லக்னம் நின்ற நட்சத்திர பலன்கள்- ரோகினி-அஸ்தம்-திருவோணம்-புனர்பூசம்-விசாகம்-பூரட்டாதி-ஆயில்யம்-கேட்டை-ரேவதி

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

லக்னம் நின்ற நட்சத்திர பலன்கள்

ரோகினி-அஸ்தம்-திருவோணம்-புனர்பூசம்-விசாகம்-பூரட்டாதி-ஆயில்யம்-கேட்டை-ரேவதி

 சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி ,ஹஸ்தம், திருவோணத்தில் லக்னம் நின்று வளர்பிறைச் சந்திரனாக இருந்தால் 
  • நல்ல எண்ணம் நற்சிந்தனை தெளிவாக சிந்திக்க கூடிய ஆற்றல் மிக்கவராக இருப்பார்.
  •  கள்ளம் கபடமின்றி பழகக்கூடியவர் 
  • பிறர் விரும்பும், போற்றும் குணம், பிறர் பார்த்து வியக்கும் தனித்துவமான வாழ்க்கை அடைவார் 
  • சுப ஆதிபத்தியம் மிக்க குரு, சுக்கிரன், புதன் பார்வை பெற்றால் குணத்தாலும் பண்பாலும் பெரும் பதவியும் அடைவார் 
  • கோடீஸ்வரராக பிறக்கவும் ,கோடீஸ்வரராக வாழும் யோகம் உண்டாகும்
  •  நல்ல தசா புத்திகள் வந்தால் ஏழையாக பிறந்து இருந்தாலும் மக்களால் போற்றப்பட்டு அழியா புகழ்  பெறுவார் 
  • தேய்பிறை சந்திரன் ஆகி சூரியன் ,செவ்வாய் ,சனி, ராகு, கேது வலுத்து கூட்டு பாவ கிரக பார்வை பெற்றால் தாழ்ந்த நிலையை அடைந்து பரம்பரை புகழையும் இழப்பார்
  •  குரூரமானவராக  இருப்பார் 
  • பிறரைக் கெடுக்கும் எண்ணம்  , பிறரை ஏமாற்றி பிழைக்கும் குணக்கேடு ஏற்படும் 
  • சந்திரன் கெட்டு மோசமான தசையாக வந்தால், நல்ல பணக்காரராக பெரிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நாளுக்கு நாள் தேய்ந்து தேய்ந்து வாழ்க்கையே வெறுத்துப் போகும் அளவு கஷ்டம் ஏற்படும்
  • அஷ்டம  ஏழரைச்சனியும் வந்தால் தற்கொலை எண்ணம் விபத்து ஏற்படும்
 
 
குருவின் புனர்பூசம், விசாகம், பூரட்டாதி  ஆகிய நட்சத்த்திரங்களில் லக்கினம் நின்றால்
 
  • பிறருக்கு நல்ல ஆலோசனை வழங்கும் அறிவுத் திறன் மிக்கவராகவும், பிறரின் நிலையறிந்து பேசுபவராகவும் ,ஏமாற்றாமலும் , பிறரிடம் ஏமாறாமலும்  வாழ்வார்.
  •  கடக லக்கினம் புனர்பூசம் நட்சத்திரத்தில் நின்றால் பூரண குருபலன் பெற்றவராக, யாரிடம் எப்போது எப்படி பேச வேண்டும், எப்படி நடக்க வேண்டும் என்பதை அறிந்தவர் 
  • எதிரியை நேருக்கு நேராக சந்தித்து லாவகமாக, லாபகரமான காரிய வெற்றியை எதிரியால்  பெறுவார்.
  •  சுக்கிரன் பார்வை இருந்தால் சிரிக்க சிரிக்கப் பேசி மயக்கி காரியம் சாதிக்க கூடியவர்  
  • ஆபத்துக்களை உணர்ந்து அதற்கேற்ப வார்த்தை ஜாலம் செய்யக்கூடியவர்
  •  வளர்பிறைச் சந்திரன் பார்வை இருந்தால் சாதாரண மனிதனையும் பிறர் போற்றும் அளவு உயர்த்தி பெரும் புகழைத் தரும் 
  • புதன் பார்வை இருந்தால் பல்கலை வித்தகர், சாதுர்யமான பேச்சு, எதிரியும் விரும்பும் திறன் படைத்தவராக அழியா புகழ் பெறுவார் 
  • சுபகிரக கூட்டு பார்வை இருந்தால் நல்ல தசா புத்திகளில் உலகம் வியக்கும் சாதனையாளராவார் .
  • பாவ கிரக பார்வை, சுபகிரக வலு  குறைந்த நிலையில் இருந்தால் திறமையிருந்தும் புகழ் பெற முடியாமலும், முன்னேற வேண்டிய நேரத்தில் தாங்க முடியாத இழப்பு களாலும், தகுதிக்கேற்ற வாழ்க்கை வாழ முடியாமல் ஏக்கத்துடனும் வாழ நேரும் .
  • நினைத்து, நினைத்து வருத்தப்படும் காலம் ஏற்பட்டு ,வாழ்ந்து கெட்டவர் எனும் நிலை வரும்

 

 புதனின் ஆயில்யம், கேட்டை, ரேவதிஆகிய நட்சதிரங்களில்  லக்னம் இருந்தால் 

  • அனைத்து துறைகளிலும் அனுபவம் அறிவு நிரம்பிய நூலகமாக திகழ்வார்
  •  குருவின் பார்வை இருந்தால் நுணுக்கமான ஆராய்ச்சி கொண்டவராகவும், அறிவியல் அறிஞராகவும் இருப்பார்
  •  பொறுமை ,சுறுசுறுப்பு, கற்பனைவளம் கொண்டு , பிறர் மன ஆழத்தை கண்டறிந்து செயல்படுவர்.
  •  பிரபஞ்ச சக்தியை ஆராய்வார் 
  • வான் மண்டல ஜோதிட ஞானத்தையும் பெறுவார் 
  • சுக்கிரன் பார்வையால் கலைஞானம் கொண்ட பிறவி கலைஞராக இருப்பார் 
  • இயல், இசை, நாடக திறமை உண்டு 
  • சிறந்த ஜோதிடர் 
  • பலமாக இருந்தால் முக்காலத்தையும் சொல்லும் சித்தராவார் 
  • வளர்பிறை சந்திரன் பார்வை கலைஞானி ஆக்கும் 
  • மக்களை அண்ணாந்து பார்த்து ரசிக்க வைப்பார் 
  • பார் போற்றும் புகழ் அடைவார் 
  • யாரும் அறியாத யாரும் யோசிக்காத மர்மங்களை கண்டறிந்து உலகிற்கு சொல்வார் 
  • தத்துவஞானி 
  • பாவ கிரக பார்வை பாதிப்பு ஏற்பட்டிருந்தால் எல்லாத்துறைகளிலும் அரைகுறையாக இருந்து முன்னேற முடியாமல், புகழ் பெறவும்  இயலாமல் தற்பெருமை பேசித் திரிவார் 
  • மதிப்பு ,மரியாதை இல்லாமல் இருப்பதையும் தொலைத்து மனம் வாடுவார் ,
  • எதிர்மறையான எண்ணங்களை தூண்டுவார் 
  • வாழ்க்கையை வெறுப்பவர்களை மேலும் தூண்டிவிட்டு நோகடிப்பார் …

 

லக்னம் நின்ற நட்சத்திர பலன்கள்

Leave a Comment

error: Content is protected !!