ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2025 to 2026 : விருச்சிகம்
ராகு கேது பெயர்ச்சி நாள் -2025
வைகாசி மாதம் 4ம் தேதி(18.05.2025) ஞாயிற்றுக்கிழமை இரவு 07.38 மணிக்கு சூரிய உதயாதி 34.38 நாழிகைக்கு திருக்கணிதப்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.
அறிவிற் சிறந்த விருச்சிக ராசி அன்பர்களே! நீங்கள் நல்ல உடற்கட்டும், நீளமான கால்களும், முகத்தில் மச்சமும் கொண்டிருப்பீர்கள். பெண்கள் மீது மோகம் கொண்டவர். பிடிவாத குணமும், படபடப்பும், முன்கோபமும் உடையவர் தான் என்ற அகந்தையிருக்கும். பெற்றோர் மற்றும் சகோதரரால் உதவி பெற்றாலும், கூட, தகப்பனாரையும், காரணமில்லாமல் பகைப்பீர்கள். வியாபாரத்தில் கெட்டிக்காராயிருந்தாலும், ஒரு சில கெட்ட குணத்தினாலும், அனுசரித்துப் போகத் தெரியாததினாலும், தொழிலை நீங்கள கெடுத்துக் கொள்வீர்கள். சோகமான, முகபாவம் உண்டு, நோய் ஏற்பட்டால் உடனே கவனிக்க வேண்டும்.
கடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் இராசிக்கு ஐந்தாமிடத்திலும் கேதுபகவான் உங்கள் இராசிக்கு பதினொன்றாம் இடத்திலும் அமர்ந்து சம பலன்களைத் தந்தார்கள். இராகுவும், கேதுவும் தொழில் முன்னேற்றம் இலாபம் அதிகம் கொடுத்தாலும் சிற்சில தடங்கலும் போட்டி பொறாமைகளும் ஏற்படுத்தினார்கள்.
தற்சமயம் 18.05.2025 அன்று இராகு பகவான் உங்கள் இராசிக்கு நான்காமிடமாகிய கும்ப ராசிக்கும், கேது பகவான் உங்கள் இராசிக்குப் பத்தாமிடம் என்னும் தொழில் ஸ்தானமாகிய சிம்மத்துக்கும் பெயர்ச்சியாகப் போகிறார்கள். இராகு நான்காமிடத்துக்கு, கேந்திர ஸ்தானத்துக்கு வந்தால், மனைவி வழியிலும், சகோதர வகையிலும் செலவு ஏற்படும் அல்லது தாயாரின் உடல்நிலை பாதிப்படையும். தனக்கும் உடல்பிணி, வாகன விபத்து அல்லது வாகனங்கள் வகையில் செலவு, கால்நடைகளுக்குச் சேதாரம் போன்றவை ஏற்படும். தொழில் முன்னேற்றம் காணப்படும். வெளியூர் பிரயாணங்கள் ஏற்படும். கணவன் – மனைவி உறவு நல்ல முறையில் அமையும். ஸ்தல யாத்திரை செல்வீர்கள்.
கேது பத்தாமிடத்துக்கு வரும் போது நல்ல பலன்கள் உண்டாகும். இதுவரை நிறைவேறாமலிருந்த காரியங்கள் வெற்றியடையும். புதிய முன்னேற்றத்துக்குப் பாதை காணப்படும். தொழிலில் இலாபமும் உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். கணவன் – மனைவி உறவும், பிள்ளைகள் உறவினர்,நண்பர்கள் இடையேயும் மகிழ்ச்சி ஏற்படும். அடுத்த சனி மற்றும் குருப்பெயர்ச்சியினால் நன்மைகள் குறைய வாய்ப்புண்டு. வெளியூர் அல்லது வெளிநாடு வாசம், குடும்பத்தைப் பிரிதல், உடல்நலக்குறைவு, பணவிரயம், கடன்தொல்லை ஏற்படக்கூடும். கவனம் தேவை.
வியாபாரிகள்:
புதிய தொழில் முயற்சிகள் சிறிது பிரயாசைக்குப் பின்பு கூடி வரும், பழைய தொழிலையும் அபிவிருத்தி செய்வீர்கள். கடன்கள் வாங்கி, தொழில் செய்வீர்கள். பழைய கடன் அடைபட்டு, புதியகடன் ஏற்படும். புதிய இடங்களுக்குத் தொழிலை இடமாற்றம் செய்வீர்கள். வெளியூரில் தொழில், செய்ய நினைப்பு போகும். பிறர் ஆதரவு கிடைத்து, வெளியூரில் தொழில் அமையும். பேக்டரியில் எதிர்பாரத செலவினங்கள் ஏற்படலாம். ஆனால் வருமானம் அதிகரித்து லாபம் கிடைக்கும். அடுத்து வரும் குருப்பெயர்ச்சியிலும், சனிப்பெயர்ச்சியிலும் கவனமாக நடந்து கொள்ளுங்கள். பணவிரயம், கடன் தொல்லை ஏற்படக்கூடும்.
