சனி பெயர்ச்சி பலன்கள் 2025 – சிம்மம்
(மகம்,பூரம்,உத்திரம் 1ம் பாதம் )
சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025
இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சிக லக்னத்தில் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
சிம்ம ராசியும் சனியும்
சிம்ம ராசிக்கு சனி பகவான் 6 மற்றும் 7-ஆம் அதிபதி. இவர் இவ்வளவு நாளும் 7-ஆமிடத்தில் அமர்ந்து இருந்தார். தற்போதைய கோட்சார மாற்றத்தில், 8-ஆமிடம் மாறி அமர்ந்து, அஷ்டமச் சனி ஆகிறார்.
சிம்ம ராசி
இதன் அதிபதி: சூரியன்
உருவம்:சிங்கம்
வகை: ஸ்திர ராசி
தத்துவம்: நெருப்பு
நிறம்: குங்கும சிவப்பு
கடவுள்: பிரம்மா
குறிப்பு : இங்கு எந்த கிரகமும் உச்சம் ,நீசம் பெறுவது இல்லை
சனி அமர்ந்த இடத்தின் பலன்கள்
சனி பகவான், சிம்ம ராசியின் 8-ல் அமர்கிறார். 8-ஆமிடம் என்பது அவ்வளவு நல்ல ஸ்தானம் கிடையாது. 6.8,12 என இவ்விடங்களை மறைவு ஸ்தானம் என்பர். அதிலும் எட்டாமிடம் என்பது மகா துர் ஸ்தானம் ஆகும். ஏற்கனவே சிம்ம ராசி அதிபர் சூரியனுக்கும் சனி பகவானுக்கும் ஆகவே ஆகாது. எனவே சனி, 8-ஆமிடத்தில் அமர்ந்து தரும் பலன்கள் ரொம்ப சுமாராக இருக்கும்.
2025 மார்ச் 29 முதல் ஏப்ரல் 27 வரை
சிம்ம ராசியின் 8-ஆமிடத்தில், சனிபூரட்டாதி நட்சத்திரம் வழியே பலன் – தருவார். இந்த மாதம், உங்கள் பூர்வீக சொத்தில் ரொம்ப வில்லங்க செய்தி வரும். உங்கள் வாரிசின் வேலை ஒரு எதிர்மறை நிகழ்வை சந்திக்கும். சிம்ம ராசியாரின் காதல், அவமானத்தையும், அடியையும் ஒருங்கே பெற்றுத் தரும் சில பூர்வீக சொத்து களை விற்று, கடனை கட்டி முடித்து விடுவீர்கள் சில சிம்ம ராசியாரின் திருமணங்களின் போது, பழைய காதல் அல்லது திருமண விஷயம் தெரியவந்து, ரொம்ப இக்கட்டான சூழ்நிலைக்கு சென்று விடுவீர்கள்.
உங்கள் வாழ்க்கைத் துணை, பெரிய சிக்கலை உண்டாக்குவார். சினிமா கலைஞர்கள், பெரிய சங்கடத்தில் மாட்டிக்கொள்வர். பங்கு, வர்த்தகம் பக்கம் கூட தலை வைத்து படுக்கக்கூடாது. விளையாட்டு வீரர்கள் அடிபடக் கூடும். உங்கள் மாதச் சம்பள வேலையை சூதானமாக காப்பாற்றிக் கொள்ளுங்கள் சிம்ம ராசியின் 8-ஆமிடத்தில் 8-ஆம் அதிபதியின் சாரத்தில் செல்லும் சனி இதற்கு மேலும் வச்சு செய்வார்.
2025 ஏப்ரல் 27 முதல் 2026 மே 17 வரை
இப்போது சிம்ம ராசியின் 8-ஆமிடத்தில், உத்திரட்டாதி நட்சத்திரம் மூலம் சனி பகவான் பலன்களை கொடுக்க ஆரம்பித்து விடுவார். இந்த நேரம் தொடங்கியவுடன், வீடுகளில் அதிலும் சிம்ம ராசியாரின் இல்லங்களில் கணவன்- மனைவி சண்டை ஆரம்பித்து விடும்.சண்டை என்றால் சாதாரண சண்டை அல்ல மல்யுத்த போட்டி மாதிரி அடித்துக் கொள்வார்கள். சிலருக்கு, ரகசிய குடும்ப விஷயம் அம்பலமாகி, பெரிய வாக்குவாதமும், அவமானமும் ஏற்படும். சிலரின் காதல் விஷயங்கள் தெரிந்து அது ஒருபக்கம் அழ வைக்கும். சிலர் விபரீத முடிவு எடுக்க முயற்சி செய்து காப்பாற்றப்படுவார்கள். (இது சனி 8-ல் இருப்பதால் விபத்தையும் கொடுத்து காப்பாற்றவும் செய்ய முடியும்).
