பர்களே! வரும் சனிப்பெயர்ச்சி உங்களுக்கு எப்படி அமையப்போகும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

மிதுன ராசியினரின் பொதுவான குணங்கள்

இவர்கள் கோபத்தையும் அன்பையும் கலந்து கட்டி காண்பிக்கும் குணம் கொண்டவர்கள். இதில் சில சமயம் எங்கே கோபத்தை வெளிப்படுத்த வேண்டும் எங்கே அன்பாக இருக்க வேண்டும் எனும் வரைமுறை தெரியாமல் ரெண்டுங்கெட்டான் என்றோ, மூளை குறைந்தவர் என்றோ பெயர் வாங்கி விடுவார். ஆயினும் இவர்கள் தீர்க்கமான சிந்தனையாளர்களாக இருந்தால் குடும்பம், தொழில் ஆகியவற்றில் முதல் தர மனிதராக மேன்மை பெறுவார். இவர்களில் சிலர் மிகுந்த புக்தியுள்ள ஆளாகவும், பழிவாங்கும் தன்மை கொண்டவராகவும் இருப்பார். இதனால் நன்கு பழகுபவர்களுக்கு இவரின் உண்மை குணம் தெரிய வாய்ப்பில்லாமல் ஆகிவிடும்.

சனி பெயர்ச்சி

மிதுன ராசிக்கு சனி 8 மற்றும் 9க்கு அதிபதி. இதுவரையில் சனி எட்டாம் இடம் எனும் அஷ்டம சனியாக இருந்து வந்தார். இப்போது கும்ப ராசிக்கு மாறி அதிர்ஷ்ட சனியாக அமர்கிறார். எனவே இதுவரையில் இருந்து வந்த இன்னல்கள் யாவும் நீங்கிவிடும்.

சனி 9ஆம் இடத்திலிருந்து மிதுன ராசியின் 11-ம் இடம், 3-ம் இடம்,6-ம் இடத்தை பார்வையிடுகிறார்.

சனி பெயர்ச்சி நாள் -Sani peyarchi Date

இந்த சுபகிருது வருடம், உத்திராயணம் ஹேமந்த ருது. தை மாதம் 3-ஆம் தேதி (17.1.2023) கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) தசமி, செவ்வாய்க்கிழமை விசாக நட்சத்திரம், 4-ஆம் பாதம், விருச்சிக ராசி. கண்ட நாம் யோகம், பவ கரணம் கூடிய யோக சுப தினத்தில் கடக லக்னத்தில் விருச்சிக ராசியில், சிம்ம நவாம்சத்தில், கடக நவாம்ச ராசியில் சனி பகவான் மகர ராசியில்இருந்து கும்பராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

சனி பெயர்ச்சி பலன்கள்-2023

9ல் சனி

மிதுன ராசியின் ஒன்பதாம் இடத்தில் அமரும் சனி ஜாதகருக்கு அதிர்ஷ்ட நிகழ்வுகளை கொடுப்பார். இதுவரை வேலை கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நிச்சயம் நல்ல வேலை அமையும். சிலர் வேலையில் இருந்து சம்பள பற்றாக்குறையால் அவதிப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். அரசியலில் இதுவரையில் ஏதும் ஏற்றம் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு நிச்சயம் ஒரு மாற்றம் வரும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று கூடுவர். வெளிநாடு வேலைவாய்ப்புகள் அமையும். கடல்வழிப் பயணம் கைகூடும். கப்பல், விமானம் போன்ற போக்குவரத்து சார்ந்த கல்வியும் பயிற்சியும் பெறுவீர்கள்.

சனி பெயர்ச்சி பலன்கள்-2023

சனியின் 3-ம் பார்வை பலன்

சனி தனது மூன்றாம் பார்வையால் மிதுன ராசியின் 11ஆம் இடத்தை பார்க்கிறார். பதினோராம் இடம் என்பது லாப ஸ்தானம். அதனை பார்க்கும் சனி லாபத்தின் அளவை குறைக்காவிட்டாலும் தாமதப்படுத்துவார். சொன்ன நேரத்திற்கு பணவரவு வராமல் காலம் கடந்து கிடைக்கும். இதனால் சற்று எரிச்சல் ஏற்படும். பெண்களும், குடும்பத் தலைவிகளும் சமையல் வேலையை சற்றென்று முடிக்க முடியாமல் திணறுவார்கள். அரசியல்வாதிகள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போய்விடும். இந்த சனிப்பெயர்ச்சி லாபநம்பிக்கை கொடுத்து தாமதமும் ஆக்கும். எனவே வருமா வராதா என என்ன சூழல் இருந்து கொண்டே இருக்கும்.

