Homeஅம்மன் ஆலயங்கள்தேவகோட்டை அம்மன்

தேவகோட்டை அம்மன்

தேவகோட்டை அம்மன்

வரலாறு :

சிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை என்ற ஊரில் அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. கோட்டை என்றால் அரண்மனை என்று பொருள். கோட்டையில் வாழ்பவர்கள் கூட நம் வாழ்வில் உயர்வதற்கும் கோட்டை அம்மனை வழிபட வேண்டும்.

சிறப்பு :

குறிப்பாக பணியில் உயர் பதவி கிடைக்க அரசியல் ஆட்சியில் முன்னேற, கோட்டை அம்மன் உதவுவாள். இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள்.நாம் வேண்டுதலுடன் தொடர்புடைய பொருட்களை வெள்ளியில் செய்த வடிவமாக கோவிலில் வைத்தால் நம் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். உதாரணத்திற்கு குழந்தை வரம் வேண்டுபவர்கள் குழந்தை வடிவத்தை வைப்பர். வீடு வாங்க விரும்புவோர் வீட்டின் வடிவத்தை வைப்பர். இவ்வுருவங்கள் இக்கோவிலின் வாசலிலேயே கிடைக்கும்.

தேவகோட்டை அம்மன்
தேவகோட்டை அம்மன்

உடல் நல குறைவு ஏற்பட்டால் குணமடைய வேண்டிய உடல் உறுப்பு பகுதிகளின் உருவத்தை வைக்கலாம். இவ்வாலயத்தில் நடைபெறும் திருவிழாவின்போது பக்தர்கள் அச்சமயத்தில் உருவாக்கப்படும் சிலை. தன் கண்களை ஒரு வாரத்தில் பிறக்கும் என்பது ஐதீகம். கோட்டை அம்மனை இச்சமயத்தில் வழிபடுவது அதிஷ்டம். இத்தருணத்தில் நாம் செய்யும் வேண்டுதலின் வலிமை அதிகம் என்றும் கூறுவர். கோட்டை அம்மன் தேவகோட்டையின் காவல் தெய்வம் ஆகும்.

பரிகாரம் :

ஆடி மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க்கிழமை, கோட்டை அம்மனுக்கு மிகவும் விசேஷமாகும். எனவே இந்த நாளில் கோட்டை அம்மனை நாம் வழிபட்டால் சகல நன்மைகளும் உண்டாகும் என்பது ஐதீகம். 

Google Map :

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!