சிலர் எங்காவது அடிபட்டு, ஞாபக மறதியை சந்திப்பார்கள். நீங்கள் சந்திக்கும் மனிதர்கள். உங்களை ஏமாற்றாமல் அந்த இடத்தை விட்டு நகர மாட்டார்கள் வேலை, திருமணம். காதல், கலைத்தொழில் என எல்லாவற்றிலும் ஏமாற்றம் வஞ்சகம் இவை சந்தித்து, மனம் மிக விரக்தி அடைந்துவிடும். இக்காலத்தில், தம்பதிகளில் ஒருவருக்கு, வேலையில் இடமாற்றம் வந்தால், உடனே இடம் பெயர்ந்து, விலகி இருங்கள். இதுவே பரிகாரம் ஆகும்.
2026 மே 17 முதல் 2027 ஜூன் 3 வரை
இந்நேரத்தில், சிம்ம ராசியின் 8-ஆமிடத் தில் சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு தனது பாதையை மாற்றிக்கொள்வார் இந்த பொழுது ஆரம்பித்தவுடன் சிம்ம ராசி அரசியல்வாதிகள் வழக்கு தண்டனை இவற்றுக்கு பயந்து பதுங்கு குழிக்குள் பதுங்கி மறைந்து வாழ்வர் சில அரசியல் வாதிகள், தங்கள் ஆசூராக்கியத்தை நன்கு கவனிக்கவேண்டும். ஒரு சிம்ம ராசி அரசியல்வாதி கண்டத்தை சந்திப்பார்.
சிம்ம ராசியார் கூடியமட்டும் தொலைதூரப் பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். கண்டிப்பாக போக வேண்டும் எனில் ஒரு நல்ல இன்சூரன்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளவும். சிலரின் பேச்சு குணநலம், சனிபகவான் சிம்ம ராசியாரின் பணவரவு, காசு பெருக்கத்தை சுத்தமாக கட் பண்ணி விடுவார். அதனால், சனிப்பெயர்ச்சி ஆரம்பிக்கும் முன்னரே நிரந்தர வருமானம்வரும் வழிவகைகளை செயதுகொள்ளவும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் கவனம் தேவை. பேசும்போது சொற்களில் கவனம் தேவை. ஏனெனில் எல்லா வார்த்தைகளையும் கொல்லத் செய்து விடுவார் சனிபகவான்.
சனியின் பார்வை பலன்கள்

சனிக்கு விசேஷ பார்வை பலனுண்டு அவர்தான் அமர்ந்த இடத்திலிருந்து 3,7 10-ஆம் வீடுகளை அவதானிப்பார்.
சனியின் 3-ஆம் பார்வை பலன்
சிம்ம ராசியின் 8-ல் அமர்ந்த சனிபகவான், தனது மூன்றாம் பார்வையால், சிம்ம ராசியின் 10-ஆம் வீடு எனும் தொழில் ஸ்தானத்தை பார்க்கிறார். ஏற்கனவே நொந்து போயிருக்கும் சிம்ம ராசியினர். தொழில் பாதிப்பை அடைவர். ஆனால் மற்ற ராசிக்கார்களுக்கு இந்நிலை கொடுக்கும் பாதிப்பை சிம்ம ராசியாருக்கு ரொம்ப கொடுக்க மாட்டார் சிம்ம சூரியன் சனிபகவானுக்கு எதிரியாகவே இருந்தாலும், 10-ஆம் வீடு என்பது தொழில் ஸ்தானம் சனி என்பவர் தொழில் காரகர். எனவே தன்னுடைய காரக வீட்டை சனி கண்டிப்பாக கெடுக்க மாட்டார். எனவே சிம்ம ராசியார் தங்கள் தொழில் கெட்டு போய் விடுமோ என பயங்கொள்ள வேண்டாம்.
