ரிஷப லக்னத்தில் பிறந்தவர்களுக்கு நடைபெறும் மகாதசையும் அதற்கான பரிகாரங்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

ரிஷப லக்னம்

ரிஷப லக்னம்

சூரிய திசை நடக்கும் போது ஏற்படும் பலன்கள்

ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிர பகவானுக்கு சூரியன் பகை என்ற போதிலும் அவர் சூரியன் பெற்ற அதியப்பத்தின் அடிப்படையில் செய்யும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு:

மனதிற்கு பிடித்த வகையில் சொந்த வீடுகள் அமையும்.புதிய வாகன சேர்க்கை உண்டாகும்.தாய் வழி சொத்துக்கள் தொடர்பான செயல்பாடுகளில் லாபம் உண்டாகும்.மாணவர்களுக்கு கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்பட்டு விலகும்.பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும்.மனதில் புதிய சிந்தனைகள் உண்டாகும்.விவசாயம் தொடர்பான காரியங்களில் எதிர்பார்த்த லாபம் காலதாமதமாககிடைக்கும்.

ஆன்மிக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சிறு தடைகளுக்கு பின்பே எண்ணிய வெற்றி கிடைக்கும்.

செய்ய வேண்டிய பரிகாரம்:

அவரவர் ஜாதகத்தில் சூரியன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் ஞாயிற்றுக்கிழமைதோறும், சூரிய ஓரையில் சிவபெருமானை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

சந்திர திசை நடக்கும் போது ஏற்படும் பலன்கள்

ரிஷப லக்னத்திற்கு அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிர பகவானுடன் சந்திரன் பகை என்ற உறவில் இருந்தாலும் அவர் அந்த ராசியில் உச்சம் அடைந்து நடத்தும் திசையினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு:

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.மனதில் புதிய சிந்தனைகள் தோன்றி மறையும்.தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகள் மேம்படும்.சகோதரர்களால் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும்.

சிறு தூரப் பயணங்களால் மாற்றமான சூழல் ஏற்படும்.மனதிற்குப் பிடித்த ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.கலைஞர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.திட்டமிட்ட பணிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.காது தொடர்பான சில பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும்.

செய்ய வேண்டிய பரிகாரம்:

அவரவர் ஜாதகத்தில் சந்திரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் திங்கட்கிழமைதோறும்,சந்திர ஓரையில் சாந்த சொரூபமாக உள்ள பார்வதிதேவியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சீப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

செவ்வாய் திசை நடக்கும் போது ஏற்படும் பலன்கள்

ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிர பகவானுடன் செவ்வாய் சமம் என்ற நிலையில் இருந்து திசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்களை பற்றி காண்போம்.

வாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும்.கால்நடைகளிடம் சற்று கவனம் வேண்டும்.வசதி வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும்.ஆன்மிக எண்ணங்களால் முன்னேற்றம் உண்டாகும்.வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் சாதகமாகும்.வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.

உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.மற்றவர்களுக்கு உதவும்போது சற்று சிந்தித்து செயல்படவும்.சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கான சூழல் உண்டாகும்.வெளிநாடுகள் தொடர்பான பயணங்கள் மேற்கொள்வதற்கான சூழல் உண்டாகும்.

செய்ய வேண்டிய பரிகாரம்:

அவரவர் ஜாதகத்தில் செவ்வாய் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் செவ்வாய்க்கிழமைதோறும், செவ்வாய் ஓரையில் முருகனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

புதன் திசை நடக்கும் போது ஏற்படும் பலன்கள்

ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிர பகவானுடன், புதன் நட்பு என்ற நிலையில் இருந்து திசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு:

வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும்.உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும்.வெளிநாடு தொடர்பான பணி வாய்ப்புகளில் இருந்துவந்த தடைகள் அகலும்.குடும்பத்தில் பெரியோர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.குடும்ப பொருளாதாரம் மேம்படும்.

உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.எதிர்காலம் தொடர்பான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள்.வாக்கு சாதுர்யத்தால் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள்.புத்திரர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள்.புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் ஆதரவுகள் கிடைக்கும்.

செய்ய வேண்டிய பரிகாரம்:

அவரவர் ஜாதகத்தில் புதன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் புதன்கிழமைதோறும், புதன் ஓரையில் பெருமாளை துளசி மாலையை கொண்டு வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

குரு திசை நடக்கும் போது ஏற்படும் பலன்கள்

ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிர பகவானுடன், குருபகவான் பகை என்ற நிலையில் இருந்து திசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு:

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் சாதகமாகும்.வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும்.சுரங்கம் தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும்.

செய்யும் செயல்களில் கவனம் வேண்டும்.நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.நினைவாற்றலில் சிறிது மந்தத்தன்மை உண்டாகும்.புதிய முதலீடுகளில் பெரியோர்களின் ஆலோசனைகள் கிடைக்கும்.சுபச் செயல்கள் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.

