Homeஆங்கில புத்தாண்டு பலன்கள் 20252025 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: துலாம் ராசி தொழில், திருமணம், ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம்

2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: துலாம் ராசி தொழில், திருமணம், ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம்

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025- துலாம் ராசி

சுக்கிரனை ஆட்சி வீடாகவும், சனியை உச்சவீடாகவும் கொண்ட துலாம் ராசி அன்பர்களே! வருகின்ற புத்தாண்டு உங்களுக்கு யோகமாக இருக்குமா? அல்லது அபயோகமாக இருக்குமா? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்…

துலாம் ராசியினருக்கு வரும் 2025 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக இருந்து வந்த தொல்லைகள் நீங்க கூடிய வருடமாக இருக்கும். அதே சமயம் சொல், செயல் இரண்டிலும் அமைதியும், அடக்கமும் இருந்தால் முன்னேற்றம் தொடர்ச்சியாக இருக்கும்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025
ஆங்கில புத்தாண்டு கிரக நிலைகள்

வேலை

வேலை செய்யும் இடத்தில் இதுவரை நீங்கள் சந்தித்த சங்கடங்கள் படிப்படியாக நீங்கும். மேல் அதிகாரிகளால் உங்களது திறமை உணரப்படும். யாரோ செய்த தவற்றுக்கு நீங்கள் பழியேற்ற நிலைமை மாறும். இந்த சமயத்தில் திட்டமிட்டு சோம்பலை தவிர்த்து செயல்பட்டால் தொடர்ச்சியாக நல்லது நடக்கும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வுகள், சட்டென்று கைகூடி மகிழ்ச்சி தரும். சிலருக்கு பணி சார்ந்த அயல்நாட்டு பயணவாய்ப்பும் வரும். அந்த சமயத்தில் வேண்டாத நட்பை உடன அழைத்துப் போவதை தவிருங்கள். புதிய பணி வாய்ப்பு கைகூடி வரும். அதில் உங்கள் திறமை உழைப்பால் தான் வெளிப்படும் உணர்ந்து செயல்படுங்கள்.

குடும்பம்

குடும்பத்தில் நிம்மதி இடம் பிடிக்கும். இதுவரை தடைபட்டு வந்த சுபகாரியங்கள் யாவும் உடனுக்குடன் நடக்கும். வாழ்க்கை துணையுடன் இருந்த பிரிவு நிலை மாறும். சிலருக்கு புதிய வாழ்க்கை அமைப்பு மனம்போல ஈடேறும். அதுக்கு பெற்றவர்கள் பெரியவர்கள் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். தாலி பாக்கியமும், தாயாகும் யோகமும் நிச்சயம் கிட்டும்.கர்ப்ப காலத்து பெண்கள் உடல் நலத்தில் கூடுதல் கவனமாக இருங்கள்.

உங்கள் பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையில் பிரத்தியேக பலன்களைப் பெற இங்கே சொடுக்கவும்

2025 ம் ஆண்டு ஜாதக பலன்கள்

தொழில்

வர்த்தகம், வாணிபம் என்று எதை நீங்கள் செய்தாலும் அதில் உழைப்புக்கு ஏற்ற உயர்வு வரத் தொடங்கும். முடங்கிக் கிடந்த லாப சக்கரம் முழுமையாக இயங்க ஆரம்பிக்கும். அயல் நாட்டு வர்த்தகத்திலிருந்து தேக்க நிலை மாறும். வர்த்தக கடன்களை வீண் ஆடம்பரத்துக்கு வாங்க வேண்டாம். அவசியமான முதலீடாக இருந்தாலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். அயல்நாட்டு வர்த்தகத்தில் உரிய நடைமுறை சட்டங்களை முழுமையாக கடைப்பிடியுங்கள்.

அரசு, அரசியல் துறையினர் பெருமையை தக்க வைத்துக்கொள்ளலாம். மேல் இடத்தின் ஆதரவு அதிகரிக்கும். அதே சமயம் தேவையற்ற வாக்குறுதிகளை யாருக்கும் கொடுக்காதீர்கள். எதிர்பார்த்த வகையில் செல்வாக்கு உயர வேண்டும் என்றால் உங்கள் வாக்கில் நிதானமும் ,செயல்களில் நேர்மையும் இருக்க வேண்டும். யாருடைய பேச்சைக் கேட்டும் குறுக்கு வழியில் குதித்தீர்கள் என்றால் உள்ளதையும் இழந்து விடும் சூழல் ஏற்படும். கவனமாக செயல்படுங்கள்.1

மாணவர்கள் மறதியை விரட்டினால் மார்க் நிச்சயம்! ஆகையால் கணித பாடங்களையும் பிற பாடங்களையும் ஒரு முறைக்கு இருமுறை நன்கு எழுதிப் பாருங்கள். சிலருக்கு படிக்கும் போதே எதிர்கால உயர்வுக்கான பாதை தெரியும். அதுல இறங்கும் முன் உரியவர்கள் ஆலோசனையை அவசியம் கேளுங்கள்.

துலாம் ராசி

அறிவுரை

பயணங்கள் அதிகரிக்கலாம். அதேசமயம் அவை ஆதாயம் தரக்கூடியதாகவே இருக்கும். வழிப்பாதையில் அறிமுகம் இல்லாதவர்கள் தரும் உணவு பானத்தை தவிருங்கள். வாகனப் பழுதை உடனே கவனியுங்கள். அடிவயிறு, நரம்பு, மூட்டுகள், முதுகு சம்பந்தப்பட்ட உபாதைகள் வரலாம். சிலருக்கு உணவு செரிமானமின்மை, உபத்திரம் ஏற்படலாம். அதீத காரமும் அளவுக்கு மீறிய குளிர்ச்சியும் உணவு ,பானத்தில் வேண்டாம்.

ஆலய வழிபாடு

இந்த வருடம் ஒருமுறை ஸ்ரீரங்கம் சென்று தாயார், பெருமாள், கொடிமர கருடனை வணங்கி விட்டு வாருங்கள். மாதம் ஒரு செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை பக்கத்தில் இருக்கும் துர்க்கை கோயிலுக்கு சென்று உதிரி எழுமிச்சம்பழம் அல்லது செவ்வரளி பூ கொடுத்து வணங்கி விட்டு வாருங்கள். ஏழை மாற்றுத்திறனாளிக்கு உங்களால் இயன்றதை செய்யுங்கள். இந்த வருடம் முன்னேற்றம் நிறைந்த முக்கியமான வருடமாக இருக்கும்.

மொத்தத்தில் வரும் 2025 ஆம் ஆண்டு நீங்கள் சாதனைகள் செய்யக்கூடிய ஆண்டாக இருக்கும் 90 சதவீதம் உங்களுக்கு பலன் தரக்கூடிய பாக்கியமான ஆண்டாக வரும் புத்தாண்டு அமையும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!