உத்தியோகஸ்தர்கள்:
விரும்பிய இடமாற்றம், உத்தரவு கிடைக்கும். மேலதிகாரிகள் நல்ல முறையில் மதிப்பு கொடுப்பார்கள். சம்பள உயர்வு உண்டாகும். குடும்பத் தேவைகளை நல்லமுறையில் சமாளிக்க முடியும். அன்பான மனைவி, குழந்தைகளுக்காக ஆபீஸில் லோன் போட்டு, அவர்கள் கேட்டதை வாங்கி கொடுப்பீர்கள்.
பெண்கள் :
விருச்சிக ராசி அன்பர்களே! நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் நீங்கள் நினைத்தபடி குடும்பத்தில் சுபகாரியம் ஒன்று நடைபெறப் போகின்றது. வீட்டிற்குத் தேவையான பொருட்கள். புதிய ஆடை, ஆபரண யோகம் உண்டாகும். கணவர் நீங்கள் விரும்பியதை வாங்கித் தருவார். தாய்வழிச் சீதனமும் கிடைக்கும். ஆனால் உடல்நிலை அடிக்கடி கவலை தரும்.
மாணவர்கள்:
மாணவர்களுக்கு மிகச்சிறந்த காலமாகும். உயர்கல்வி யோகம் உண்டாகும். விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைத்து நன்றாகப் படிப்பீர்கள்.ஒரு சிலர் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பீர்கள். ஆசிரியர்களும் பாராட்டத்தக்க விதமாக உங்கள் கல்வி அமையும். உடல்நலத்தில் கவனம் தேவைப்படும். Campus Interview -ல் வேலை கிடைக்கும்.
கலைஞர்கள் :
பிற இனத்தைச் சேர்ந்தவர்களால் பாராட்டப்படுவீர்கள். அடிக்கடி உள்ளுக்கு வெளியூரிலும் சந்தர்ப்பம் அமையும். ஒரே நேரத்தில் பல பல வாய்ப்புகள் தேடி வருமென்பத எதை படித்து சந்தப்பம் அமையத விட்டு விடுவது என்று தெரியாமல் தவிப்பீர்கள். நல்ல முறையில் பணமும், பேரும், புகழும் உண்டாகும்.
அரசியல்வாதிகள்:
அரசியலில் உங்கள் செல்வாக்கு உயரும். உங்களுக்குப் பெருமையாகவும், அதே சமயத்தில் அதிக அலைச்சலும் ஏற்பட்ட வண்ணமிருக்கும். வருமானத்துக்கு குறைவிருக்காது குடும்பத்தை விடப் பொதுச் சேவையில் தான் அதிக நேரத்தைச் செலவழிப்பீர்கள் குடும்பத்தாரின் அதிருப்தியை தேடிக் கொள்வீர்கள். என்ன செய்வது? காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டுமே!
விவசாயிகள்:
நன்செய், புன்செய் பயிர்கள் நல்ல விளைச்சலையும், இலாபத்தையும் தரும். கால்நடை வாகனத்தில் அவ்வப்போது செலவுகள் ஏற்படும்.
பரிகாரம்:
தேய்பிறை அஷ்டமி தோறும் சிவன் கோவிலில் பைரவரை வணங்கி வாருங்கள். இராகு காலத்தில் துர்க்கை மற்றும் காளியை வழிபடுங்கள்.
ஒருமுறை சிதம்பரம் சென்று தில்லைக் காளியைத் தரிசித்து வந்தால் உத்தமம்.
குருவுக்கு தட்சிணாமூர்த்தியையும், சனிதோஷம் நீங்க, சனிபகவானையும் வழிபட்டு வாருங்கள். நலம் கிடைக்கும்.
ஒருமுறை இராமநாதபுரம் அருகிலுள்ள தேவிபட்டினம் சென்று. கடலுக்குள் ஸ்ரீராமரால் பூஜிக்கப்பட்ட நவக்கிரகங்களை வழிபடுவது நலம்.