பரணி நட்சத்திரம் – Bharani Nakshatra
பரணி நட்சத்திரம்–பொதுவான குணங்கள்
மணிமாலை போன்றது. கிரீடம் போன்றது. ஆபரணம், பரணம், அபபரணி என்றும் கூறுவர். இது யமன் நட்சத்திரம்.போர், மற்றும் மல்யுத்தம் சம்பந்தமான தொழில் உண்டு.இது இரண்டாவது நட்சத்திரம். அசுபதி போன்றே இதுவும் ஒரே ராசியில் அமைந்த பூரண நட்சத்திரம். செவ்வாய், சுக்கிரனுடன் சம்பந்தப்பட்ட நட்சத்திரம்.
துணிமணிகள்,வாகன போக்குவரத்து தொழில் சம்பந்தப்பட்டது. ரங்கூன், ரஷ்ய நாட்டுத் தொடர்பை உண்டாக்கும். இந்த நட்சத்திரக்காரர்கள் பேராசிரியர்கள், மருத்துவர், மேலாளர், நடிகராய் இருப்பர். கலைஞர்களுக்கு பரிசு தரும் குணம் உள்ளவர்.
இந்தியன் வங்கி போன்று ஒரு தேசபெயர் உள்ள வங்கி தொடர்பு உள்ளவர். கூட்டுக் குடும்ப லாபம் உள்ளவர். நகரத்தார் ஆதரவு பெற்றவர். வேளாங்கண்ணி அருள் உள்ளவர். சாபமிடும் குணம் உள்ளவர். சமையலறையில் அமர்ந்து பாடம் படிப்பார்.
நினைத்ததை சாதிக்க கூடிய மன வல்லமையும் ,கோபமும் ,பிடிவாத குணமும் கொண்டவர்கள்.மனைவியின் மீது அதிக அன்பு கொண்டவர்கள்.சிலருக்கு பெண்களால் பண விரயம் ஆகலாம்.ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற ஆசையும் எதிர் பார்ப்பும் கொண்டவர்கள்.இரக்க குணமும் தர்ம சிந்தனையும் கொண்டவர்கள் ,எளிதில் உணர்ச்சிவசபடக்கூடியவர்கள் .
கொஞ்சம் பயந்த தன்மையும் ,கோழை தனமும் அவ்வப்போது தோன்றி மறையும்.பெரும்பாலும் இவர்கள் இரும்பு சம்மந்தமான தொழிலை செய்ய கூடியவர்கள்.
நட்சத்திரத்தின் ராசி : மேஷம்
நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன்
ராசியின் அதிபதி : செவ்வாய்
நட்சத்திர நாம எழுத்துக்கள் :லி-லு-லே-லோ
கணம் :மனுஷ கணம்
மிருகம் : ஆண் யானை
பக்ஷி :காகம்
மரம் :நெல்லி
நாடி : மத்திய பார்சுவ நாடி
ரஜ்ஜு :ஏறு தொடை
வணங்க வேண்டிய தெய்வம் : துர்கை
இதையும் கொஞ்சம் படிங்க : நவகிரகங்களில் மிக முக்கிய கிரகமான சுக்ரன் பற்றிய சிறப்பு தகவல்கள் !
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குடும்பம்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணியை ஆள்வார்கள் என்ற சொல்லிற் கேற்ப அரசனை போன்ற சுகமான வாழ்க்கை அமையும். காதல் என்ற வார்த்தை இவர்களுக்கு பிடித்தமான ஒன்று. யாரையாவது அல்லது எதையாவது எப்பொழுதும் காதலித்துக் கொண்டே தான் இருப்பார்கள். மனைவி பிள்ளைகளையும், தாய் தந்தையையும் கண்ணை இமை காப்பது போல காத்து கொண்டு இருப்பார்கள். அது போல உணவு விஷயத்திலும் எதையும் ரசித்து ருசித்து உண்பதுடன் சமைத்தவர்களை பாராட்டும் குணமும் உண்டு. இதனால் குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி குடி கொண்டு இருக்கும். சுக வாழ்வு, சொகுசு வாழ்விற்கும் பஞ்சம் இருக்காது.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் தொழில்
எந்த தொழில் உத்தியோகத்தில் இருந்தாலும் மற்றவர்கள். தங்களை பின்பற்றும் வகையில் வழி காட்டியாக இருப்பார்கள். பெரிய பெரிய பதவிகளை வகுக்க கூடிய ஆற்றல் பெற்றவராயினும் தனக்கு கீழ் உள்ளவர்களை அடிமை படுத்தாமல் தட்டிக் கொடுத்து வேலை வாங்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள். சலுகைகளையும் வாரி வழங்குவார்கள். எழுந்து நிற்க முடியாத அளவிற்கு மூழ்கி கொண்டிருக்கும் நிறுவனங்களை கூட தங்களின் சுய முயற்சியால் முன்னேற்றமடைய செய்ய கூடிய அளவிற்கு ஆற்றல் இருக்கும். வணிகவியல்,பல்,கண்,காது ஆகிய துறைகளிலும் வணிக மேலாண்மை, பைனான்ஸ் போன்ற துறைகளில் ஈடுபாடு இருக்கும். மனதில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்கும் என்பதை புரிந்து கொண்டு, பணி என்று வந்து விட்டால் புதுத் தெம்புடன் செயல்படும் திறன் கொண்டவர்கள்.
