Homeஅடிப்படை ஜோதிடம்7ல் செவ்வாய் இருந்தால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?

7ல் செவ்வாய் இருந்தால் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் ?

7ல் செவ்வாய்

7 – ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் உண்டு.ஆட்சி , உச்சம் அல்லது சுபக்கிரகத்தால் பார்க்கப்பட்டோ அல்லது சூரியன் , சனி , ராகு , கேது சேர்க்கை(அ) பார்வையைப் பெற்றோ இருந்திடில் தோஷம் கிடையாது. தோஷம் உள்ள ஆணையோ அல்லது பெண்ணையோ திருமணம் செய்தால் குற்றமில்லை.

மனைவியின் உடல்நிலை அடிக்கடி பாதிக்கப்படும்.சொத்து சம்பந்தமான விவகாரத்தை ஏற்படுத்தும். குடியிருப்பு இடத்தை அடிக்கடி மாற்ற நேரிடும்.அநேக சகோதரர்களைப் பெற்றவர்.விவாகத் தடை உண்டு.பரிகாரங்கள் செய்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

தானே தன் ஆண் குறியைக் கெடுத்துக் கொள்வான்.தாய்வழி சொத்து கிடைக்க வாய்ப்புண்டு. பெண்களால் துக்கம் அடைவர். சண்டைப் பிரியர். இரு மனைவிகள் ஏற்பட வாய்ப்புண்டு.குருவுடன் கூடிடில் பெண்களால் லாபம் . போக சேஷ்டைகளும் – வேறு மதத்தில் திருமணமும் உண்டாகும்.

7ல் செவ்வாய்

சனி கூடிடில் பண நஷ்டம்.மேலும் மனம் போன போக்கில் நடந்து கொள்வதால் சில விபரீதங்களை சமாளிக்க நேரும்.மனைவியுடன் அடிக்கடி தகராறுகள் தோன்றும்.சூதாட்டத்தில் பணம் இழப்பர்.

மேலும் , தகாத காரியங்களைச் செய்தல் , கெட்ட சரீரம் உடையவராதல் , விதவைகளை மணத்தல் அல்லது விதவைகளுடன் உறவு கொள்ளல்.சதாசம்போகியாக இருத்தலும் உண்டு. முறை தவறிய உறவும் உண்டாகும். தாய்ப்பால் இல்லாத மனைவி அமைவாள்.

  • மனைவி வரும் திக்கு – தெற்கு – பழைய வர்க்கம் ( சொந்தம் ) சிலருக்கு ஸ்தானாதிபதியைப் பொறுத்து மாறி அமையும்.
  • மனைவியின் நிறம் – சிவப்பு சரீரம்.
  • மனைவியின் குணம்– நல்லவளுக்கு நல்லவள் , அவளே கெட்டவருக்கு கெட்டவள்.
  • மனைவி இருக்கும் தூரம் – சுமார் 25 மைல் சுற்றளவுக்குள்.
  • கணவன் அல்லது மனைவி தொழில்-விவசாயம் , இரும்பு , மின் சாதனங்கள் , அரசாங்க உத்தியோகம் , மற்றவர்களை அதட்டி உருட்டி மிரட்டும் தொழில் , நெருப்பு அல்லது உணவு சம்பந்தப் பட்ட தொழில்.
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!