Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம் -பகுதி -54-பஞ்ச பட்சி சாஸ்திரம்

அடிப்படை ஜோதிடம் -பகுதி -54-பஞ்ச பட்சி சாஸ்திரம்

பஞ்ச பட்சி சாஸ்திரம் 

நாழிகை ,சாமம் 

ஒரு நாள் என்பது மொத்தம் 24 மணி நேரம் .அதாவது 60 நாழிகை 

பகல்-30 நாழிகை : இரவு 30 நாழிகை 

6நாழிகைகள் சேர்ந்தது ஒரு சாமம் 

ஒரு பகலுக்கு 5 சாமங்கள் 

ஒரு இரவுக்கு 5 சாமங்கள் 

ஆக ஒரு நாளைக்கு 10 சாமங்கள் 

ஒரு சாமம் என்பது 24 நிமிடங்கள் 

6*24=144 நிமிடங்கள் 

அதாவது 2மணி 24 நிமிடங்கள் 

ஒரு பட்சி 2மணி நேரம்,24 நிமிடத்திற்கு ஒரு தொழிலை செய்யும் .ஒவ்வொரு பட்சியும் வெவ்வேறு தொழிலை செய்யும் .

ஒவ்வொரு நாளும் சூரியன் உதயமாகும் நேரத்தில்தான் அந்த நாளின் முதல் சாமம் துவங்கும்.

உதாரணமாக சூரிய உதயம் காலை 6.00 மணிக்கு என்றால் அந்த நாளின் முதல் சாமம் காலை 6.00 மணிக்கு  துவங்கும் .அதிலிருந்து 2மணி 24நிமிடத்திற்கு முதல் சாமம் .அதாவது காலை 8.24 மணி வரை முதல் சாமம் (அந்த நாளில் சூரியன் உதயமாகும் நேரத்திற்கேற்ப சாம நேரம் மாறுபடும் ஒரு சாமத்தின் கால அளவான 2 மணி 24 நிமிடங்கள் மாறாது )

பகல் 

1-ஆம் சாமம் -6.00-8.24

2-ஆம் சாமம் -8.24-10.48

3-ஆம் சாமம் -10.48-1.12

4-ஆம் சாமம் -1.12-3.36

5-ஆம் சாமம் -3.36-6.00

இரவு 

1-ஆம் சாமம் -6.00-8.24

2-ஆம் சாமம் -8.24-10.48

3-ஆம் சாமம் -10.48-1.12

4-ஆம் சாமம் -1.12-3.36

5-ஆம் சாமம் -3.36-6.00

பஞ்ச பட்சி சாஸ்திரம்

பட்சிகளின் தொழில்கள் 

இந்த ஐந்து பட்சிகளுக்கும் ஐந்து விதமான தொழில்கள் புரிவதாக கூறப்பட்டுள்ளது.தொழில் என்று கூறப்படுவது 5விதமான இயக்க நிலைகள்.பட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட வேளையில் ஒவ்வொருவிதமான சக்தியுடன் இயங்கும் .அதன் படி இந்த 5 பட்சிகளின் தொழில்கள் அரசு ,ஊண் ,நடை ,துயில் ,சாவுஎன்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ்கண்டவாறு இருக்குமென்று சொல்லாம் .

அரசு :100 சதவீத பலம் 

ஒரு நாட்டின் தலைவனாக கருத்தபடுபவன் அரசன் .அந்த நாட்டின் மிக சக்திவாய்ந்தவனும் அரசனே .எனவேதான் ஒரு பட்சி தனது முழு சக்தியுடன் செயல்படும் நேரத்தை அதன் அரசு நேரம் என்கிறோம் .இந்த வேளையில் அந்த நட்சத்திரத்திற்குரிய பட்சி தனது  முழு வலிமையுடன் செயல்படும்.

ஊண் :80 சதவீத பலம் 

ஊண்  என்பது உணவுண்பதைக் குறிக்கும் அல்லது உணவை குறிக்கும் சொல் .உயிர்வாழ்வதற்கும் செயல்படுவதற்கும் உணவு மிக மிக அவசியம் .ஒரு பட்சி அரசு நிலையை விட சற்றெ குறைவான சக்திநிலையில் செயல்படும் நேரத்தை ஊண்  நேரம் என்கிறோம்.

நடை :60 சதவீத பலம் 

ஊண்  நிலைக்கு சற்றே குறைவான சக்திநிலை இயக்கத்தை நடை எனலாம்.நடை என்பது நடத்தல் என்ற தொழிலை குறிக்கும் சொல்லாகும் 

துயில் :40 சதவீத பலம் 

துயில் என்றால் தூக்கம் என்று பொருள்.ஒரு பட்சி துயில் நிலையில் இருக்கும்போது இயக்கம் மிக மிக குறைவாக இருக்கும்.இதயத்துடிப்பு ,சுவாசம் போன்ற மிக அத்தியாவசமான செயல்கள் மட்டுமே உடலில் நடந்துகொண்டு இருக்கும்.புலன்கள் அடங்கி போகும்.வேறு எந்த இயக்கமும் உடலில் இருக்காது .ஒரு பட்சி தனது துயில் நேரத்தில் இதேபோல் மிக மக சக்தி குறைந்த நிலையில் இருக்கும்.

சாவு :20சதவீதம் 

சலனமற்ற -இயக்கங்கள் அறவே நின்றுபோன நிலையே சாவு.ஒரு பட்சி தனது சாவு நேரத்தில் எந்த ஒரு இயக்கமும் இல்லாத நிலையை அடைகிறது.இதுவே இந்த பட்சி முற்றிலும் சக்தியிழந்த ஒரு நிலையாகும்   

பஞ்ச பட்சி தொடரும் …..

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!