சொத்து பிரச்சினைகள்
2-க்கு அதிபதியும், 4-க்கு அதிபதியும் ஒருவருடைய சொத்து பற்றி குறிப்பிடும். அவை ஜாதகத்தில் சரியில்லை என்றால் கிடைக்க வேண்டிய சொத்து கிடைக்காமல் போய்விடும்.
4-க்கு உரிய கிரகம் நீசம் அடைந்தால் அல்லது பலவீனமாக இருந்தால் அவருக்கு சேர வேண்டிய வாகனம், வீடு ,நிலம் ,பூர்வீக சொத்து ஆகியவற்றில் பிரச்சனைகள் ஏற்படும். 2-ம் அதிபதி கெட்டுப்போனால், சுயமாக சம்பாதித்த சொத்தில்பிரச்சினைகள் உண்டாகும்.
2-ல் நீச செவ்வாய் இருந்தாலோ, பார்த்தாலோ சொத்தில் வில்லங்கம் உண்டாகும்.
ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் 2-க்கு அதிபதியாகி பலவீனமாக இருந்தால் நோயின் காரணமாக சொத்தை இழக்க வேண்டிய சூழல் உண்டாகும்.
ஜாதகத்தில் 4ம் அதிபதி பலவீனமாக இருந்து பாவ கிரகத்தால் பார்க்கப்பட்டால் அவருக்கு நல்ல வீடு அமையாது.
4-க்கு அதிபதி 12-க்கு அதிபதியுடன் சேர்ந்து 12-ல் இருந்தால் அவருடைய பிறந்த ஊரில் உள்ள சொத்தில் பிரச்சினை ஏற்படும்.
ஒரு ஜாதகத்தில் நான்கில் சூரியன் இருந்து சனியால் பார்க்கப்பட்டால் ஜாதகர் தன் சொத்துகளை அனுபவிக்க முடியாது அவருடைய சொத்து அவருக்கு கிடைக்காத வகையில் பிறர் ஏமாற்றுவார்கள்.அதே ஜாதகத்தில் சுக்கிரன் ராகுவுடன் சேர்ந்து மூன்றாம் வீட்டில் சேர்ந்தால் சகோதரர்கள் சொத்துக்களை அபகரித்துக் கொள்வார்கள்.
- சந்திரன் 11ல் உச்சமாக இருந்து 12ல் செவ்வாய் சனி இருந்தால் ஜாதகன் பேராசை குணத்தால் ஏமாந்து விடுவார்.
- 12-ல் சந்திரன், 4ல் கேது 7ல் செவ்வாய் இருந்தால் பூர்வீக சொத்து கைக்கு வருவதில் சிக்கல் ஏற்படும்.
- 4-ல் சனி 7ல் செவ்வாய் 12ல் ராகு இருந்தால் வரவேண்டிய குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டாகும்.
- 8ல் சுக்கிரன், ராகு, செவ்வாய் இருந்தால் தந்தைவழியில் வரவேண்டிய சொத்து கிடைக்காது.
- 4 க்கு அதிபதி நீசம் அடைந்து 8ல் பாவ கிரகத்துடன் இருந்தால் அல்லது 8ம் அதிபதியுடன் இருந்தால் அவருக்கு வரவேண்டிய சொத்து கிட்டாது.
- ஒருவருக்கு பூர்வீக சொத்துகளை அனுபவிக்க ஜாதகத்தில் தந்தைக்கு காரணமான சூரியன், பூமி காரணமாக செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஜனன ஜாதகத்தில் பாதகமான அமைப்பில் இருந்தாலும் சுப கிரகங்களின் பார்வை பெற்றிருந்தால் பெரும் போராட்டமும் முடிவில் நற்பலன் ஏற்படும்.