களத்திர தோஷம்
களத்திரம் என்ற சொல்லானது பெண்ணுக்கு கணவனையும் மனைவியையும் குறிக்கும் சொல்லாகும் களத்திர ஸ்தானம் என்பது லக்னத்திற்கு 7 ஆவது இடத்தை குறிக்கும் இந்த ஏழாவது வீடு பாவ கிரகங்களால் பாதிப்பு அடைந்து இருக்கக்கூடாது.
களத்திர தோஷம் என்றால் என்ன ??
லக்னம் இருக்கும் இடத்திலிருந்து 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் சூரியன் செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தாலோ அல்லது சேர்ந்து இருந்தாலோ இந்த அமைப்பு கொண்ட ஜாதகம் களத்திர தோஷ ஜாதகம் ஆகும்.
நான்காமிடத்தில் சனி ,செவ்வாய், ராகு அல்லது கேது சேர்ந்து இருந்தாலும் இரண்டாம் ஏழாம் இடத்து அதிபதியும் சுக்கிரனும் கூடி பாவ கிரகங்களுடன் சேர்ந்து 6,8, 12-ம் இடத்தில் இருந்தாலும் களத்திர தோஷமாகும்.
சுக்கிரன், சூரியன், சனி அல்லது ராகு கேதுவுடன் கூடி இருந்தாலும் ஏழாமிடம் பாவ கிரகங்களின் வீட்டில் சுக்கிரன் இருந்தாலும் மிகவும் பாதகமான களத்திர தோஷமாகும்.
களத்திர தோஷம் வர காரணம் என்ன??
களத்திர தோஷம் ஏற்பட முன்ஜென்மத்தில் செய்த கர்ம வினைகளை காரணமாகும். முற்பிறவியில் தன்னை நம்பி வந்த வாழ்க்கை துணையை ஏமாற்றிய காரணத்தினால் ஏற்படுவது களத்திர தோஷமாகும்.
களத்திர தோஷம் என்ன செய்யும்??
களத்திர தோஷ ஜாதகம் அமைப்பு உடையவர்களுக்கு திருமணம் மிகவும் தாமத மாக நடைபெறும் அல்லது திருமணம் நடக்காமல் போகும் அதிக வாய்ப்பு உள்ளது அப்படியே திருமணம் நடந்தாலும் திருமண வாழ்வில் அதிக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
திருமண வாழ்வில் அதிக போராட்டங்கள் ஏற்படும் தம்பதியர்களிடையே மண முறிவை ஏற்படுத்தும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகும் தன்மை இருக்காது.
களத்திர தோஷம் நீங்க பரிகாரம்
களத்திர தோஷம் உள்ள ஜாதகங்கள் அதே ஜாதக அமைப்புள்ள ஜாதகர் திருமணம் செய்து கொண்டால் திருமண வாழ்வு சிறப்பாக அமையும்.
இந்த தோஷம் உள்ளவர்கள் அடிக்கடி குலதெய்வ கோவிலுக்கு சென்று முறைப்படி வழிபாடு செய்ய வேண்டும்
களத்திர தோஷம் பெற்று திருமணம் ஆகாமல் தவிப்பவர்களுக்கும் சுக்கிர ஸ்தலமான ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் சேர்த்தி சேவையை தரிசித்தால் களத்திர தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
வீட்டில் சுமங்கலி பூஜை செய்வது நற்பலன்களை கொடுக்கும்