என்ன ஒன்று, ரொம்ப தொழில் விருத்தி இருக்காதேயொழிய, கெடவும் கெடாது இது எவ்வளவோ பரவாயில்லை அல்லவா? இன்னொரு நோக்கில் சிம்ம ராசியாரின் வீட்டில் வயதானவர்கள் இருந்தால், சற்று சுவனமாக – எச்சரிக்கையாக கவனித்துக் கொள்ளுங்கள் அரசியல் சம்பந்தம் கொண்டோர் கண்டிப்பாக தேர்தலில் நிற்க வேண்டுமோ என பல முறை யோசியுங்கள் அதைவிட நோட்டாவிற்கும் குறைவாசு ஓட்டு வாங்கினால் ரொம்ப அசிங்கமாகிவிடும் கவனம் தேவை.
சனியின் 7-ஆம் பார்வை பலன்
சனி தனது ஏழாம் பார்வையால் சிம்ம ராசியின் 2-ஆமிடத்தை இறுக்கத்துடன் நோக்குகிறார். ஏவெனில் 2-ஆமிடமான காக பணபுழக்கம் சனிபகவானுக்கு ஒத்துவராத விஷயங்கள் எனவே 2-ஆமிடத்தை பார்த்தவுடன், அதன் ஓட்டத்தை உடளே தடை செய்து விடுவார். முன்னைப்போல. சிம்ம ராசியார் கை குளிர செலவழிக்க இயலாது. கட்டும் செட்டுமாக இருந்தாக வேண்டிய சூழ்நிலை வந்துவிடும். உங்கள் வாக்கும் தொடர்ச்சியாக பேச முடியாமல், அவ்வப்போது திணறுவது இருக்கும். சிலருக்கு அவர்களின் பெற்றோர் வேறிடம் செல்லும் நிலை ஏற்படும் அல்லது நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வேறிடம் செல்லக் கூடும். இதனால் குடும்பம் சார்ந்த மனநிம்மதி கெடும்.
பணவரவு குறைவினால் எவ்வித சொத்தும் வாங்க இயலாது. உங்களில் சிலர் கண் பிரச்சினைக்கு ஆளாகலாம். அல்லது பல் செட் மாட்ட வேண்டி வரலாம். இவ்விதம் சளியின் பார்வை 2-ஆமிடத்திற்கு படுவதால் ஏற்படும் பணவரவு தாமதம் உங்களை கஞ்சபயலாக மாற்றும். இந்த கஞ்சத்தனம் பண செலவை கட்டுப்படுத்தும். இந்த செலவு கட்டுப்பாடு உங்கள் கடனை அடைக்கச் செய்துவிடும் என்பது ஆச்சர்யமான விஷயம். கூடவே உடல்நலனும் மேன்மை அடையும். செலவு செய்யாதவர்கள் அருகில் ஈ காக்காகூட வராது என்பது நடப்பு உண்மை. எனவே எதிரிகளும் அருகில் வரமாட்டார்கள். இது வெல்லாம் சனி, உங்களின் 6-ஆம் அதிபதியாக எட்டில் மறைவதால் உண்டாகும் பலன் என்று கொள்ளலாம்.
சனி, எட்டில் அமர்ந்தாலும், சிம்ம ராசிக்கு கொஞ்சம் நன்மை தருவது ஆச்சர்யம்தான்
சனியின் 10-ஆம் பார்வை பலன்
சனி தனது பத்தாம் பார்வையால், சிம்ம ராசியின் 5-ஆம் வீட்டை அவதானிக்கிறார். 5-ஆமிடம் என்பது புத்தி, வாரிசு மந்திரி பதவி, காதல், கலை உலகம், பக்தி என இவற்றைக் குறிக்கும்.
சனி சிம்ம ராசியின் 8-ல் வந்து அமர்ந்த வுடன், முதல் வேலையாக உங்களின் காதலைகட் பண்ணி விடுவார் அப்புறம்தான் மற்ற வேலைகள் பிறகு உங்கள் மந்திரி பதவியின் நாற்காலியை புடுங்கிவிடுவார்.
கலை உலகினர். எவ்வளவு திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் அவதிப் படுவர் இதன் காரணம். உங்கள் திரை உலகில் உங்களைப் பற்றிய ஒரு வதந்தி காரணமாக அமையும். அது உங்களின் உடல்நலம் மற்றும் உங்களின் ஒழுக்கம் சார்ந்த வதந்தியாக இருக்கும்.
