Homeகோவில் ரகசியங்கள்நாவல் மரத்தின் அதிசய தீர்த்தம்: ஆரோக்கியத்திற்கான இயற்கை பரிசு

நாவல் மரத்தின் அதிசய தீர்த்தம்: ஆரோக்கியத்திற்கான இயற்கை பரிசு

அதிசய தீர்த்தம்

பொதுவாக ஒவ்வொரு கோவிலும் சில ஆச்சரியமான அற்புதங்கள் நடைபெறும் அதற்கு காரணம் அங்கு காணப்படும் கடவுளின் சக்தி ஆகும்.அப்படி ஒரு அதிசய நிகழ்வு ஸ்ரீவில்லிப்புத்தூரில்(Srivilliputhur) உள்ள பெருமாள் கோவிலில் நடைபெறுகிறது .பல அற்புத காட்சி அமைப்புகளோடு அழகான இடமான கோவில் பட்டணமாகிய ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவிலேயே குன்றின்மீது எழில்மிகும் அழகோடு கட்டழகர் கோவில் மலை உச்சியில் மிக பிரம்மாண்டமாக காட்சி அளிக்கின்றது .

இங்கு சுந்தரவள்ளி,சவுந்தரவல்லி சமேத சுந்தரேசர் பெருமாளை(Perumaltemple) தரிசிக்கலாம்.மலைமீதுள்ள இக்கோயிலுக்கு செல்ல 247 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும் இந்த படிக்கட்டுகள் தமிழ் எழுத்துக்கள் 247 உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது .மேலும் இந்த மலையின் மீது ‘சிலம்பு ஊற்று’ என்ற தீர்த்தம் இருக்கிறது இது அங்குள்ள நாவல் மரப் பொந்திலிருந்து உற்பத்தியாவது அதிசயமான ஒன்றாகும் அந்த நீரூற்றின் நீர் கீழ் நோக்கி மட்டுமே செல்கிறது அக் காட்சி காண்பவர் மனதைக் கொள்ளை கொள்கிறது. கோவிலின் பின்புறமுள்ள மலையைப் பார்த்தால் பெருமாளே பள்ளி கொண்டதுபோல் காட்சி தருகிறது.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!