Homeஅடிப்படை ஜோதிடம்கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள் மற்றும் கிரகங்கள் நின்ற ...

கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள் மற்றும் கிரகங்கள் நின்ற  பலன்கள்

கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களின் குண நலன்கள்  மற்றும் கிரகங்கள் நின்ற  பலன்கள்

  • இவன் சிறிதும் பொய் பேசான்
  • சிவந்த கண்ணும் குறைந்த மயிர் கற்றையும்  உடையவன்
  • பெரிய அறிவாளி
  • தன்னை அடைந்தவர்களுடன்  அன்பாக இருப்பவன்
  • தன்னுடைய பிள்ளைகள் மனைவியை சிறிதும் பொருட்படுத்தமாட்டான்
  • சிறந்த புகழ் உள்ளவன்
  • தோற்றத்தில் இளையவன்
  • தேக பொலிவுள்ளவன்
  • குரு கிரகத்தின் குணங்கள் பொருந்தி இருக்கும்
  • தயவு உள்ளவன்
  • சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் உண்டு
  • இவன் தலையில் ஏதாவது ஒரு வடு  இருக்கும் அல்லது முகத்தில் இருக்கும்
  • கோபம் வந்தால் முகம் சிவந்து விடும்
  • கோபம் இவனுடைய பிறவிக்குணம்
  • இவனை எளிதில் கோபமூட்ட  முடியும்.
  • கடுமையான பேச்சு உள்ளவன்.
  • நிறைய பணம் சம்பாதிப்பவன்.
  • எதிலும் வெற்றி பெறுவான்.
  • செல்வாக்கு உள்ளவன்
  • அதிக ரத்த அழுத்தம் தூக்கமின்மை போன்ற நோய்கள் உண்டு.
  • அரசியல் செல்வாக்கும் இவனுக்கு இருக்கும் பெரும்

கிருத்திகை நட்சத்திரம்

காலசக்கர தசை
மேஷ செவ்வாய் தசை 7 வருடம்
ரிஷப சுக்கிர தசை 16 வருடம்
தனுசு குரு திசை 10 வருடம்
கடக சந்திரன் திசை 21 வருடம்
சிம்ம சூரியன் திசை 5 வருடம்
கன்னி புதன்  திசை 9 வருடம்
விருச்சிக செவ்வாய் திசை- 7வருடம்
மிதுன புதன் திசை 9 வருடம்
துலாம் சுக்கிர தசை 16 வருடம்
ஆகப் பரம ஆயுள 100 வருடம்

 

கிருத்திகை முதல் பாதத்தில் மற்ற கோள்கள் நின்ற பலன்:

சூரியன் நின்றால் :

  • சூரியன் நின்று சுபக்கிரகங்களின் சம்பந்தம் பெற்றால் நிறைய குழந்தைகள் இருக்கும்.
  • ஏழையாக இருப்பான்.
  • ஜோதிடத்திலும் அதை சார்ந்த கலைகளிலும் ஞானம் உண்டு
  • இவனுக்கு பார்வைக்கோளாறு உண்டு.
  • அதிகம் சாப்பிடுபவன்.
  • இவனுக்கு தீ விபத்து ஏற்படலாம்.
  • படைத்துறை அல்லது பாதுகாப்புத் துறையில் உத்தியோகத்தில் இருப்பான்.

சந்திரன் நின்றால்:

  • இவனுக்கு மந்திர சித்தி ஏற்படும்.
  • இதில் பிறந்த ஆண்கள் பெண்கள் மூலமாகவும் ,பெண்கள் ஆண்கள் மூலமாகவும் தொல்லைபடுவார்கள்.

செவ்வாய் நின்றால்:

  • கம்பீரமான தோற்றம் உண்டு.
  • வாதாடும் திறமை உள்ளவன் அதனால் சிறந்த வழக்கறிஞராகக்கூடும்.
  • படை, காவல் மற்றும் அரசுத் துறைகளில் வேலை கிடைக்கலாம்.
  • இப்பாத கடைசி பாகையில் செவ்வாய் நின்றால் எப்படியும் மேல் நிலையை அடைய பாடுபடுவான்.
  • பிறர் மனைவிகளுடன் இச்சை இருக்கும்.
  • நச்சு உணவு ஏற்படலாம்.
  • வெடிமருந்து தீப்பெட்டிகள் முதலியவற்றால் சம்பாதிக்கக் கூடும்
  • அதிக ஜுரம் மூளை நாளை வெடிப்பு தலையில் அல்லது முகத்தில் அடி இவைகள் ஏற்படலாம்.