பங்கு, வர்த்தகம், பக்கமும் தலை வைத்து படுக்ககூடாது. தெய்வ பக்தி விரதம் உபாசனைகள் என இவை எல்லாம் கொஞ்சம் மட்டுப்படும்.
சிம்ம ராசி குழந்தைகளின் கல்வி, புத்திக் கூர்மை. மேதாவித்தனம் என இவை ரொம்ப பிரகாசமின்றி அமையும். நாடகம், சங்கீதம், நடனம் என இவை சார்ந்தவர்கள் சற்று சுணங்கி போவார்கள். போட்டி, பந்தயங்களில் விளையாட்டு தேர்வு என இவற்றில் வெற்றி கடைப்பது குதிரைக் கொம்புதான்.இவ்விதம் சிம்ம ராசியின் 5-ஆமிடத்தைப் பார்த்த சனிபகவான், இவர்களை சற்று லூசுமாதிரி மாற்றிவிடுவார்.
சிம்ம ராசிக்கு சனி, அஷ்டம சனி ஆகி ரொம்ப சுமார் பலன்கள் கொடுத்து உங்களை பாடாய்படுத்துகிறார் என்ன ஒன்று உங்கள் கடன் நோய்களை அழிக்கிறார். அது பெரிய விஷயமாயிற்றே.
சனிக்கிழமைதோறும் சனிபகவானையும், ஆஞ்சநேயரையும் வணங்கவும். சிம்ம ராசியாருக்கு அஷ்டம சனி நடப்பதால் உங்களுக்கு உதவ ஆயிரம் ஆட்கள் தேவைப்படும். நீங்கள் எங்கே பிறருக்கு உதவு முடியும்.
சிம்ம ராசி மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
உடல் நலம் மிக கவனமாகப் பார்க்க வேண்டும், உறுப்பு செயல் இழப்பு அளவுக்கு பாதிப்புகள் உண்டாக்கலாம். உத்தியோகத்தில் அதிக சிரமங்கள் வரும். இது தவிர வேலை இழப்பு நடக்கலாம். கடன் கொடுத்திருந்தால் வசூல் ஆகாமல் இழுத்தடிக்கப்படும். விரயமாக மாறலாம்.
வழக்கு , போலீஸ் போன்ற தொந்தரவுகள் இருந்தால் சுமுகமாக முடியாமல் பெரிய அளவில் பிரச்சனை வரும். அதிலும் குடும்ப உறவுகளுக்கு இடையில் வழக்கு எனில் பெரிய பிரச்சனை உருவாகும் வாய்ப்பு உள்ளது. விவாகரத்து போன்ற வழக்குகள் சாதகமாக முடியாமல் எதிர் தரப்பாக தீர்ப்பு ஆவதற்கு வாய்ப்பு உண்டு.
இவையாவும் சனி பூரட்டாதி 4 ம் பாத சாரத்தில் பயணிக்கும் காலம் நடக்கும்.
சனி உத்திரட்டாதி சாரம் அடையும் போது , ஆபத்து விலகும். உடல் நலம் மேன்மை அடையும். மூச்சு விடும் அளவு நிவாரணம் கிடைக்கும். பெரிய மனிதர்கள் உதவி அவசியம் கிடைக்கும் சட்ட உதவியும் பண உதவியும் தாராளமான அளவில் கிடைக்கும். ஆனால. கடன் வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நண்பர்கள் விரோதிகளாக மாறும் காலகட்டம் என்றும் சொல்லலாம் ஆகவே யாரை நம்புவது யாரை நம்ப வேண்டாம் என்ற மிக முக்கியமான விஷயத்தில் தெளிவான முடிவு எடுத்து அதன்படி நடக்க வேண்டிய காலகட்டம்.
யதார்த்தமாக சில விஷயங்களை கேள்வி பட்ட அளவிலேயே நம்ப வேண்டாம் இது சனி உத்திரட்டாதி சாரத்தில். சஞ்சாரம் செய்யும் போது மகம் நட்சத்திரத்தைச் சேர்ந்த அன்பர்கள் மிகவும் கவனமுடன் கடைப்பிடிக்க வேண்டிய விஷயமாகும்.
