நவகிரக பரிகார கோவில்கள்
சூரியன்
முதலில் நவகிரகங்களுக்கு அருள்புரிந்த திருமங்கலக்குடி ஸ்ரீ பிராணநாதேஷ்வரரை வழிபட்டு பின்பு ,சூரியனார் கோவிலுக்கு சென்று கருவறையில் உள்ள சூரிய சக்கரத்தை ப்ரதிஷ்டை செய்யவேண்டும்.சூரியனை வழிபடுவதாலும், இங்குள்ள நவகிரகங்களை வழிபடுவதாலும் அனைத்து தோஷங்களும் நீங்க பெருவார்.
சந்திரன்
தாய்க்கு பீடை நோய் ,மனநிலை பாதிப்பு ,சந்திரன் ஜாதகத்தில் நீசம் ,மறைவு ,பாவ கிரக சேர்க்கை உள்ளவர்கள் திங்களூர் கைலாசநாதர் கோவிலில் உள்ள சந்திரனை வழிபடுவதால் தோஷ நிவர்த்தியாகும்.
செவ்வாய்
ஜாதகத்தில் செவ்வாய் பாதிப்பு ,திருமண தடை ,தொழிலில் சிக்கல் ,வீடு ,மனை வாங்க ,அடிக்கடி விபத்து போன்றவை ஏற்பட்டாலும், செவ்வாய் திசை நடைபெறும் காலங்களிலும் வைத்தீஸ்வரன் கோவிலில் தனி சன்னதியில் உள்ள செவ்வாய்க்கு தீபம் ஏற்றி தரிசனம் செய்ய எத்தகைய கடுமையான செவ்வாய் தோஷமும் நீங்கும் .
புதன்
குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வமின்மை ,தடங்கல்கள் ஏற்படும் போது திருவெண்காடு புதன் வழிபட்ட ஸ்ரீ வேதா ரண்யேஸ்வரரையும் தரிசித்து, பின்பு அங்கு எழுந்தருளியுள்ள புதனையும் வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்.
குரு
திருமண தடை,புத்திர தோஷம் ,குடும்ப ஒற்றுமை ,நிம்மதி குறைவு ,ஜாதகத்தில் குரு தோஷம் உள்ளவர், வியாழக்கிழமை அன்று ஆலங்குடி குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்த பரிகாரமாகும்.
சுக்கிரன்
சுக்கிர தோஷம் உள்ளவர்கள் கஞ்சனுர் மூலவர் சுக்ரீஸ்வரரை சுக்கிர பகவானாக கருதி வழிபட்டால் தோஷம் நீங்கும்.திருநாவலூர் பார்க்கவீஸ்வரரை வழிபட சுக்கிர தோஷம் நீங்கும்.
சனி
ஜாதகப்படி 7 1/2 சனி ,அஷ்டம சனி ,அர்த்தாஷ்டம சனி ,ஏற்படும் காலங்களில் திருநள்ளாறு நள தீர்த்தத்தில் நீராடி தர்ப்பாரனேஸ்வரரையும்,போக மார்த்த அம்மனையும் வழிபட்ட பிறகு சனீஸ்வரர் சன்னதி சென்று எள் தீபம் ஏற்றி வழிபட தோஷம் நீங்கும்.
சனி பாதிப்பு உள்ளவர் திருதாவூர் சனீஸ்வரனை சனிக்கிழமை வழிபடவேண்டும். ,சனி ஈஸ்வரனை பிடிக்க முயன்று ,காலமுடமாகி ,கால் சரியாக ஈஸ்வரனை நோக்கி தவமிருந்த இடம் இது.
ராகு
ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீ மத் ராமானுஜர் எழுந்தருளியுள்ள ஸ்ரீபெரும்புதூர் சென்று நெய் தீபம் ஏற்றி ,ஸ்ரீ மத் ராமானுஜரையும் ,ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் ,ஸ்ரீ தியாகராஜ நாதவல்லி தாயாரையும் திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளில் வழிபட நாகதோஷம் நீங்கும்
கேது
பஞ்ச லிங்கங்களில் வாயு லிங்கம் உள்ள இடம் ,கண்ணப்பனுக்கு கட்சி தந்த தலம் திருக்காளத்தி .இங்குள்ள காளத்தீஸ்வரருக்கு ருத்ராபிஷேகம் செய்து அர்ச்சனை செய்ய கேதுவினால் ஏற்படும் தோஷம் நீங்கும்.
All information was very good ..well explain about Navagraga temple