பேரம்பாக்கம் செல்லாத்து அம்மன்
செல்லாத்து அம்மன் வரலாறு:
சென்னை மாநகரின் அருகே உள்ள பேரம்பாக்கம் என்னும் ஊரில் செல்லாத்து அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. சக்தி வாய்ந்த செல்லாத்து அம்மனை தரிசிக்க இவ்வாலயத்தின் திருவிழாவின் பொழுது பல பக்தர்கள் வெளிநாடுகளில் இருந்தும் வருகின்றனர்.
சிறப்பு :
இத்திருத்தலத்தில் செல்லாத்து அம்மனுக்கு ஒவ்வொரு முறை அபிஷேகம் நடைபெறும் பொழுதும் இக் கோவிலுக்கு அருகாமையில் உள்ள ஏரிக்கு அம்மனை அழைத்துச் சென்று அங்கிருந்து அம்மனை ஆலயத்திற்கு அழைத்து வந்து பின்னர் அபிஷேகம் செய்வர்.
பரிகாரம்:
கடன் தொல்லைகள், நில பிரச்சனைகள் ஆகியவற்றில் இருந்து விடுபட இவ்வாலயத்தில் நடைபெறும் கோலாகல ஆடித் திருவிழா அன்று சக்திவாய்ந்த பேரம்பாக்கம் செல்லாத்தம்மனை அனைவரும் சென்று வழிபடுவது அதிக நன்மையை பெற்றுத் தரும் என்பது ஐதீகம்.
வழித்தடம்:
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறநகர் பகுதியில் இருந்தும் பேரம்பாக்கம் வழியாக செல்லும் பேருந்துகள் உள்ளன