Homeஆங்கில புத்தாண்டு பலன்கள் 20252025 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: ரிஷப ராசி தொழில், திருமணம், ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம்

2025 ஆங்கில புத்தாண்டு பலன்கள்: ரிஷப ராசி தொழில், திருமணம், ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம்

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025-ரிஷப ராசி

மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெற்ற ரிஷப ராசி அன்பர்களே!! உங்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! வரும் 2025 ஆம் ஆண்டு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்? எப்படிப்பட்ட பலன்கள் உங்களுக்கு நடக்கும்? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்…

2025 ஆம் ஆண்டு தொடக்கமே உங்கள் வாழ்க்கையில் வசந்தத்தின் தொடக்கமாக இருக்கும். மனதில் இருந்த வீண் பயம் நீங்கி தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். அதை தக்க வைப்பதற்கு தலைகனத்தை அறவே தவிர்த்து விடுங்கள்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025
புத்தாண்டு கிரக நிலைகள்

அலுவலகத்தில் அனுகூலமான சூழல் நிலவும். உங்கள் தகுதிக்கு ஏற்ற பதவி உயர்வும், எதிர்பார்த்த இடமாற்றமும் தேடி வரும். இந்த சமயத்தில் பழைய கசப்பான சம்பவங்களை பாடமாக எடுத்துக் கொள்ளலாமே தவிர, பிறரை பழிவாங்க நினைத்து அதை பாரமாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். அனுபவமிக்கவர்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தால் அனைத்திலும் வெற்றி பெறலாம்.

குடும்பத்தில் நிம்மதி இடம் பிடிக்கும். உறவுகள் இடையே உங்கள் சொல்லுக்கு மதிப்பு அதிகரிக்கும். சுப காரியங்களை முன் நின்று நடத்திடும் அளவுக்கு செல்வாக்கு உயரும். வாரிசுகளின் செயல்களால் பெருமை சேரும். ஆடை, ஆபரணம் சேரும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். இளம் வயதினர்பெற்றோர் , பெரியோருடன் மனம் விட்டு பேசுங்கள். கொடுப்பது, வாங்குவது எதுவாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யவும்.

ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2025

செய்யும் தொழிலில் லாபத்தின் அளவுகோல் அதிகரிக்கும். வரவை முறையாக சேமியுங்கள். பழைய கடன்களை பைசல் செய்யுங்கள். பரம்பரை தொழிலில் இருந்த வழக்குகள் சாதகமாக தீர்வாகும். அயல் நாட்டு வர்த்தகம் சீராகும். கூட்டுத் தொழிலில் வரும் புதிய ஒப்பந்தங்களில் கவனமாக இருங்கள்.

அரசு, அரசியல் சார்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். எதிர்பாராத பதவி, கௌரவம், பாராட்டு மனதுக்கு மகிழ்ச்சி தரும். இதுவரைக்கும் இருக்கும் இடமே தெரியாமல் இருந்தவர்கள் கூட புதிய பொறுப்புகளால் பிரகாசிக்க வாய்ப்பு வரும்.

மாணவர்கள் உயர்கல்வி முயற்சிகளில் நேரடியாகவும், நேர்மையாகவும் முயற்சிப்பது தான் நிரந்தர பலனை தரும். இரவு நேரத்தில் வெளியிடங்களில் தங்குவதை முடிந்த வரை தவிர்த்து விடுங்கள்.

உங்கள் பிறப்பு ஜாதகத்தின் அடிப்படையில் பிரத்தியேக பலன்களைப் பெற இங்கே சொடுக்கவும்

2025 ம் ஆண்டு ஜாதக பலன்கள்

கலை, படைப்பு துறையினருக்கு வாய்ப்புகள் வரிசை கட்டி வர தொடங்கும். உங்கள் திறமையை ஊரே பாராட்டும் போது உங்கள் செயல்களும் அப்படியே இருப்பது அவசியம்..

தொலைதூரப் பயணத்தில் உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். பிறர் தரும் உணவு, பானத்தை அறவே தவிர்த்து விடுங்கள் .அடிவயிறு, கல்லீரல், அலர்ஜி, இடது பக்க உபாதை, ஒற்றைத் தலைவலி, கண் பிரச்சனைகளில் அலட்சியம் காட்ட வேண்டாம். கர்ப்பிணி பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த வருடம் ஒருமுறை திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு வாருங்கள். மாதம் ஒருமுறை அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று பள்ளிகொண்ட பெருமாளை தரிசித்து விட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதிர்பாராத மாற்றங்கள் நிச்சயம் நடக்கும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!