பட்டீஸ்வரம் ஸ்ரீ பைரவர்
தக்ஷன், விஷ்ணு, பிரம்மாதிகளுக்கு அகங்காரம் மேலிட்ட காலத்து அவர்களை சிவாக்கையால் சிக்ஷித்து அனுக்கிரகித்த சிவனின் வடிவமே பைரவர். இவருக்கு வேத உருவமாய் நாய் வாகனம் இவருடைய திருநாமத்தில் அமைந்த ( படைத்தல், ரட்சித்தல், வதைத்தல்) படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் மூன்று தொழில்களையும் உணர்த்தும்.
கோயிலில் அமைந்துள்ள அருள்மிகு கால பைரவர் சோழ மன்னர்களால் போற்றி வழிபட்டவர். இவருக்கு தேய்பிறை அஷ்டமி தோறும் (பைரவாஷ்டமி ) சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் வடைமாலை சாற்றி தயிர் பள்ளயம் இட்டு சிறப்பு பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.
நோயுற்றோர், கடன் சுமையில், அழுந்துவோர், துஷ்ட கிரகப்பிடியில் அகப்பட்டோர், குற்றம் சுமத்தப்பட்டோர் பைரவரை பூஜித்தால் நலம் பயக்கும்.
நவகிரக தோஷங்கள் நீங்கிட: கால பைரவருக்கு செவ்வரளி பூவால் ஒன்பது வாரங்கள் சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய நவகிரக தோஷம் நீங்கும்.
குழந்தை பேரு கிட்ட: தம்பதியர் 6 தேய்பிறை அஷ்டமிகளில் சிகப்பு நிற பூக்களால் சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய குழந்தை பேரு கிட்டும்.
வறுமை நீங்க : வளர்பிறை அஷ்டமிகளில் மாலை நேரத்தில் வில்வம் மற்றும் வாசனை மலர்களால் அஷ்டோத்திரமோ அல்லது சகஸ்ர நாம அர்ச்சனையோ செய்து 11 வைரவ தீபங்கள் ஏற்ற வேண்டும். 11 அஷ்டமிகள் தொடர்ந்து வழிபட்டால் இஷ்ட சித்தி கைகூடும்.
இழந்த சொத்துக்கள் திரும்ப பெற: 11 அஷ்டமிகள் வைரவ தீபம் ஏற்ற வேண்டும்.
சனி தோஷம் நீங்க: 9 சனிக்கிழமைகள் செந்நிற மலர்களால் அர்ச்சனை செய்து நான்கு வைரவத் தீபங்கள் ஏற்றி வழிபட சனி தோஷம் நீங்கும்.
திருமண தடை நீங்க: ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் விபூதி அபிஷேகம் செய்து மிளகு வடை மாலை சாற்றி அர்ச்சனை செய்ய திருமண தடை நீங்கும்.
பகை அச்சம் நீங்க :9 அஷ்டமிகள் பைரவருக்கு அர்ச்சனை செய்து வசதிக்கேற்ப நிவேதனங்கள் செய்ய வியாபார தொடர்பான பகை, அச்சம், நஷ்டம் நீங்கும். எல்லாவிதமான தொல்லைகளும் அகலும்.
தீராத நோய்கள் தீர: பைரவ ஹோமமும், அபிஷேகமும் செய்ய வேண்டும்.அந்த அபிஷேக தீர்த்தத்தை உட்கொள்ள நோய்கள் நீங்கும்.
செல்வம் செழிக்க: வளர்பிறை அஷ்டமிகளில் கால பைரவருக்கு சொர்ணபுஷ்பம் அல்லது 108 காசுகளால் அர்ச்சிக்க வேண்டும். அந்த காசினை அலுவலகம் அல்லது வீட்டில் பணப்பெட்டியில் வைக்க செல்வம் கொழிக்கும்.
தினம்தோறும் “ஓம் ஸ்ரீ சொர்ணா கர்ஷன பைரவாய நமஹ” என்று 108 முறை ஜெபிப்பதும் நல்லது.
பைரவ தீபம் என்பது மிளகினை சிறு மூட்டைகளாக கட்டி நெய் அல்லது நல்லெண்ணெய் எட்டு தீபம் ஏற்றுவதாகும்.
ஸ்ரீ பைரவர் உபய அபிஷேக நேரம் :காலை 9 மணி, பகல் 12 மணி, இரவு 8 மணி, இரண்டாம் காலத்தில் அபிஷேகம் செய்வதே சால சிறந்தது.