ரிஷப ராசி -ரிஷப லக்னம்
ரிஷப ராசியில் பிறந்தவர்களின் தன்மைகள்:
- பாவம் பழிக்கு அஞ்சுபவன்.
- எல்லோருக்கும் உதவி செய்பவன்.
- தன் தாய் தந்தையரை தன்னை விட அதிகமாக நேசித்த பாதுகாப்பான்.
- தன் சத்துருக்களை வென்று ஒடுக்க வல்லவன்.
- பிறருக்கு இரக்கபட்டு தன் சம்பாதித்த பொருளை தாராளமாகக் கொடுத்து உதவும் பெருந்தன்மை உடையவனாகவும் இருப்பான்.
- இவன் எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக இருப்பவனாகவும், கலை அனுசரணை உடையவனாகவும் இருப்பான்.
- ராசி அதிபதி சுக்கிரன். கலைகளுக்கும் அதிபதி காரகன்.
- ராசி மண்டலத்தில் இது இரண்டாவது ராசி ஆகும்.
- இதன் அதிபதி சுக்கிரன்.
- இது பஞ்சபூதங்களில் மண்.
- ஸ்திர ராசி.
- பெண்பால், ஈரத் தன்மை உடையது.
- அரை சுபத்துவம் உடையது.
- இது ப்ரஷ்ட உதய ராசியாகும்.
- இதன் வடிவம் காளை.
- இங்கு சந்திரன் உச்சம்.
- இந்த ராசிக்காரர்கள் நிறைந்த பொறுமைசாலிகள்.
- எவ்வளவு உழைப்புக்கும் அஞ்சாதவர்.
- கடைசி வரை பொறுமை சாதிக்கும் இவர்கள் கோபம் வந்துவிட்டால் எரிமலை ஆகிவிடுவர்.
- அடக்கமாக இருந்தாலும் முரடர்.
- இது ஸ்திர ராசி ஆகையால் திடசித்தம் உண்டு.
- பணத்தில் சிக்கனம் உண்டு.
- போஜனப் பிரியர்.
- இனிப்பு விரும்பி உண்பர்.
- சுக சௌக்கியபிரியர்.
- வாழ்க்கையில் எல்லா சௌரியங்களையும் அனுபவிப்பர்.
- எப்போதும் உற்சாகம், பந்து ஜனங்களால் விரும்பப்படுபவர்.
- அதிர்ஷ்டக்காரர்.
- திருமகள் விலாசம் நிரம்பப் பெற்றவர்.
- வாகனம், வீடு தோட்டம் முதலிய சொத்துக்கள் உடையவர்.
- நல்ல வாக்கு லாவண்யம் குரலினிமை உடையவர்.
- மற்றவர் அபிப்பிராயங்களுக்கு இணங்காதவர்.
- நிதானமாகத்தான் வாழ்வில் முன்னேறிக் கொண்டிருப்பவர்.
- எதையும் நிதானமாக திட்டமிட்டு செயலாற்றுபவர்.
- காதல் விவகாரங்களில் அதிக ஈடுபாடு உண்டு. ஆனால் நிதானமாகவே செல்வர்.
- முடிவு செய்த பின் அதை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.
- பாலுணர்வு இவர்களுக்கு மிக அதிகம். அதை பலவழிகளிலும் பூரண திருப்தியுடன் அனுபவிப்பர்.
- நல்ல கலை உணர்வு உண்டு.
- சங்கீத நாடகப் பிரியர்.
- சினிமா நடிப்பு துறையும் இவர்களுடையது தான்.
- பணம் சம்பாதித்து அதை உல்லாசமாக செலவழிக்கவும் தெரிந்தவர்.
உருவம் :
- நடுத்தரமான சதைப்பற்றுள்ள தோற்றம் உள்ளவர்.
- அகன்ற நெற்றி, கருகருவென சுருள் சுருளான மயிர், பெரிய கண்கள், அழகிய முகம், வட்டமானது, சிவந்த பளபளக்கும் மேனி, ஆண்களும், பெண்களும் நளினத்தையும், அழகு, கவர்ச்சி இவற்றையும் உடையவர்.
- அப்படியானால் பெண்களைப் பற்றி கேட்க வேண்டியதே இல்லை.
- இந்த ராசி பெண்கள் பூரண அழகிகள். பொன்னொளி மேனி, நல்ல புஷ்டியான எடுப்பான கவர்ந்து இழுக்கும் தோற்றம், இவர்கள் அசைவும் ஒயிலும் தனிப்பட்டவை இவர்கள் பேச வேண்டியது இல்லை இவர்கள் உருவ அழகிற்கே ஆண்கள் அடிமை ஆகி விடுவர்.
அமையும் வேலைகள் :
- நளின உழைப்பினர்.
- சொகுசு வேலைகளை செய்ய விரும்புவார்கள்.
- உல்லாச பொருள்கள், வாணிகம், கம்பளி, பட்டு, வியாபாரம், சோப்பு, சென்ட் போன்ற வாசனைப் பொருட்கள் இவற்றின் மூலம் நிறைய பொருள் ஈட்டுவர்.
