Homeஆன்மிக தகவல்எடுக்கின்ற வேலைகள் இனிதே முடிய பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம்

எடுக்கின்ற வேலைகள் இனிதே முடிய பாராயணம் செய்ய வேண்டிய திருப்பதிகம்

திருப்பதிகம்

பண் – பழம்பஞ்சரம்-திருஞானசம்பந்தர்

தலம்: திருவாலவாய் (மதுரை)

வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி அமணொடு தேரரை வாதில்வென்றழிக் கத்திருவுள்ளமே பாதி மாதுடனாய பரமனே ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும் எம் ஆதியே

வைதிகத்தின் வழியொழு காதவக் கைத வம்முடைக் காரமண் தேரரை எய்தி வாதுசெ யத்திருவுள்ளமே மைதி கழ்திரு மாமணி கண்டனே ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும் எம் ஆதியே

மறைவ ழக்கமி லாதமா பாவிகள் பறித லைக்கையர் பாயுடுப் பார்களை முறிய வாதுசெ யத்திருவுள்ளமே மறியு லாங்கையில் மாமழு வாளனே ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும் எம் ஆதியே

அறத்த அங்கம் ஆறு ஆயின நீரமையைக் கறுத்த வாழ் அமண் கையர்கள் தம்மொடும் செறுத்து வாதுசெயத்திரு வுள்ளமே முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும் எம் ஆதியே

அந்தணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச் சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே வெந்த நீற தணியும் விகிர்தனே. ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும் எம் ஆதியே

வேட்டு வேள்வி செயும் பொரு ளைவிளி மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை

ஒட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே காட்டிலானை உரித்தஎங் கள்வனே ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும் எம் ஆதியே

அழலது ஒம்பும் அருமறையோர் திறம் விழல தென்னு மருகர் திறத்திறம் கழல வாது செயத்திரு வுள்ளமே தழலி லங்க திருவுருச் சைவனே ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும் எம் ஆதியே

நீற்று மேனிய ராயினர் மேலுற்ற காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத் தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே ஆற்ற வாள ரக்கற்கும் அருளினாய் ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும் எம் ஆதியே

நீலமேனி அமணர் திறத்துநின் சீலம் வாதுசெயத் திருவுள்ளமே மாலும் நான்முகனுங் காண்பரியதோர் கோல மேனிய தாகிய குன்றமே

ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும் எம் ஆதியே

அன்று முப்புரம் செற்ற அழகநின் துன்று பொற்கழல் பேணா அருகரைத் தென்ற வாது செயத் திருவுள்ளமே கன்று சாக்கியர் காணாத் தலைவனே ஞாலம் நின் புகழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும் எம் ஆதியே

கூடல் ஆலவாய்க் கோனை விடை கொண்டு வாடல்மேனி அமணரை வாட்டிட மாடக் காழிச்சம் பந்தன் மதித்த இப் பாடல் வல்லவர் பாக்கிய வாளரே.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!