விருச்சிகம் – கவனம்
(விசாகம் 4,அனுஷம்,கேட்டை )
செவ்வாய் பகவானின் அருள் பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே !!!இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து இருந்த சனிபகவான் இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வந்து அமர்வதால் வேலையில் அலைச்சல் இருக்கும். பொறுமையாக செயல்படுவது நல்லது. எதையும் யோசித்து செய்வது அவசியமாகும்.
சனி 4-ல் ஆட்சி பெற்று அமர்வதால் கடன் வாங்கி வீடு கட்டுவீர்கள்.அதிக அளவில் சுப விரயங்கள் செய்வீர்கள். சிலர் சொந்த ஊரை விட்டு செல்ல நேரும்.கடந்த மூன்று ஆண்டுகளாக பல விஷயங்களை சமாளித்து சாதனை படைத்து இருப்பீர்கள். ஆனால் தற்பொழுது அர்த்தாஷ்டம சனியாக வருவதால் சின்ன சின்ன வேலைகளை கூட அலைந்து தான் முடிக்க வேண்டி வரும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கிக் கொள்வீர்கள். எந்த விஷயத்திலும் கூட்டு வேண்டாம். மற்றவர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.
வீடு வாங்குவது, கட்டுவது கொஞ்சம் இழுபறியாக முடியும். அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. சொத்து வாங்கினால் தாய் பத்திரத்தை சரிபார்த்து வாங்கவும். சமயத்தில் வில்லங்கம் வந்து சேரும். வண்டி, வாகனம் மூலம் அடிக்கடி தேவையில்லாத செலவுகள் வரலாம். இரவு நேர பயணங்களில் கவனம் தேவை. வழக்கில் தீர்ப்ப தாமதமாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த விசா கிடைத்து அயல் நாட்டு பயணம் சாதகமாக அமையும்.
குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். தாயார் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மீடியாவில் வேலை பார்ப்பவர்களுக்கு அதிர்ஷ்டமான காலகட்டம் இது. வீடு ,வண்டி, வாகன மாற்றம் உண்டாகும். சிலருக்கு பதவி உயர்வுடன் வேலை மாற்றம் உண்டாகும். அரசு அனுகூலம் உண்டாகும். சிறு தொழில் செய்வோருக்கு நல்ல லாபம் வரும். புதிய நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.
இல்லத்தரசிகளை பொறுத்தவரை வீட்டில் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலர் தங்க நகைகள், விலை உயர்ந்த செல்போன் வாங்குவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களை பொறுத்தவரை வொர்க் பிரஷர் அதிகரிக்கும். சக ஊழியர்களால் பனிச்சுமை அதிகரிக்கும். கன்னிப் பெண்களைப் பொறுத்தவரை உயர்கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவீ-ர்கள். கல்யாணம் தடைப்பட்டு முடியும்.
மாணவ மாணவிகளுக்கு சவாலான காலகட்டம் இது. அதனால் விளையாட்டை குறைத்து படிப்பில் அக்கறை செலுத்துங்கள். அலட்சியப் போக்குடன் கடைசி நேரத்தில் படிக்கும் பழக்கத்தை தவிர்ப்பது நல்லது.
இதையும் கொஞ்சம் படிங்க : அற்புத யோகம் தரும் அஷ்டமசனி
தொழில்புரிவோர் வட்டிக்கு கடன் வாங்கி கூட்டுத் தொழில் விருத்தி செய்ய வேண்டாம். எலக்ட்ரானிக்கல்ஸ், கம்ப்யூட்டர், நாட்டு மருந்து, மூலிகை வஸ்து, பழைய பேப்பர் கடை, கறிக்கடை, காலனி கடை சிறு தொழில் புரிவோருக்கெல்லாம் நல்ல காலகட்டம் இது.
அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் பணியில் கூடுதல் கவனம் செலுத்தவும். சிலருக்கு வேலையில் நெருக்கடி இருந்தாலும், பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். கணினி துறையினருக்கு புதிய சலுகைகள் கிடைக்கும்.
சனிபகவான் பார்வை பலன்கள்
சனி பகவான் உங்கள் ராசி மற்றும் ராசிக்கு6,10ம் இடங்களை பார்வை செய்வதால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் அவ்வப்போது சோர்வு களைப்பு வந்து நீங்கும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டை பார்ப்பதால் எதிரிகள் அனைவரும் உங்களை விட்டு விலகுவார்கள். கோர்ட் கேஸ் பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும். புதிய பொறுப்புகளை உங்களை நம்பி தருவார்கள்.
பலன் தரும் பரிகாரம்
சனிக்கிழமை சனி ஓரைகள் திருக்கொள்ளிக்காடு சனி ஸ்தலம் சென்று 8 நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.சனியால் ஏற்படும் தோஷம் நிவர்த்தி ஆகும்.