செய்ய வேண்டிய பரிகாரம்:

அவரவர் ஜாதகத்தில் குரு பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் வியாழக்கிழமைதோறும், குரு ஓரையில் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை படைத்து வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

சுக்கிர திசை நடக்கும் போது ஏற்படும் பலன்கள்

ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிர பகவான் ஆட்சி என்ற நிலையில் இருந்து திசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு:

எதிர்பார்த்த காரியம் சில தடைகளுக்கு பின் நிறைவேறும்.வியாபாரம் தொடர்பான பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை அளிக்கும்.மனதில் தோன்றும் சிந்தனைகளால் மனக்குழப்பங்கள் உண்டாகலாம்.

உடல் ஆரோக்கியம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் தேவை.புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது.எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாக அமையும்.போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.உத்தியோகம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

செய்ய வேண்டிய பரிகாரம்:

அவரவர் ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் வெள்ளிக்கிழமைதோறும், சுக்கிர ஓரையில் மாகலட்சுமியை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

சனி திசை நடக்கும் போது ஏற்படும் பலன்கள்

ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிர பகவானுடன், சனிபகவான் நட்பு என்ற நிலையில் இருந்து திசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு:

குடும்பத்தில் பெரியோர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.வாழ்க்கை பற்றிய அனுபவ அறிவு மேம்படும்.பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.உயர்கல்வி சார்ந்த எண்ணங்கள் மற்றும் முயற்சிகள் ஈடேறும்.நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைப்பதற்கான சூழல் ஏற்படும்.

வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும், ஆதாயமும் உண்டாகும்.சுரங்கம் தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும்.வெளிவட்டாரங்களில் மதிப்பும், மரியாதையும் உயரும்.உத்தியோகத்தில் பதவி உயர்விற்கான எண்ணங்கள் ஈடேறும்.சுயதொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும்.

செய்ய வேண்டிய பரிகாரம்:

அவரவர் ஜாதகத்தில் சனி பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் சனிக்கிழமைதோறும், சனி ஓரையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி ஆஞ்சநேயரை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

ராகு திசை நடக்கும் போது ஏற்படும் பலன்கள்

ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்கிரபகவான் ஆவார். சுக்கிர பகவானுடன், ராகுபகவான் நட்பு என்றாலும் நீசம் என்ற நிலையில் இருந்து திசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு:

சுப காரியம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும்.தொழிலில் புதிய மாற்றங்கள் உண்டாகும்.கொடுக்கல் -வாங்கலில் சிந்தித்து செயல்படவும்.உலக வாழ்க்கை பற்றிய புரிதல் உண்டாகும்.பழைய நண்பர்களின் சந்திப்பு உண்டாகும்.மனை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.

புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த செயல்கள் காலதாமதமாக நடைபெறும்.உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு விலகும்.திட்டமிட்ட காரியங்கள் சில தடைகளுக்கு பின் நிறைவேறும் .குடும்ப உறுப்பினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம்.

செய்ய வேண்டிய பரிகாரம்:

அவரவர் ஜாதகத்தில் ராகு பலம் குறைவாக இருக்கும் பட்சத்தில் வெள்ளிக்கிழமைதோறும், ராகு ஓரையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி துர்க்கை அம்மனை வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

கேது திசை நடக்கும் போது ஏற்படும் பலன்கள்

ரிஷப லக்னத்தின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார். சுக்கிர பகவானுடன், கேதுபகவான் நட்பு என்றாலும், நீசம் என்ற நிலையில் இருந்து திசை நடத்தினால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு:

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.மனதில் தேவையற்ற சிந்தனைகள் தோன்றி மறையும்.எதிர்பாலின மக்களின் மீது ஈர்ப்பு உண்டாகும்.சுறுசுறுப்பின்மையினால் காலதாமதம் ஏற்படும்.வழக்கு தொடர்பான செயல்களில் வெற்றிக்கான சூழல் உண்டாகும்.பங்காளிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

நெருக்கமானவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும்.ஆன்மிகம் தொடர்பான பணிகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.புதிய முதலீடுகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.

செய்ய வேண்டிய பரிகாரம்:

கேது திசை நடப்பவர்கள் அரச மரத்தடியில் இருக்கும் விநாயகப்பெருமானை அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டு வர மேன்மை உண்டாகும்.

மேலும், ஜென்ம ஜாதகத்தில் சுபர்கள் மற்றும் அசுபர்களின் பார்வை இருக்கும் பட்சத்தில் சுப மற்றும் அசுப பலன்கள் மாறுபட்டு நடைபெறும்.

Leave a Comment

error: Content is protected !!