Homeஜோதிட குறிப்புகள்செவ்வாய் : லக்கினத்தில் இருந்தால் உண்டாகும் பலன்கள்

செவ்வாய் : லக்கினத்தில் இருந்தால் உண்டாகும் பலன்கள்

செவ்வாய்

பொதுப்பலன்:

  • தேக உஷ்ணம் அதிகமாக இருக்கும்.
  • அடிக்கடி சூடு சம்பந்தமான நோய்கள் வரும்.
  • நீரிழிவு நோயும் ஏற்படலாம்.
  • குரு பார்வை பெற்றால் மருத்துவம் மூலம் குணம் காணலாம்.
  • அம்மை போன்ற நோய்கள் ஏற்பட்டு விலகும்.
  • விவசாயம் இவர்களுக்கு ஆகாது.
  • தீப்புண்கள் ஏற்படாதபடி இவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • பெற்றோர்களுக்கு கத்தி போன்ற ஆயுதங்களால் காயம் ஏற்படும்.
  • சிறு விஷயங்களுக்கும் அற்பத்தனமாக சண்டை போடுவார்.
  • மழலை தோஷம் உண்டு.
  • பிள்ளைகள் நோயால் துன்புறும் , உடலில் காயத்தழும்பு உடையவன் , நிலையில்லா மனதும் உடையவளன்.
  • பல்வலியால் கஷ்டம்30 வயதிற்கு மேல் பற்கள் எல்லாம் கெடும்.
  • ஒல்லியான தோற்றம் , கெட்டது எனத் தெரிந்தும் பணத்திற்காக எதையும் செய்யும் துணிவுடையவன்.இதிலும் பொருள் ஈட்டுவான்.
செவ்வாய்
  • சிறை செல்லும் சந்தர்ப்பம் வரும்.
  • தங்க நகை மோகம் , பலதார மனம் , பெண் அடிமை , மாமிசப் பிரியர் , பெரியோர் சொல் கேளாதவன் , தானே தன் ஆண் குறியைத் கெடுத்துக் கொள்வான்.
  • அற்ப ஆயுள் குற்றம் வரலாம்.
  • செவ்வாய் – ராகு சேர்க்கை இருந்து சனி பார்வை பெற் றால் கூன் போன்ற உடல் பாதிப்பு ஏற்படும்.
  • பெற்ற தாயை பகைத்துக் கொள்வான் .
  • துர்வழி பிரயோகம் , கணவன் மனைவி பிரிவினை , தெய்வ குற்றம் குழந்தை பிறப்பில் தவறு ஏற்படுதல் , அக் குழந்தையின் அங்கத்தில் குறை காணுதல் , செய்யக் கூடாத காரியங்களை செய்து விட்டு பின் அவதிப்பட வேண்டிய நிலை , தலை மறைவாக வாழ வேண்டிய காலங்கள் ஏற்படும்.
  • செவ்வாய் நின்ற நட்சத்திரத்தின் சாதக நட்சத்திரத்தில் லக்னம் சந்திரன் தசா புக்தி அந்தர நாதன் இருப்பின் சொல்லப் பட்ட சுப பலன்கள் மாறி எதிரிடையான பலன்கள் நடக்கும் .தீய பலன்கள் செயல்படாது.
  • செவ்வாய் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத் திரத்தில் லக்னம் சந்திரன் தசாபுக்தி அந்தர நாதன் இருப்பின் சொல்லப்பட்ட சுப பலன்கள் மாறி எதிரிடையான பலன்கள் நடக்கும்.தீய பலன்கள் செயல்படாது.
  • சொல்லப்பட்ட பலன்கள் செவ்வாய் தசாபுக்தி அந்தர காலங்களில் நடைமுறைக்கு வரும் .
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!