மிருகசீரிடம்(mirugasirisham)
- மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வசீகரமான தோற்றம் உடையவர்கள். பலசாலிகள்,
- தான் விரும்பிய விஷயங்கள் இன்னும் கிடைக்கவில்லையே என்னும் மனக்குறை உடன் எப்போதும் இருப்பார்கள். கூட்டுக்குடும்பமாக வாழ்வதில் விருப்பமுள்ளவர்கள்.பலர் சமூக ஆர்வலர்களாக இருப்பார்கள்.
- தான் செய்யும் காரியங்களில் மிகவும் அக்கறை கொண்டவர்கள்.பலரது மனம் அலை பாய்ந்த வண்ணம் இருக்கும்.இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலர் நியாயவாதிகளாக இருப்பார்கள்.
- இசைப் பிரியர்கள்,கலைஞர்களாகவும் இருப்பார்கள்.திறமையானவர்களாக விளங்குவார்கள்.ஆராய்ச்சியாளராகவும் பலர் இருப்பார்கள்.
- சிலர் மற்றவர்களை எடுத்தெறிந்து பேசக்கூடிய குணம் படைத்தவர்கள்.பலரையும் கட்டி ஆளும் திறமை மிக்கவர்கள்.உதவி செய்யும் குணமும் இருக்கும்.
- இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் V ,O ஆகிய எழுத்துக்களில் ஆரம்பிக்கும் பெயரை சூட்டிக் கொள்ள வேண்டும்
| யோனி | சர்ப்பம் |
| கணம் | தேவ கணம் |
| நாடி | மத்திம நாடி |
| நட்சத்திர அதிபதி | சந்திரன் |
மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நோயால் பாதிக்கப்பட்டால் அது 30 நாட்கள் நீடிக்கும். நோய் குணமாக இம்தேவேதி மந்திரத்தை கூற வேண்டும்.எள் தானம் செய்ய வேண்டும்.செங்கருங்காலி மரத்தை வழிபட்டால் நோய் குணமாகும்
Also Read
“நட்சத்திரத்திற்குரிய கிரகம் செவ்வாய்”
- ஜாதகத்தில் செவ்வாய் 12ல் இருந்தால் குழந்தைக்கு அடிக்கடி காய்ச்சல் வரும்.
- செவ்வாய் 1, 4 ,7 ,8, 12ல் இருந்தால் அந்த ஜாதகருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும் அவர்கள் எல்லோரிடமும் கடுமையாக நடந்து கொள்வார்கள்.
- வீட்டில் கிணறு நீர் தொட்டி ஆகியவை தெற்கு மத்திய பகுதி அல்லது தென்கிழக்கில் இருந்தால் அந்த வீட்டில் பிறக்கும் குழந்தை அடிக்கடி நோய் வரும்.
- ஜாதகத்தில் செவ்வாய் உச்சமாக இருந்தால் அல்லது குருவுடன் இருந்தால் அந்த ஜாதகர் பிறரது சொத்துக்களை தனது சொத்தாக நினைத்து செயல்படுவார் பிறர் பணத்தில் மகிழ்வுடன் வாழ்வார்.
- சந்திரன் செவ்வாய் உடல் நல்ல நிலையில் இருந்து அதை குரு பார்த்தால் அந்த ஜாதகர் அரசியல்வாதியாக இருப்பார் நன்கு பணம் சம்பாதிப்பார் மகிழ்வுடன் வாழ்வார்.
செல்லவேண்டிய ஆலயம் :
Also Read