புதன் நின்றால் :

  • அரசு வேலைகளில் இருப்பான்
  • வியாபாரத்தில் ஈடுபட்டால் பெருத்த லாபம் உண்டு
  • அரசு உதவிகள் கிடைக்கும்
  • பொதுமக்கள் ஆதரவு அதிகம் உண்டு
  • மத்தியமான ஆயுள் உண்டு
  • நடிகன் சங்கீதக்காரன் எழுத்தாளன் ஆகிய பணிகளில் சம்பாதிப்பான்
  • ஒல்லியான சரீரம் உள்ளவன்
  • மதுவையும் மங்கையும் அதிகம் விரும்புவான்
  • சூரியன் சேர்ந்தால் நல்ல மருத்துவன் அறுவை சிகிச்சையில்  வல்லவனாக இருப்பான்.

குரு நின்றால்: 

  • அதிக அறிவுப்பசி உள்ளவன்.
  • ஆகம பூஜா விதிகள் தெரிந்த உயர்தர கோயில் அர்ச்சகராகவும்  இருப்பான்.
  • அறிவின் தனித்தகுதிகளால் (ஜோதிடம் முதலியவை ) நிறைய பணம் சம்பாதிப்பான்.
  • பிதுரார்ஜித சொத்து உண்டு.
  • குழந்தைகள் மூலம் வருவாய் உண்டு.
  • அதிக பயணங்கள் செய்வான்.
  • பேரும் புகழும் உண்டாகும்.
  • தெளிவான சிந்தனை உண்டு.
  • மது மங்கை இவற்றில் ஈடுபாடு உண்டு.
  • வரலாறு இலக்கியம் முதலியவற்றில் வல்லவன்.

சுக்கிரன் நின்றால் :

  • இந்த ஆணின் உடல்வாகு பெண்ணின் நளினத்தையும், இதில் பிறந்த பெண் ஆணின் உடல்வாகு உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
  • இவர்களுக்கு மாலைக்கண் ஏற்படலாம்
  • மணவாழ்க்கை ஒற்றுமையாக இராது
  • கடற்படை உத்தியோகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பான்
  • சூரியன் பார்த்தால் இளமையில் திருமணம் உண்டு.
  • வழக்கு வியாச்சியங்களால்  சொத்துக்கள் சேரும்.
  • இதில் பிறந்த பெண்கள் விஷயத்தில் இந்த சுக்கிரனை சந்திரன் பார்த்தால் அதிக குழந்தைகள் பிறக்கும்.
  • புதன் பார்த்தால் உடன்பிறப்புடன்  மனஸ்தாபம் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரம்

சனி நின்றால் :

  • நீடித்த ஆயுள் உண்டு ஆனால் இவன் சோம்பேறி.
  • தகப்பன் உடன் சண்டை போடுவான்.
  • இளமையில் துன்பமும் போகப்போக வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
  • பொதுவாக  கருப்புநிறம் உள்ளவன்.
  • ஒல்லியான பலவீனமான தேகம் உள்ளவன்.
  • மஞ்சள்காமாலை நோய் வரலாம்
  • முன்கோபி
  • ஆசை உள்ளவன்.
  • பொறாமை உள்ளவன்.
  • இரக்கமற்றவன்.
  • பல்லில் ரோகம் உள்ளவன் ஜீரணக்கோளாறுகள் உண்டு.

ராகு நின்றால்:

  • மணவாழ்க்கை மட்டுமல்லாமல் வெளி பெண்களுடன் தொடர்பு கொள்வான்.
  • காம இச்சை அதிகம் உள்ளவன். ஆனால் நல்ல ஆரோக்கியம் உண்டு.
  • முகத்தில் எங்காவது கருப்பு மச்சம் உண்டு.
  • புத்திசாலி நல்ல உடல் வாகு உள்ளவன்.
  • தந்தை மேல் அதிக பாசம் உண்டு.
  • தொழிலில் அதிகம் சம்பாதிப்பான்.

கேது நின்றால்:

  • தொழிலில் அடிக்கடி தொல்லைகள் சிக்கல்கள் உண்டு
  • முயற்சிகளில்  ஏமாற்றங்களை சந்திப்பான்.
  • இதய நோய்கள் ஏற்படலாம்.
  • ரசாயன உலோகங்கள் ஆய்வு செய்யும் பொறியாளராகவும் இருப்பான்.
  • கேது சுப கிரகங்களால் பார்க்கபடாவிட்டால்  வயது ஏறக்குறைய 50 வரை தான் நீடிக்கும்.
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!