பரணி நட்சத்திரம் முதல் பாதம்
சற்றென்று கோபம் கொள்ள கூடியவர்கள்.போட்டிகளில் வெற்றி காண கூடியவர்கள்.கல்வியில் பல துறை சம்பந்தமான அறிவை உடையவர்கள்.மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் நீதி தன்மையுடன் நடக்கும் உத்தமர்கள் .
பரணி நட்சத்திரம் இரண்டாம் பாதம்
திறமைகள் மற்றும் சிறந்த கல்வி உடையவர்கள்.எளிதில் எதிரியை வெல்ல கூடியவர்கள்.புத்திசாலித்தனமான பேச்சு திறமையால் பல கீர்த்திகளை பெற்றவர்கள்.நற்குணங்களை வாய்க்க பெற்றவர்கள்.உதவும் மனப்பான்மை உடையவர்கள்.
பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதம்
போராட்ட குணம் உடையவர்கள்.எதிலும் ஜெயம் கொள்ளக்கூடியவர்கள்.ஆடம்பரமாகவும், சொகுசாகவும் வாழ்வார்கள்.உருண்டையான பெரிய கண்களை உடையவர்கள்.திடகாத்திரமான உடல் அமைப்புகளை உடையவர்கள்.
பரணி நட்சத்திரம் நான்காம் பாதம்
அகங்காரம் உடையவர்கள்.பிடிவாதகுணம் மிகுந்தவர்கள்.தீய பழக்கம் உடையவராகவும் இருப்பார்கள்.ஓரளவு கல்வி அறிவு உடையவராக இருப்பார்கள்..
இதையும் கொஞ்சம் படிங்க : திருமண வாழ்வில் சுக்கிரன் ஏற்படுத்தும் தாக்கம் என்ன ?
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வரும் நோய்கள்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிக காம வேட்கை இருக்கும் என்பதால் பால் வினை நோய்கள் தாக்கும். மர்ம உறுப்புகளில் பிரச்சனை உண்டாகும். சர்க்கரை நோய், கிட்னி சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.
மகா திசை பலன்கள்
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிர திசை முதல் திசையாக வரும். பிறக்கும் போதே சுக்கிர திசை என்பதால் இளமை வாழ்வில் சுக வாழ்விற்கு பஞ்சம் இருக்காது என்றாலும் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரி கோணங்களில் அமைந்தோ, ஆட்சி உச்சம் பெற்று அமைந்தோ இருந்தால் மேலும் மேலும் பல நற்பலன்களை அடைய முடியும். கல்வியிலும் நல்ல முன்னேற்றத்தை உண்டாக்கும்.
2-வது திசையாக வரும் சூரிய திசை காலங்களில் சுமாரான நற்பலன்களையேப் பெற முடியும். எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேறுவீர்கள்.
சந்திரன் திசை 3-வது திசையாக வருவதால் இதிலும் சற்று மனக்குழப்பம், ஜல தொடர்புடைய பாதிப்புகள் கொடுக்கும். சற்று சிரமப்பட்டே முன்னேற வேண்டியிருக்கும்.
4-வதாக வரும் செவ்வாய் திசையில் பூமி மனை வாங்கும் யோகம் மனைவி வழியில் அனுகூலம் உண்டு.
ராகு திசை 5-வது திசையாக வரும் மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும் ராகு திசையில் ராகு சுபர் வீட்டில் சுபர் பார்வையுடன் பலமாக அமைந்திருந்தால் வாழ்வில் பலவிதமான முன்னேற்றங்களையும், சமுதாயத்தில் நல்ல உயர்வினையும் பெற முடியும். செல்வம் செல்வாக்கும் உயரும்.
6-வது திசையாக வரும் குரு திசை மாரக திசையாகும். ஆனால் குரு திசை காலங்களே மேலும் முன்னேற்றத்தை அள்ளி தரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. குரு பலம் பெற்று அமைந்து விட்டால் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு பல தெய்வ காரியங்களுக்காக செலவு செய்ய கூடிய அமைப்பு தான தர்மங்கள் செய்யும் அமைப்பு கொடுக்கும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆலயங்கள்
- திருவாரூர் திருத்துறைப்பூண்டி பாதையில் கச்சனத்துக்கு கிழக்கே 14 கி.மீ தொலைவில் உள்ள திருநெல்லிக்கா என்ற ஸ்தலத்தில் உள்ள நெல்லி மரங்களை வழிபாடு செய்வது நல்லது.
- கும்ப கோணத்திலிருந்து சுமார் 8 .கி. மீ தொலைவில் உள்ள பழையாறை வடதளியில் உள்ள சோமநாதரையும், சோமகலாம்பிகையையும் வழிபாடு செய்யலாம்.
- திரு ஆவினன் குடியில் உள்ள ஸ்தல மரமான நெல்லி மரத்தையும் வழிபடலாம்.
- சென்னைக்கு அருகிலுள்ள திருப்போருரில் வீற்றிருக்கும் அருள்மிகு சுயம்பு, முருக பெருமானையும் வழிபடுவது நல்லது.
கூற வேண்டிய மந்திரம்
ஓம் கார்த்யாயின்யை ய வித்மஹே
சன்ய குமாரி தீமஹி
தள்நோ துர்கி பிரசோதயாத்
பரணி நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்
பரணி, பூரம், பூசம், பூராடம் அனுஷம், உத்திரட்டாதி போன்ற நட்சத்திரங்கள் ரச்சு பொருத்தம் வராது என்பதால் இந்த நட்சத்திரகாரர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.
Read also : இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசி பலன்