சனி உத்திரட்டாதி சாரத்தில் பயணம் செய்யும்போது மகம் நட்சத்திர அன்பர்களுக்கு வேலையில் சின்ன அளவில் பின்னடைவு பதவி கீழ் இறங்குதல் போன்றவை நிகழலாம் ஆனால் அவை அனைத்தும் நன்மைக்கே என்று எடுத்துக் கொள்ள வேண்டும். சனி உத்திரட்டாதி சாரத்தில் சஞ்சாரம் செய்யும் போது பெரிய அளவில் பணம் முதலீடுகள் செய்வதை தவிர்க்கலாம் பாதுகாப்பு இல்லாத அளவில் பணம் இழப்பு நடக்க கூடிய காலம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பங்கு சந்தை போன்ற விஷயங்களில் அதிக அறிவு கொண்டவர்களும் தடுமாறி சறுக்கல் ஏற்படும் காலம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் ஆகவே பலமுறை யோசித்த பிறகு முதலீடுகள் செய்ய வேண்டும்.
கை பொருள் இழக்க வேண்டி வரும் திருட்டு நடக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஆகவே மிகவும் கஷ்டப்பட்டு சேர்த்த பொருள் மீது ஒன்றுக்கு பலமுறை கவனமான எச்சரிக்கையோடு முடிவு எடுக்க வேண்டும். சிலருக்கு திடீர் பயணங்கள் மூலம் அனுகூலமான பண வரவு கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது ஆகவே பயணங்களை ஏற்பதில் சுணக்கம் காட்ட வேண்டாம் அதே நேரம் பயணத்தில் விபத்து போன்றவை நடக்காமல் இருப்பதற்கு எச்சரிக்கை எடுத்துக்கொண்டு பயணிக்கவும் பயணத்தில் நன்மை உண்டு என்பதை மனதில் வைக்கவும்
கணவன் மனைவி உறவு பண பிரச்சனையால் சிக்கலை சந்திக்க கூடும் ஆகவே கணவன் மனைவி உறவு பண விஷயத்தில் ஓப்பனாக பேசிக் கொள்வது நல்லது
இதுவரை மகம் நட்சத்திர அன்பர்கள் அனுபவித்த கஷ்டங்கள் எல்லாம் அதாவது சனி பூரட்டாதி நட்சத்திர சாரத்திலும் உத்திரட்டாதி நட்சத்திர சாதத்திலும் மீன ராசியில் பயணித்திருக்கும் போது அனுபவித்த கஷ்டங்கள் எல்லாம் சனி அதே மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் பயணம் செய்யும்போது நேர் மாறாக மாறி அதிர்ஷ்டம் கூடி பணவரவு அதிகரிக்கும். உடல் நலம் மேம்படும் பெரிய அளவில் உதவிகள் கிடைக்கும் கடன் கேட்போருக்கு தாராளமாக கடன் உதவி கிடைக்கும் ஆனால் அதை கவனமாக பயன்படுத்தும் எண்ணம் வராது. ஆகவே அதில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்
சிம்ம ராசி பூரம் நட்சத்திரத்தில் பிறறந்தவர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
சனிப்பெயர்ச்சியை கண்டு சிம்ம ராசி பூரம் நட்சத்திர அன்பர்கள் பயம் கொள்ள வேண்டாம். இந்த சனி பெயர்ச்சி நிச்சயம் ஆதாயத்தை கொண்டு வரும் முயற்சி என்று சொல்லலாம் சற்று தாமதம் ஆனாலும் பல விஷயங்கள் நன்மையாக நடப்பதற்கு பலமான காரணம் சனி பெயர்ச்சியால் உருவாகிறது
அனுகூலமாக நடக்கிறது என்பதை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு அவசரப்படுகின்றவர்கள் நஷ்டம் அடைவார்கள் என்பதையும் சனிப்பெயர்ச்சி காண்பிக்கிறது
காரணம் கோச்சார ரீதியாக சனி வக்கிரகதி அடையும் போது சிம்ம ராசி பூரம் நட்சத்திர அன்பர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் ஆதாயமான காலகட்டத்தை தவறாக பயன்படுத்திக் கொள்வதற்கும் சந்தர்ப்பம் உருவாகிவிடும் என்பதை கவனத்தில் வைக்க வேண்டும். அதாவது சனிப்பெயர்ச்சி முதல் காலகட்டத்தில் ஏற்பட்டிருக்கும் நன்மைகளை தக்க வைத்துக் கொள்வதற்கு அறிவை பயன்படுத்த வேண்டும்.