- பேங்க் நிர்வாகம், நீதித்துறை அலுவல்கள், பந்தயம் நடத்துபவர்கள், ஸ்டாக் புரோக்கர்கள், ரேஸ் என்று வெல்லுதல் போன்றவற்றில் அதிக ஈடுபாடு உண்டு.
- உழவு விவசாயம் இவற்றிலும் இவர்களுக்கு லாபம் உண்டு என்பதை இவர்கள் ராசி (மண்) ராசியகையாலும் இந்த ராசியின் உருவம் காளை என்பதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
வீட்டு நிலை:
- இதில் பிறந்த ஆண்கள் நல்ல வீட்டு வாழ்வு உடையவர்கள். எல்லாம் வசதியும் செய்து வைப்பார்கள்.
- இந்த ராசி பெண்கள் “மனைக்கு விளக்கம் மடவார்” என்ற வாக்கிற்கு உதாரணமாய் இல்லத்தரசிகளின் சிறந்தவர்கள்.
- இவர்களை அடைந்த கணவன்மார்கள் பாக்கியசாலிகள்.
- ஏனென்றால் வீட்டுக்குள் எல்லாத்தையும் கவனித்துக் கொள்வார்கள்.
- உருவத்தில் கவர்ச்சியும் உழைப்பில் சலிப்பில்லாத இவர்களுக்குள் கணவன்மார்கள் அடங்கி மகிழ்வதில் வியப்பில்லை.
- தாயாகவும் மனைவியாகவும் இருவகை கடமைகளை ஒரேசமயத்தில் செய்வதில் மிக சமர்த்தர்.
- கொஞ்ச நேரத்தில் இவர்களுக்கு சினம் வராது. இதனாலேயே இவர்களை ஆண்கள் உரிமையாக்கிக் கொள்ள விரும்புவர்.
பொதுவான தகவல்கள் :
- அதிர்ஷ்ட கிழமை-வெள்ளி அடுத்தது திங்கள்.
- அதிர்ஷ்ட நிறம்-எல்லா வெளிர் நிறங்கள்.
- அதிஷ்ட எண் 6,5
- அதிஷ்ட கல்-ரத்தினம், வைரம் .
- வைரம் அணிய வசதி இல்லாதவர்கள் வெள்ளியில் மோதிரம் அணியலாம்.
ரிஷபம் லக்னமாக வந்தால் அதன் பலன்:
- ஸ்தூலதேகவான், களஸ்திர தோஷம், சத்தியவான், சுபகாரியபரன், பிறர் சொத்தை கிரகிக்க வல்லவன். மனோகபடி, புருஷ வசியன், வஸ்திராபரணமுள்ளவன்.
- குணதோஷமறிவன். அடிமை உள்ளவன்,
- பிற்கால புத்திரருடையவன்.
- 15, 13, 16, 19, 20 இந்த வயதுகளில் சுரம் கண்டத்தால் வியாதி, பயம், சிரங்கு இவைகளால் பீடை.
- இந்த லக்கினத்தை சுபகிரகங்கள் பார்த்தால் 77 வயது வரை இருப்பான்.
- சூரியனும் சனியும் நல்லவர்கள்.
- சனி ஒருவனே மேலான ராஜயோகம் கொடுப்பான்.
- சந்திரனும் வியாழனும் சுக்கிரனும் பாபிகள், சந்திரன் வியாழன் செவ்வாய் மாரகன். புதன் கொல்லான். வியாழன் முதலானோர் கொல்லுவர்.
- மாரக ஸ்தானம் ஆகிய 2,7,8,12 ல் மரணத்திற்கு சமமான கண்டத்தை கொடுப்பார்கள்.
- சந்திரன் வியாழன் கிரகங்களை ஆராய்ந்து அவர்கள் நிலைகளை அறிந்து சொல்லவும்.
இந்த லக்னத்திற்கு நல்லவர்கள் கெட்டவர்கள்:
- 9, 10-க்குடைய சனி ஒருவனே உத்தம ராஜ யோககாரகன். சுக்கிரன் 6க்குடையவன் ஆனாலும் லக்னாதிபதியாகையால் அசுபம் குறைவு.
- புதன் 2,5 குடையவன் ஆகையால் ராஜயோககாரன். புதன் சுக்கிரன் இருவரும் வலுத்தால், புலவன், கலைஞன்.
- சந்திரன் 3 குடையவன் அதனால் அசுபன்.
- சூரியன் 4க்குடையவன் ஆகிலும் சுபனே.
- செவ்வாய் 7, 12-க்குடையவன் ஆகையால் அசுபன்
- குரு 8 ,11-க்குடையவர் ஆகையால் அசுபன்
சுப யோகங்கள்:
- சூரியன்+புதன்
- சூரியன்+சனி
- சூரியன்+சுக்கிரன்
- புதன்+சுக்கிரன்
- புதன்+சனி
- சுக்கிரன்+சனி
- இந்த லக்னத்திற்கு குரு செவ்வாய் மாரகன் சந்திரன் குரு அசுபன் சனி ஒன்பதாம் அதிபதி என்றவகையில் பாதகாதிபதி.