புதன்
லக்கினத்தில் புதன்
முதல் பாவத்தில் புதன் வலிமை பெற்றவனாய் இருக்கப்பெற்றவர்.கல்வி ,கலை ,கணிதம் ஜோதிடம் மாந்திரீகம் ஆகியவற்றில் வல்லவராக புகழ் பெறுவார்,முதல் பாவத்தில் புதன் வலிமை குறைந்தவர் இருக்கப்பெற்றவர் அறிவில் குறைந்தவராய், அரைகிறுக்காய், தெருத்தெருவாக சோதிடம் பார்த்து திரிபவராய் இருக்க வாய்ப்பு உண்டு,புதன் கிரக தோஷ பரிகாரம் செய்தால் நற்பலன்கள்கிட்டும்.
2ல்-புதன்
இரண்டாம் பாவத்தில் புதன் அமையப் பெற்றவர்,கல்வியில் தேர்ச்சி பெற்றவராய், இனிமையான குடும்பம் வாய்க்கப் பெற்றவராக இருப்பார்.வசதிகளைத் தாமாகதேடி கொள்பவராகவும் ,இனிமை ,கவர்ச்சி நகைச்சுவை ஆகிய தோன்றப் பேசுபவராகவும் இருப்பார்.இரண்டாம் பாவத்தில் புதன் கெட்டவனாய் இருக்க பெற்றவருக்கு இவை அத்தனையும் மாறும்.
3ல் -புதன்-
மூன்றாம் பாவத்தில் புதன் அமைந்தால்,சோதிடம் ,அஷ்டமாசித்தி ஆகியவற்றால் அறிவாற்றல் உண்டாகும்.மிகுந்த புத்திசாலித்தனம் இருக்கும்,போக இன்பத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டாகும்,இனிப்பான உணவுகளில் விருப்பம் ஏற்படும் ,வினோதமான பொருள்களில் ஆசை உண்டாகும்,வசதியான வாழ்க்கை அமையும்,எப்போதும் குரலை தாழ்த்தியே பேசுவார்,
4ல்-புதன்
நான்காம் பாவத்தில்புதன் அமையப் பெற்றவருக்கு ,தந்தைவழி உறவினர்களால் நன்மை ஏற்படும், இலக்கிய படிப்பினால் புகழ் கிட்டும்.வீடு, வாகனம், பெருந்தன்மை ,மிகுந்த புத்திசாலித்தனம் ஆகியன வாய்க்கும்,
5ல் -புதன்
5ம் பாவத்தில் புதன் அமையப் பெற்றவருக்கு,நாகரிக போக்கு ஏற்படும்,இவர் அழகிய ஆடைகள் உடுத்துவராய் இருப்பார்,மற்றவரைப் பழித்துத்துப் பேசுவார்.விஷ்ணு பக்தராக இருப்பார் ,சில மக்களே பிறப்பர் ,
6ல் -புதன்
ஆறாம் பாவத்தில் புதன் அமையப் பெற்றவர்,ஏமாற்றுபவர்களால் தொல்லை அடைவார்,தொழிலில் கவனக் குறைவு ஏற்பட்டு பொருள் இழப்பு உண்டாகும்,உடலில் வாயு தொல்லை ஏற்பட்டு தொல்லை வரும்.
7ல் புதன்
ஏழாம் பாவத்தில் புதன் அமையப் பெற்றவருக்கு,வியாபாரத்தில் தொல்லை ஏற்படும் ,மனைவியினால் சொத்து கிட்டும்,மக்கட் பேறு வாய்க்கும்,வாழ்க்கை வசதிகள் அமையும்
8ல் புதன்
எட்டாம் பாவத்தில் புதன் அமையப் பெற்றவருக்கு,ரத்தசோகை ஏற்படலாம்,மனபயம் உண்டாகலாம்,நீராலும் பிறரின் கொடுமை அல்லது தாக்குதலும் உடலுக்கு ஆபத்து ஏற்படலாம்,வாழ்க்கை, போராட்டம் மிகுந்ததாக இருக்கும்,எதிரிகள் தொல்லை எப்போதுமிருக்கும்,
9ல் புதன்
ஒன்பதாம் பாவத்தில் புதன்(Budhan) அமையப் பெற்றவர்,எப்போதும் பயணம் செய்துகொண்டே இருப்பார்,எப்போதும் நகைச்சுவையோடு பேசுவார் ,மதப்பற்று ,பக்தி ,ஒழுக்கக் கட்டுப்பாடு ஆகியவை உள்ளவர்
10ல் புதன்
பத்தாம் பாவத்தில் புதன் இருக்கப் பெற்றவர்,விஷ்ணுவிடம் தீவிர பக்தி கொண்டிருப்பார்.இலக்கிய ஞானம் மிகுந்தவராக இருப்பார்.சிறந்த வியாபாரியாகவும் , நகைச்சுவை கலந்து பேசும் அறிவு ஆற்றல் பெற்றவராகவும் ,மற்றவர் மரியாதை கொடுக்கும் அளவிற்கு விஞ்ஞானம் கொண்டவராகவும் இருப்பார்.
11ல் புதன்
பதினோராம் பாவத்தில் புதன் அமையப் பெற்றவர்,நகை வியாபாரம் செய்து நல்ல லாபம் ஈட்டுவர்,அழகான மனைவியும் அறிவுள்ள குழந்தைகளும் அமையப்பெற்றவர்,ஆலய வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்,நல்ல கல்வியும் அறிவியல் துறையில் ஈடுபாடும் கொண்டவர்,சிலர் விஞ்ஞானிகள் ஆகவும் மாற வாய்ப்புண்டு,சிறந்த பக்திமான், புத்திமான், நீதிமான் என மற்றவர் புகழ வாய்ப்பு கிட்டலாம்,வசதியான வீடு ,வாகனம், அன்பான உறவினர்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு
12ல் புதன்
பனிரெண்டாம் பாவத்தில் புதன் அமையப் பெற்றவர்.பிறர் ஆதரவில் வாழ்பவராக இருப்பார்,எப்போதும் சிந்தனை செய்து கொண்டும் கவலையோடு இருப்பார்.குரலில் தெளிவின்மை, புத்தி மந்தம் ஆகிய குறைகள் ஏற்படலாம்
பாவங்களின் நீச புதன் அமையப் பெற்றவர், புதன் கிரக பரிகார பூஜைகள் செய்து ஓரளவு நற்பலனை அடையலாம்.