மேஷம்
(அசுவினி ,பரணி ,கிருத்திகை -1ம் பாதம் )
மேஷ ராசிக்காரர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் அமர்ந்து உத்தியோகத்தில் பிரச்சனைகளையும், புதிய முயற்சிகளில் முட்டுக்கட்டைகளையும் கொடுத்து வந்த சனி பகவான், இப்போது லாப வீட்டில் ஆட்சி பெற்று அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். சோர்ந்து இருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும்.
நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். திடீர் பணவரவு உண்டாகும். சிலருக்கு வேலை மாற்றம், சம்பள உயர்வு கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.
நண்பர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். குறிப்பாக ரியல் எஸ்டேட், பதிப்பகம், எலக்ட்ரானிக் ஹார்டுவேர் ஷாப் வைத்திருப்பவர்கள் நல்ல லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். ஐ.டியில் வேலை பார்ப்பவர்கள் பணி செய்யும் நிறுவனத்தில் இருந்து விலகி சம்பளம், சலுகைகள் அதிகம் உள்ள வேலைக்கு மாறுவீர்கள்.
சனிபகவான் பார்வை பலன்கள்
சனிபகவான் உங்கள் ராசி மற்றும் ராசிக்கு 5,8ம் இடங்களை பார்வை செய்வதால் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் சந்திராஷ்டம நாட்களில் டென்ஷன், கோபம்,அலர்ஜி வரலாம். பணி செய்யும் இடத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் குறித்த அச்சம் வந்து நீங்கும்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகளின் போக்கில் சில மாற்றத்தை உணர்வீர்கள். அதனால் பிள்ளைகளிடம் சற்று அனுசரித்து செல்லவும், பிடிவாதம் பிடிக்க வேண்டாம். படிப்பு உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரலாம். சிலர் குலதெய்வ பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டை பார்ப்பதால் அயல்நாடு பயணம் சாதகமாக அமையும். பூர்வீக சொத்தில் பிரச்சனைகள் வரலாம். சிலர் திடீரென வேலை மாற்றலாகி வெளியூருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல வேண்டி வரும். சமயத்தில் சிலருக்கு எதிர்பாராத செலவுகள் வரலாம்,அதனால் எதையும் திட்டமிட்டு செய்யவும்.
இதையும் கொஞ்சம் படிங்க : சனி தோஷம் நீக்கும் தசரத ஸ்லோகம்
பலன் தரும் பரிகாரம்
சனிக்கிழமை சனி ஓரையில் சென்னை பொழிச்சலூரில் இருக்கும் நவகிரக சனி ஸ்தலத்திற்கு சென்று 8 நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரவும்.