முடக்கு ராசி – நட்சத்திரம்
முடக்கு என்றால் என்ன ?
முடக்கு என்பது ஜோதிட கணிதத்தின் படி, உங்களது ஜாதகத்தில் சூரியன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறார் என்பதனை முதலில் பார்க்க வேண்டும். அதிலிருந்து மூல நட்சத்திரம் எத்தனையாவது நட்சத்திரமாக வருகிறது என்று எண்ணி பார்க்க வேண்டும். இந்த எண்ணிக்கையை மூலத்திற்கு அடுத்த நட்சத்திரமான பூராடம் நட்சத்திரத்திலிருந்து எண்ணத் தொடங்க வேண்டும். அதன் பிறகு எந்த நட்சத்திரம் உங்களின் எண்ணிக்கையில் வருகிறதோ… அந்த நட்சத்திரம் முடக்கு நட்சத்திரம். அந்த நட்சத்திரத்தின் அதிபதி முடக்கு அதிபதி. அந்த ராசிநாதன் முடக்கு ராசி அதிபதி. அந்த ராசி முடக்கு ராசி.
இதனை ஒரு எளிய உதாரனத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். உங்களது ஜாதகத்தில் சூரியன் மீன ராசியில் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்திலிருந்து மூல நட்சத்திரம் வரை எத்தனை நட்சத்திரம் இருக்கிறது என எண்ண வேண்டும். (உத்திரட்டாதி, ரேவதி, அசுவினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம் ) அந்த வகையில் உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் மூலம் நட்சத்திரம் வரை 21 நட்சத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறது. தற்போது முடக்கு ஜோதிட கணிதத்தின் படி மூல நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திரமான பூராடம் நட்சத்திரத்தில் இருந்து 21 வது நட்சத்திரம் ( பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அசுவினி, பரணி, கிருத்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், ஹஸ்தம் ) முடக்கு நட்சத்திரம். எனவே இந்த உதாரண ஜாதகத்திற்கு ஹஸ்தம் நட்சத்திரம் முடக்கு நட்சத்திரம். இந்த நட்சத்திராதிபதி புதன் முடக்கு நட்சத்திராதிபதி. இந்த ராசியான கன்னி ராசி முடக்கு ராசி என்பதனை பட்டியலிட்டு புரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் ஜாதகத்தில் எந்த நட்சத்திர மற்றும் ராசி அதிபதி முடக்கு மற்றும் சூன்யம் அடைந்திருக்கிறார்களோ.அவர்களுக்கு கீழே கொடுக்க பட்டுள்ள வாழ்வியல் பரிகாரத்தை செய்து வளம் பெறுங்கள்.
சூரியன்-சூரிய நமஸ்காரம் அரசு நட்பு,தந்தையிடம் ஆசிர்வாதம் செய்யவும். அதிகாரிகளுடன்
சந்திரன்- தயிர்சாதம் தானமாக தரவும்.
குரு –பிராமனருக்கு தங்கம் தானமாக கொடுக்கலாம்(அ) லட்டு தானமாக கொடுத்தால் குருசாபம் நீங்கும்.
ராகு- உளுந்து சாதம் தனமாக கொடுத்தால் ராகுவின் தாக்கம் குறையும்.
புதன்- 5 பசை மிளகாய் நறுக்கி பொடியாக போடவும் அன்று நல்லது நடக்கும்.
சுக்கிரன்-மல்லிகைப்பூ வாங்கி அம்மன் கோவிலில் கொடுக்கலாம்
கேது-தினமும் ஓர் இருட்டு அறையில் மணி நேரம் அமரவும்.
சனி- துப்பரவு தொழிலாளர்களுக்கு முடக்கு நட்சத்திரம் அன்று அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினால் முடக்கு தோஷம் நிவர்த்தியாகும்.