சகட யோகம்:
சகட யோகம் ஜாதகத்தில் ஒருவருக்கு ஆறாம் இடத்தில் சந்திரன் இருந்தாலும் குரு பகவான் நின்ற ராசிக்கு 6,8,12 ராசிகள் அல்லது இடங்களில் சந்திர பகவான் இருந்தால் அவருக்கு “சகட யோகம்”(Sagada Yogam) அல்லது “தோஷம்” இருக்கிறதென்று பொருள்.
இவ்விருகிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகம் இந்த 6,8,12 ஆம் இடங்கலில் அக்கிரகங்களின் உச்ச ராசி அல்லது வீட்டிலிருந்தால் சகடை தோஷம் இல்லை எனக் கொள்ளலாம்.
சகட யோகத்த பொருத்த வரை
இரண்டு வகை உண்டு
1. ஏழ்மை- வசதி- ஏழ்மை
2. வசதி – ஏழ்மை – வசதி
அதாவது
சகட யோகம் (Sagada Yogam) உள்ள ஜாதகர்
குரு, சனி நட்சத்திரத்திம்
புனர்பூசம், பூசம், அனுசம், விசாகம், பூரட்டாதி,உத்திரட்டாதி
இந்த நட்சத்திரத்தில பிறந்தால்
ஏழ்மையில வாழ்ந்து படி படியாக முன்னேறி
மத்திம வயதில் பெரிய கோட்டிஸ்வராக மனிதராக உயர்ந்து
திரும்பவும் படி படியா பல
பிரச்சனைகளை நோய் மூலமாகவும், பிள்ளைகள் மூலமாகவும், சேர்த்த சொத்து மூலமாக தோன்றி
பழைய நிலைய தரும்.
2.சரி இரண்டாவது வகை பார்ப்போம்.
அதாவது சகட யோகம்(Sagada Yogam) உள்ள ஜாதகர்
புதன், கேது, சுக்கிரன் நட்சத்திரமான
அசுவினி, பரணி, ஆயில்யம் 4ஆம் பாதம், மகம், பூரம், கேட்டை 4ஆம் பாதம், மூலம், பூராடம், ரேவதி 4ஆம் பாதம்
பிறந்திருப்பார்கள்.
இவர்களின் ஆரம்ப வாழ்க்கை மிக பெரிய பணக்கார வாழ்க்கைய அமைத்து கொடுக்கும், கஷ்டமே தெரியாம வாழ்ந்தவார்கள், பணத்தின் அருமை தெரியாது
ஏனென்றால் வரவு அப்படி அமைத்து கொடுக்கும்
இந்த சகட யோகம்(Sagada Yogam)
ஆனால்
நடுத்தர வயதில் கையேந்த வைத்து விடும், நடுத்தெருவில்
நிறுத்தி விடும்.
பிறகு படி படியாக சகட யோக சக்கரம் மேல செல்ல ஆரம்பித்து பழைய ஆரம்ப கால பணக்கார வாழ்க்கைய கொடுத்து விடும்.
ஆக இவர்கள் வாழ்வில்
இரண்டு முறை அனுபவிக்கின்றனர் ராஜ யோகத்தை.
மேலும் அடுத்த யோகத்தில் சந்திப்போம்…..