திருவாரூர் ராஜ துர்கை அம்மன்
ராஜ துர்கை அம்மன் வரலாறு :
திருவாரூர் மாவட்டத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ராஜ துர்கை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது. தனக்கு நிகரானது இவ்வுலகில் எதுவும் இல்லை என்பதனால் இந்த அம்மன் ராஜதுர்க்கை என்று அழைக்கப்படுகிறாள்.
ஸ்ரீராமர் இலங்கைக்கு செல்லும் முன் ராஜதுர்க்கையை வணங்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்கி வேதங்களையும் புராணங்களையும் குறிப்பால் உணர்த்துகிறாள்.
ராஜ துர்கை அம்மன் சிறப்பு :
பக்தர்கள் தங்கள் வாழ்வில் ஏற்படும் இன்னல்களை சந்தித்து தடைகளை உடைத்து முயற்சியில் முன்னேற தைரியம் மற்றும் மகா சக்தியின் உருவமான துர்க்கையை வழிபடுவது மிகவும் விசேஷமாகும்.
பரிகாரம்:
பூரம், உத்திரம், ஹஸ்தம், சித்திரை, மகம் ஆகிய நட்சத்திரங்களிலும் ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், மகரம், கும்பம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் சிவப்பு மலர்களினால் செய்யப்பட்ட மாலை, புதிய புடவை, பசுநெய் விளக்கு ஆகியவற்றை வைத்து இந்த அம்மனை வழிபடுவது விசேஷம் ஆகும்.
வழித்தடம்:
திருவாரூர் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து கோவில் வழித்தடத்தில் பேருந்துகள் செல்கின்றன
Raja Durgai Temple
திருமஞ்சன வீதி, தெற்கு வீதி, அருகில்
திருவாரூர்