Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம் பகுதி-67-மேஷ லக்னம்

அடிப்படை ஜோதிடம் பகுதி-67-மேஷ லக்னம்

மேஷ லக்னம்

இவர்கள் பிறரை அனுசரிப்பவர்கள். சுரங்கம், ராணுவம், காவல்துறை, பாதுகாப்பு துறை போன்றவற்றுடன் தொடர்பு உள்ளவர்கள். பெரும்பாலும் மாமா பெண்ணையே மணக்க நேரும். சிரித்த முகமும், சற்று குள்ள தோற்றமும் உள்ளவர்களாக இருப்பார்.

ரத்தப் பரிசோதனை, பீட்ரூட், தக்காளி, வெங்காயம் போன்ற சிவந்த பொருள் தொடர்புடையவர்கள். கூன் முதுகு அமையும். இவர்கள் கட்டாந்தரையிலும் பஞ்சுமத்தையிலும் படுத்து துயில்வர். லண்டன், சீனா, மத்திய ஐரோப்பா ஆகிய நாடுகளின் தொடர்பில் இருப்பார்கள்.

மேடைப்பேச்சில் 3 நிமிடங்களுக்கு மேல் பேச மாட்டார்கள். பெண் குழந்தை பாக்கியம் உள்ளவர்கள். 46 வயதிலேயே தலை நரைத்து விடும். மத்திய அரசு(மின்சாரம்) தனியார் துறையில் பணி அமையும். ரசிகர் மன்றம் நடத்தி புகழ் பெறுவார்.

மேஷ லக்னம் லக்னமாகஅமைய பெற்றவர்கள் செம்பு நிறம் உள்ளவர், கோழை, பிருக்கிரிதி உள்ளவர், சீக்கிரம் முன் கோபம் வரும், மந்தபுத்தி ஸ்திர மற்ற தன்மை. பெண் போக பிரியர், குணசாலி, பந்துஜன உபகாரர் தன் முயற்சியால் புகழ் அடைபவர்.

ஆவேசம் பெரும் குறிக்கோள் உள்ளவர், எதிர்க்கும் தன்மை, எடுத்த முயற்சியை முடிக்கும் தன்மை. போரில் திறமை, பேசுவதைவிட எழுதுவதில் வல்லவர். மத்திம உடல்வாகு இவை எல்லாம் மேஷ லக்னம்.

ராஜ பூஜிதர் ,பொதுமக்கள் தொடர்பால் புகழ் பெறுவார். தைரியம், பிடிவாதம், முரட்டுத்தனம், சாமர்த்தியம் எல்லாம் உள்ளவர்.அடிமைகள் உள்ளவர். மெலிந்த தேகம், அறிவு, அழகு, மன உறுதி உள்ளவர்.இரு தாரங்கள் அமையும் வாய்ப்பு உண்டு.ஆயுதம், துப்பாக்கி சூடு, கல்லடி, மரத்திலிருந்து விழுதல் , வெட்டுக்குத்து இவை போன்றவற்றால் காயம் ஏற்படலாம். தன் குலத்தில் தான் புகழுடன் விளங்குவார் அற்ப சந்ததி உள்ளவர். 4, 5,7,10,20,22,25 இந்த வயதுகளில் அக்னி, காய்ச்சல், சொறிசிரங்கு, வைசூரி விஷம் ,பீடை போன்றவை ஏற்படலாம்.

மேஷ லக்னம்

மேஷ லக்னம் -சுபர் -அசுபர் -மாரகர்

மேஷ லக்னத்திற்கு சுபர்: குரு, சூரியன், செவ்வாய்.

மேஷ லக்னத்திற்கு பாபர் :சனி, சுக்கிரன், புதன்.

கிரக சேர்க்கை பலன்: யோககாரன் சனி, குரு கூட்டு.

மேஷ லக்கினத்திற்கு பாதகர் :சனி,

மாரகர் :சுக்கிரன். இவன் கொல்லான்.புதன் சனி கொல்வார்கள்.

சந்திரன் பற்றிய விளக்கம்: தேய்பிறை சந்திரன் பாவி- அதனால் லக்னத்திற்கு நல்லவன் என்ற வகையில் சாதாரண சுபபலன்கள் தருவான். வளர்பிறைச் சந்திரனால் அதிக சுப பலன்கள் ஏற்படும்.

மேஷ ராசியில் பிறந்தவர்களின் பலனை அறிய இங்கே கிளிக் செய்யவும்

8-க்குடையவன் என்ற வகையில் செவ்வாய், லக்னாதிபதி என்ற வகையில் சுபன்.

சுக்கிரன் 2 7-க்குடையவன் என்றவகையில் சுபாவ மாராகன் இரு மாறாக ஆதிபத்தியம் உள்ளவன். மாரகம் செய்யான் என்பது கொள்கை.த்வி மாரகோத மாரக எனவே மத்திம சுபன்

3,6க்குடைய புதன் அசுபன்

4,5க்குடையவர் சூரியர் சந்திரர். இதில் சந்திரனுக்கு கேந்திராதிபத்திய தோஷம் கிடையாது. எனவே சுபன் சூரியன் 5க்குடையவன் என்ற வகையில் சுபனே .

யோககாரன் குரு 9,12-க்குடையவன் 12-க்குடையவன் என்ற வகைகளில் அசுபனே. ஆயினும் 9க் குடையவன் என்ற வகையில் நல்லவன். யோககாரன்.

மேஷ லக்னத்திற்கு புதனும், சனியுமே மாரகராவார்

மேஷ லக்னம் – சுபயோக சேர்க்கை:
  1. சூரியன்+சந்திரன்
  2. சூரியன்+செவ்வாய்
  3. சூரியன்+குரு
  4. செவ்வாய்+குரு
  5. செவ்வாய்+சந்திரன்
  6. குரு+சனி
மேஷ லக்னத்திற்கு ஆகாத தசைகள்:
  • புதன் தசை முழுவதும் சனி தசை, பிற்பாதி லாபம் தரினும் மாரகன் என்ற வகையில் தீங்கு செய்யும்.
  • லக்னம்-லக்னாதிபதி ஆயுள்காரர் , ஆயுள் ஸ்தானாதிபதி இவர்கள் வலுத்தால் 100 வயது வரைவாழ்வார்
  • பவுர்ணமி, வியாழன், ரோகிணி நட்சத்திரம் கூடிய நாளில் இரவு நேரத்தில் தலைவலியால் இறந்து போவார்.
உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!