Homeஅடிப்படை ஜோதிடம்7ல் சந்திரன் இருந்தால் திருமணம் எப்படி இருக்கும் ?

7ல் சந்திரன் இருந்தால் திருமணம் எப்படி இருக்கும் ?

7ல் சந்திரன்

லக்கினத்திற்கு 7-ல் சந்திரன் இருந்தால் வரும் மனைவியால் நன்மையும் அவரால் சில சொத்துக்களும் சேரும்.நான்குக்கு மேற்பட்ட பிள்ளைகள் உண்டு.நாளடைவில் உள்ள அதிகாரத்தில் உச்ச நிலையை அடைதல்.அரசியலில் சாமர்த்தியம் காட்டுவார். குரு பார்வை இல்லாமல் இருப்பின் காதல் திருமணம் ஆகலாம்.

காலம் தாமதித்து திருமணம் செய்வது நல்லது.சந்திரன் செவ்வாயுடன் கூடிடில் அற்பத்தனமான மனைவி அமைவாள். புதனுடன் கூடிடில் கொலைத் தன்மையும் , குருவுடன் கூடிடில் போகமும் உடையவள் .ஒருக்கால் – திருமணம் நடைபெறாமலும் போகலாம்.

சுக்கிரனுடன் கூடிடில் பெண் பித்தன். சனியுடன் கூடிடில் புத்திரர் அற்பம் .சுறுசுறுப்பு அதிகம் உள்ளவர்.உடல் நலம் சாதாரணமாக இருக்கும்.இவர்கள் செய்யும் காரியங்கள்யாவும் முக்கால் பாகம் வெற்றியடையும்.

சந்திரன் – சுக்கிரன் சேர்க்கையில் சந்திரனோ , சுக்கிரனோ ஆட்சி , உச்சம்( அல்லது ) ஆட்சியிலிருந்தால் சகல விதமான வசதிகளுடன் கூடிய அழகான மனைவி வாய்ப்பாள்.இவர்கள் தாய் , அற்ப ஆயுள் உடையவள்.

7ல் சந்திரன்
7ல் சந்திரன்

அன்னிய நாட்டுப் பெண்களிடம் அதிகம் நாட்டம் உள்ளவர்.பெரும்பாலும் அழகுள்ள மனைவியே அமைவாள்.பெரிய விஷயங்களை விட்டு விட்டு சிறு விஷயங்களுக்கு சண்டை போடுவார். சிரேஷ்டமான பெண்ணை அனுபவித்தல்.

மனைவி விரோதம் அடைதல் , சொன்ன சொல் தவறாதவர். பழியின்றி வாழ்தல் அளவற்ற பொருள் தேடல் , காம எண்ணம் அதிகம் இவை உண்டாம்.பிறர் சொத்தையும் , முன்னேற்றத்தையும் கண்டு பொறாமை கொள்வார்.பெண்கள் விரைவில் அவர்களை தன் வசப்படுத்தி விடுவார்கள்.

தேய்பிறைச் சந்திரனாகில் வரும் மனைவி அங்கக் குறைவுள்ளவளாக வருவாள். சந்திரன் விருச்சிகத்தில் இருந்தால் மனைவிக்கு ஜல கண்டம் உண்டு.

உத்தம ஸ்திரீயான மனைவி அமைவாள்.மனைவி வரும் திக்கு கிழக்கு தாய் வழி உறவில் அமையலாம் . நிறம் வெண்மை.7 – க்குரியவரை பொருத்தும் அமையும் மனைவியின் குணம் வைராக்கிய குணம்.

மனைவி வரும் தூரம் சுமார் 40 மைல் சுற்றளவுக்குள்.கணவன் தொழில் விவசாயம் மற்றும் நீர் சம்பந்தப்பட்ட தொழில் , ஆபரணம் அல்லது ஆடைத் தொழில் ( கலை சம்பந்தப்பட்ட தொழில் புரிவோர் )

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!