அதிசய நடராஜர் கோவில்
பொதுவாக ஒவ்வொரு கோவிலிலும் ஒரு இறைவன் சிலை வடிவமாக காட்சி அளிப்பார்.ஆனால் நாகப்பட்டினத்தில் மனித வடிவில் காட்சி அளிக்கிறார் இறைவன். இத்தல இறைவனை பூமிநாதர் என்றும், அம்பாளை அங்கவளநாயகி என்றும் அழைக்கிறார்கள்.
கோவிலில் காணப்படும் சிற்பங்கள் அனைத்தும் சிலை வடிவமாக செதுக்க பட்டு வைக்கப்படுகிறது .ஆனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோனேரிராஜபுரத்தில் உமாமகேஷ்வரர் திருக்கோவிலில் உள்ள உற்சவருக்கு மட்டும் ஒரு தனி சிறப்பு உள்ளது.
மனித தோற்றம்:
இங்குள்ள நடராஜர் சிலையானது, ஒரு மனிதரை போலவே காட்சியளிக்கும் ,நரம்பு,மச்சம் ,ரேகை, நகம் போன்றவை தெள்ளத்தெளிவாக காணப்படுவது சிறப்பாகும்.
இந்த நடராஜரை சற்று தொலைவில் இருந்து பார்த்தால் 50 வயது முதியவர் போலவும் ,அருகிலிருந்து பார்த்தால் 30 வயது வாலிபன் போலவும் காட்சி தருகிறார்.
மேலும் வரகுண பாண்டியனுக்கு இத்தல இறைவனும் ,இறைவியும் பஞ்ச லோகத்தால் ஆன குழம்பை குடித்து ,நடராஜர் ,சிவகாமி அம்பாள் தம்பதியாக காட்சி அளித்துள்ளனர்.
நலம் தரும் சனி பகவான்:
மற்ற தலங்களில் கருப்பு ஆடை அணிந்துருக்கும் சனி,இங்கு வெள்ளை ஆடை அணிந்து அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
இன்னும் சில தகவல்கள்:
இத்தல இறைவன் நாலரை அடி உயர சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஒரே கொப்பில் 13 தளம் உள்ள வில்வ இலை கோவில் தல விருட்சமாக உள்ளது.
சிவன் சன்னதி கோஷ்டத்தின் பின் புறம் ,பிரம்மா,சிவன் ,விஷ்ணு மூவரும் அருல்பாலிக்கின்றனர்
இக்கோவில் ராஜ ராஜ சோழனின் பாட்டி கண்டராதித்த சோழன் மனைவி செம்பியன் மாதேவியால் கட்டப்பட்டது.
கோவில் இருப்பிடம்