Homeபரிகாரங்கள்நீண்ட கால திருமண தடையா ? இந்த பரிகாரத்தை செய்யுங்கள் !நிச்சயம் தடை விலகி திருமணம்...

நீண்ட கால திருமண தடையா ? இந்த பரிகாரத்தை செய்யுங்கள் !நிச்சயம் தடை விலகி திருமணம் நடக்கும் !

நீண்ட காலத் திருமண தடைகளை தகர்த்தெறியும் ‘ஹனுமன் வழிபாட்டு’ பரிகார முறை..

திருமணம் நீண்ட காலம் தடைபட்டு கொண்டே வருகிறது என்று சங்கடப்படும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இந்த பதிவு பொருந்தும்.

ஒவ்வொரு மாதம் வரும் பஞ்சமி திதி அல்லது ஏகாதசி திதி ( வளர்பிறை or தேய்பிறை எதுவானாலும்) , ஹனுமனை கீழ்கண்டவாறு வழிபாடு செய்யுங்கள்.

  • வெற்றிலை 27 எண்ணம் வாங்கி கொள்ளுங்கள்.அவை கிழியாத அல்லது முனைகள் உடையாத வெற்றிலைகளாக இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு வெற்றிலையிலும் அவரவர்கள் பெயர், நட்சத்திரம் எழுதி, “விவாஹப்பிராப்தி நமஹ” என்று எழுதி ஒரு வெற்றிலைக்கு ஒரு கொட்டைபாக்கு வீதம் வைத்து மாலையாக கட்டவும்.
  • துளசி மாலையும் ,மேற்கூறிய அந்த வெற்றிலைமாலையையும் ஹனுமனுக்கு சாற்றி, ஹனுமனின் மார்பில் நிறைய வெண்ணெய் சாற்றவும்.
  • பெயர் , ராசி , நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யவும்.27 நட்சத்திரத்தில் உள்ள நபர்கள் தான் கணவன் அல்லது மனைவியாக இருப்பார்கள்.அதனால் தான் 27 வெற்றிலையை மாலையாக அணிவிக்கின்றோம்.
  • ஆணாக இருந்தால் அவர்களுடைய வலது பெருவிரல் ரேகை , பெண்ணாக இருந்தால் அவர்களுடைய இடது பெருவிரல் ரேகையை வெண்ணெயில் தடவி வெற்றிலையின் பின்பக்கம் உருட்டவும். அதன்பிறகுஇந்த மாலையை ஹனுமனுக்கு சாற்றவும்… இவ்வாறாக மொத்தம் 11 முறைசெய்தால் , விவாஹம் நடக்காமல் இருப்பவர்களுக்கு சீக்கிரம் விவாஹம் நடக்கும்.
  • முக்கிரமன விதி.இந்த விரதம் கடைப் பிடிக்கும் காலத்தில் கட்டாயமாக அசைவ உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!