பஞ்சாக்ஷர கணபதி உபாஸன மந்திரம்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

பஞ்சாக்ஷர கணபதி உபாஸன மந்திரம்

கணபதி துணை :

ஷிப்ரப் பிரசாதி பகவான் கணநாயகனே
விக்கினங்கள் தீர்த்து விளையாடுக சர்வநா
ஸ்ர்வத்ரகாருணி சரஸ்வதி தேவி வந்நென்
நாவில்வாஷிக்க குணதோஷி நிலாவு போலே
 
பூஜை விதி: 
 
ஸ்னானம் செய்து பட்டு வஸ்திரம் கட்டி விபூதி தரித்து, அனுஷ்டான முடித்து சுத்தமான இடத்திலிருந்து பக்தி சிரத்தையுடன் மேற்கண்ட சக்கரத்தை தங்கம் அல்லது தாமிரத் தகட்டில் வரைந்து அக்ஷரங்களைஅடைத்து பால், தேன், இளநீர் அபிஷேகம் செய்து ஓர் வில்வ பலகை ஆசனத்தில் வைத்து விபூதி, சந்தனம், பன்னீர், புனுகுகளை சாத்துப்படி செய்து வாசனையுள்ள புஷ்பம் சாத்தி, வாழை இலை விரித்து வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழம், சுண்டல், வடை, மோதகம், பொங்கல், பாயசம் வைத்து சாம்பிராணி வத்தி வைத்து தூப தீபம் கொடுத்து சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அதற்கு முன் மான்தோல் ஆசனத்தில் வடக்கு முகமாய் இருந்து மன ஒருமையுடன் சுத்தம் ஆசாரத்துடன் ருத்ராட்ச ஜெபமணி கொண்டு ஒரு மண்டலம் வரை மூலமந்திரம் லட்சம் உருசெபிக்க சித்தியாகும்.
 
பஞ்சாக்ஷர கணபதி உபாஸன மந்திரம்
மேற்படி தியான ஸ்லோகம்:
 
சுக்லாம் பரதரம் விஸ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் 
பிரசன்ன வதனம் தியாயே சர்வவிக்னோப சாந்தஹே
 
யம் பிரம்ம வேதாந்த விதோவதந்தி பாம்பிரதானம் 
புருஷம் ததான்யே விஸ்வோர்க்கதே காரண
யீஸ்வரம்பா தஸ்மை நமோ விக்ன வினாயகாய
 
அங்ஜானன பத்ம ராக்கம் ஙஜான
அநேனக தம் தம் பத்மானாம் ஏக தம் தம் ஊ…
 
ஏக தந்தம் மஹாகாயம் தப்த கரஞ்சன ஸ்ந்நிபம்
லம்போதரம் விசாலாக்ஷிம் வந்தே அஹம் கண நாயகம்
 
சித்ராரத்ன விசித்ராங்கம் சித்ரமாலா விபூஷிதம் 
சித்ரூபத்ரம் தேவம் வந்தே அஹம் கண நாயகம்
 
ஒவ்வொரு ஸ்லோகத்தையும் பதினாறு தரம் மேற்படி பூஜை செய்தவுடன் சொல்லித் தோத்தரித்து அடியிற்கண்ட மூல மந்திரம் ஜெபிக்க வேண்டியது..
 
மூல மந்திரம்: 
ஓம் ஸ்ரீ ஹிரீம் கிலீம் ஙிலௌவும் ஙெஙகணபதே 
சர்வலோக சர்வஜெனங்களும் வசமாக வசிய வசிய ஸ்வாஹா
 
இதன் பலன் :
யோக வசியம்,இராஜ வசியம்,சத்ரு நாசம்,சம்பத்துண்டாகும்,உஷ்ணரோக நிவர்த்தி,முகதேஜஸ்,சகலகாரிய சித்தியுண்டாகும்,இரவில் மோஹினி அழிப்பது நிவர்த்தியாகும் ….
சுபம்… 
 
 
 
 

Leave a Comment

error: Content is protected !!