பல வருடங்களாக சங்கடப்படுத்திக் கொண்டிருந்த உறவுகளின் புதிய முன்னேற்றம் ஏற்பட்டு ஓரளவு சகஜ நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கலாம். ஆனால் முழுமையாக உறவு சிக்கல் தீராது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நீண்ட தூர பயணங்கள் அமைவதற்கு சிம்ம ராசி பூரம் நட்சத்திர அன்பர்கள் தயாராக வேண்டும். இப்படியான பயணங்கள் விரயமாகவே முடியும் என்றாலும் பயணத்தை தவிர்க்க முடியாது. ஆனால் இந்த பயணங்களால் புதிய நட்புகள் மட்டும் உருவாகும் அமைப்பு, பிற்காலத்தில் பயன் அளிப்பதாக அமையும்.
மாணவர்களுக்கு அனுகூலமான சனிப்பெயர்ச்சி என்று சிம்ம ராசி பூரம் நட்சத்திர மாணவர்களுக்கு சொல்லலாம் .அதிக கஷ்டங்களை கொடுத்தாலும் அதற்குரிய பலனை சனி அவசியம் கொடுப்பார் .அதாவது தேர்வுகளில் தேர்வு ஆவது மிக கஷ்டமாக இருக்கும். ஆனால் அவசியம் நல்ல பலன் கிடைக்கும் முடிவாக அமையும் என்று நிச்சயம் சொல்லலாம்.
கணவன் மனைவி உறவு, தந்தை தாய் பிள்ளை உறவு போன்றவை பல நிலைகளில் சிக்கலை சந்திக்க கூடும் ஆகவே உறவுகளில் இருக்கும் கசப்பான அனுபவங்களை மறந்து விட கற்றுக் கொள்ள வேண்டும்.
உடல் நலத்தைப் பொறுத்தவரை இந்த சனிப்பெயர்ச்சி சிம்ம ராசி பூரம் நட்சத்திர அன்பர்களுக்கு பெரிய அளவில் அனுகூலமானதாக இல்லை ஆனாலும் உடல் நலம் பாதிப்பு அடைவது பெரிய சிக்கல்களை உருவாக்காது சின்ன சின்ன அளவில் மட்டும் உடல் உபாதைகள் இருக்கும் மருத்துவ செலவுகள் கட்டுக்கடங்காமல், போவதற்கு வாய்ப்பு அதிகம் ஆகவே கவனமாக இருக்கவும்
புதிய முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும்
சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம் முதல் பாதம் அன்பர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்
எதிரிகள் கை மேலோங்கி நிற்கும். .எதிர்ப்பு அதிகமாகும். கடன் சுமை பெருகும். இப்படியாக தொடங்குகிறது இந்த சனிப்பெயர்ச்சி காலம், உங்களுக்கு. ஆகா பிரமாதமாக இருக்கிறது என்று யாராவது சொல்லி உங்களிடம் முதலீடு வாங்கி அல்லது உங்களது ஐடியாவை வாங்கி அது நஷ்டமாக அமையும் காலமாக இருக்கிறது, ஆகவே இது போன்ற ப்ராஜெக்ட் விஷயங்களில் கவனமாக இருக்கவும்.
உத்தியோகத்தில் மேலதிகாரிகள் அல்லது அரசாங்கம் அல்லது வாடிக்கையாளர்கள் இடத்தில் சண்டை சச்சரவு உருவாவதற்கு வாய்ப்பு அதிகம்.
உரையாடலில்/வாக்குவாதத்தில் அமைதி காக்கவும். அதே சமயம் உத்தியோகத்தில் உயர்வுக்காக தேர்வுகள் எழுதுவது சர்டிபிகேட் வாங்குவது போன்ற முயற்சிகளில் அவசியம் ஈடுபடலாம் இவை நல்லவிதமாக முடிவதற்கு இந்த சனி பெயர்ச்சி காரணமாக இருக்கும்
மிக முக்கியமாக அரசாங்க வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வுக்காக ஏதாவது டிபார்ட்மெண்ட் பரீட்சை எழுத வேண்டி இருந்தால் அல்லது கல்வி தகுதியை மேம்படுத்திக் கொள்ள வேண்டி இருந்தால் இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் மிகவும் அனுகூலமான காலம்
ஒரே சமயத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதை யோசித்து விட்டு செய்யவும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பிரச்சனைகள் அவற்றினால் சங்கிலி போல் வருவதற்கு சனி பெயர்ச்சி காரணமாக அமைகிறது .ஆகவே மிக கவனமாக இருக்கவும்.