சனியின் 7-ம் பார்வை பலன்

சனி தனது ஏழாம் பார்வையால் மிதுன ராசியின் 3-ம் இடத்தை பார்க்கிறார். மூன்றாம் இடம் என்பது வீர, தீர, தைரிய ஸ்தானம். அதுவும் சிம்ம சூரியனின் வீடு. இந்த சனிப்பெயர்ச்சி சனிபகவான் தனது நேரான ஏழாம் பார்வையால் சிம்மத்தை ஏறிட்டு நோக்குகிறார். அதுவும் அவரது பரம வைரியானா சிம்ம சூரியனை கோபப்படுத்தி விடுவார். இதனால் சற்று மந்தமாகி விடுவீர்கள். அரசு வகையறா ஒப்பந்தம் கிடைக்கும் ஆனால் உங்கள் பெயரை மட்டும் வெளியில் சொல்லி விடாதே எனக் கூறி உங்களை நோகடிப்பார்கள். எழுத்துத் துறையில் உங்கள் எழுத்துக்களை உங்கள் கட்டுரைகளை வேறு பெயரில் வெளியிட்டு விடுவர். நீங்கள் செய்யாத பழி பாவங்களை உங்கள் பெயரில் ஏற்றி விடும். இதுதான் ஒன்பதாமிட அதிர்ஷ்ட சனி தனது எதிரி வீடான சிம்மத்தை மூன்றாம் இடம் ஆக்கிப் பார்க்கும் கோக்குமாக்கான பலன். நீங்கள் எத்தனை கவனமாக இருந்தாலும் சனியின் கோப பார்வையில் இருந்து தப்ப முடியாது. எனவே நாணல் போல் பணிந்து போய் விடுங்கள்.

சனியின் 10-ம் பார்வை பலன்

சனி தனது பத்தாம் பார்வையால் மிதுன ராசியின் ஆறாம் இடத்தை பார்க்கிறார். ஆறாம் இடம் என்பது நோய் கடன் எதிரி ஸ்தானம். சனி பார்க்கும் இடத்தை மட்டுப்படுத்துவார், குறுக்குவார். எனவே இந்த சனிப்பெயர்ச்சி உங்களின் நோய் தாக்கத்தை குறைப்பார். அதுபோல் தொழிலில் உங்கள் பங்குதாரரை நீக்கிவிடுவார். இதனால் உங்களின் வேலைப்பளு கூடும். எனினும் செலவு, விரையும் குறையும். தொழில் சார்ந்த வேலை கிடைக்கும். கடன் வாங்கி வீடு வாங்குவீர்கள். கோவில்களில் உழவாரப்பணி செய்வீர்கள். உங்களில் சிலர் சிறையில் இருந்து விடுதலை ஆகலாம். சிறைச்சாலை, மருத்துவமனை, வட்டிக்கு கடன் கொடுக்கும் அலுவலகம் என இவை போன்ற இடங்களில் வேலை கிடைக்கும். சேவை சார்ந்த வேலையில் சேர்வீர்கள். உங்களில் சிலருக்கு பெரும் பள்ளத்தாக்கு, சுரங்கம், பாதாளம் போன்ற பள்ளமான இடங்களில் தொழில் வேலை சார்ந்து நகரக்கூடும். மிதுன ராசிக்கு 9-ல் அமரும் சனி ஆறாம் வீட்டை பார்ப்பதால் ஜாதகருக்கு எப்படியாவது ஒரு தொழில் வேலையை கொடுத்து விடுவார். இதனால் வட்டி தொல்லை நீங்கி கடன் பிரச்சனை தீர்வதால் உங்களின் சுயமரியாதை காப்பாற்றப்படும் மிகுந்த கௌரவம் கிடைக்கும்.

இந்த சனிப்பெயர்ச்சி மொத்தத்தில் அதிர்ஷ்டத்தையும் ஆன்மீகத்தையும் அள்ளித் தருவதோடு சற்று எதிர்மறை சிந்தனை செயல்களையும் சேர்த்து தரும். சனி பார்வை மூலம் உங்களின் கௌரவத்தை குறைத்தாலும் சார சஞ்சாரம் மூலம் அதனை சரிகட்டி விடுவார். இந்த சனிப்பெயர்ச்சி உங்களின் நோயை நீக்கும். கடன் வட்டியை அழிக்கும்.எதை நினைத்தாலும் மெதுவாக தான் நடக்கும்.

பரிகாரம்

புதன்கிழமை தோறும் சனீஸ்வரரை வணங்கவும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்று. நேரம் கிடைக்கும் போது ஆரணி-ஏரி குப்பம் சனீஸ்வரரை வழிபடலாம். கோவிலில் வேலை செய்யும் அடிமட்ட தொழிலாளர்களுக்கு உதவலாம்.துளசி மற்றும் பூனை பராமரிப்பு நல்லது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!