பாலா திரிபுரசுந்தரி அம்மன்
பாலா திரிபுரசுந்தரி வரலாறு:
வேலூர் மாவட்டத்தில் நெமிலியில் பால திரிபுரசுந்தரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. பாலை எனும் சொல் குழந்தை பருவத்தை குறிக்கும். பால திரிபுரசுந்தரி 9 வயது சிறுமி ஆவாள். குமாரி என்றும் அழைக்கப்படும் இவள் லலிதா திரிபுரசுந்தரியின் மகள்.
குற்றமற்ற நெஞ்சம் கொண்ட குமாரி தன்னை வழிபடும் பக்தர்களை வாழ்வின் சரியான பாதையில் செல்வதற்கு உறுதுணையாக இருப்பவள். சிறு வயதிலேயே பல்வேறு கலைகளை கற்று தைரியமுள்ள சிறுமியாக விளங்கி பந்தாசுரன் எனும் அரக்கனை அழித்தவள்.
சிறப்பு:
எப்பொழுதும் குழந்தைகளுடன் உரையாடுவதில் ஒரு சுகம் கலந்து ஆறுதல் கிடைக்கும். அதுபோல சிறுமியாக அருள்புரியும் பால திரிபுரசுந்தரி அம்மனை வழிபடும்போதும் , பிரார்த்தனை செய்பவர்களின் மனபாரம் குறையும். அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் தீர்வு வழங்கக்கூடிய பால திரிபுரசுந்தரியின் வேத சொற்கள்:
உங்கள் சமையலறையில் சமைக்கப்படும் அனைத்தும் எனக்காக பிரியத்துடன் செய்யப்பட வேண்டும். அது உங்கள் அனைவரின் உடல் நலத்தையும், பாதிக்காபடாதவாறு பார்த்துக் கொள்வேன் என்பதாகும்.
பரிகாரம்:
இத்திருத்தலத்தில் கிடைக்கும் பேனாவைக் கொண்டு நாம் வாழ்வின் சிக்கல்களை பற்றியும் குமாரின் பெயரை எழுதுவது நல்லது. குழந்தைகளை பேனாவை எப்பொழுதும் தங்களுடன் வைத்திருந்தால் பாதுகாப்பாக உணர்வார்கள்.
ஸ்ரீசக்கரத்தை வாங்கி பூஜிப்பதன் மூலம் நினைத்த காரியம் கைகூடும். பச்சை-சிவப்பு இரு வண்ணங்களில் பால திரிபுர சுந்தரியின் புகைப்படம் இவ்வாலயத்தில் கிடைக்கும். பச்சை நிற புகைப்படத்தை பூஜை அறையிலும் சிவப்பு நிற படத்தை சமையலறையிலும் வைக்கவேண்டும்.
வழித்தடம் -Google Map
வேலூரிலிருந்து நெமிலிக்கு மாநகரப் பேருந்துகள் செல்கின்றன.