ஒரு விஷயம் பெண்டிங் இருக்கும்போது மற்றொரு புதிய ப்ராஜெக்ட் எடுத்துச் செய்யும் வேலைகளை தவிர்க்கவும்
வழக்குகள் முடிவில்லாமல் இழுத்துக் கொண்டே போகும் காலம் ஆகவே அதை எப்படி முடிப்பது என்ற யோசனையை தவிர்த்து விட்டு சற்று விஷயத்தை ஆற ப் போட பழகிக் கொள்ளுங்கள்.
ஏற்கனவே தோல் வியாதி இருப்பவர்கள் அல்லது தோல் சம்பந்தப்பட்ட உபாதை இருப்பவர்கள் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டாம் .இந்த காலகட்டத்தில் தோல் வியாதி மிகவும் அதிகமாக சிம்ம ராசி உத்திரம் நட்சத்திர அன்பர்களுக்கு சனி பெயர்ச்சி தீய பலனாக காட்டுகிறது. ஆகவே மிகவும் கவனமாக இருக்கவும்
பல காலமாக கவனிப்பு இன்றி இருக்கும் பூர்வீக சொத்துகள் மீது மிகுந்த அக்கறை எடுத்து போய் கவனித்து வரவும். .அவை கைநழுவி போகும் வாய்ப்பு உண்டு. பூர்வீக சொத்தில. டாக்குமெண்டில் சிக்கல்கள் உருவாகலாம் ஆகவே எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்,
உத்திரம் முதல் பாதநட்சத்திர அன்பர்கள் இந்த சனிப்பெயர்ச்சி காலத்தை மிகவும் கவனமுடன் எதிர் கொள்ள வேண்டும். காரணம் மனநிலையில் அதிக அழுத்தம் உருவாக்கும் விஷயங்கள் நடந்தே தீரும். கவனம்
சனி வக்ர பலன்
சனியின் வக்ர காலத்திலும் ரொம்ப மாறுதல் இருக்காது. அஷ்டம சனி எனும் போது, அவர் நல்ல இடங்களை பார்த்து அவைகளை வலுவிழக்கச் செய்துவிடுவார். எனவேதான் அஷ்டம சனி நடக்கும்போது ஜாதகர்கள் மிகத் துயரம் அனுபவிப்பார்கள். இதற்கு தெய்வ வழிபாடே கொஞ்சம் உங்களைக் காப்பாற்றும். சொல்லொணாத் துயரம், மனிதரின் நல்ல குணங்களை அழிக்க முற்படும். தயவு செய்து தரம் பிறழ்ந்து நடக்காதீர்கள். தர்ம தெய்வமே சனி அதற்கே மகிழ்வார் வக்ர சனி காலத்தில் திருக்குவளை ஸ்ரீகோளிலிநாதரை வணங்கவும்.
பரிகாரங்கள்
அஷ்டம சனியின் பாதிப்பு நீங்க, புதுக்கோட்டை மாவட்டம், எட்டியத்தளி எனும் ஊரிலுள்ள சனிபகவானை வணங்குவது சிறப்பு. அருகிலுள்ள சனீஸ்வரர் சன்னதிக்கு நல்லெண்ணெய் வாங்கிக் கொடுத்து வணங்கவும்.
சிம்ம ராசிக்கு அஷ்டம சனி நடப்பதால் நாமக்கல் ஆஞ்சநேயர் வழிபாடு நல்லது
‘துஷ்ட க்ரஹங்கள் பயம் விலக
அஞ்ஜநா கர்ப்ப ஸம்பூதம் குமாரம் பரஹ்மசாரிணம்
துஷ்ட க்ரஹ வினாசம் தம் ஹனுமந்த முபாஸ்மஹே.
-என இந்த மந்திரம் கூறி வணங்கவும். சனி காயத்ரி கூறவும்.