சனி பெயர்ச்சி பலன்கள் 2025 – கன்னி
(உத்திரம் 2,3,4ம் பாதம் ,ஹஸ்தம்,சித்திரை 1,2ம் பாதம் )
சனி பெயர்ச்சி நாள் 2025 -Sani peyarchi Date 2025
இந்த குரோதி வருடம், உத்திராயணம்.பங்குனி மாதம் 15-ஆம் தேதி (29.3.2025) சுக்ல பட்சம் (வளர்பிறை) பிரதமை, சனிக்கிழமை பூரட்டாதி நட்சத்திரம், 4-ஆம் பாதம் மீன ராசி. சுப்ர நாம் யோகம் கூடிய யோக சுப தினத்தில் விருச்சி
கன்னி ராசியும் சனியும்
கன்னி ராசிக்கு சனிபகவான் 5 மற்றும் 6-ஆமிட அதிபதி. இவர் இதுவரையில் 6-ஆமிடத்தில் அமர்ந்திருந்தார். இப்போதைய பெயர்ச்சியில் 7-ஆமிடம் எனும் சப்தம ஸ்தானத்திற்கு வந்து அமர்கிறார்.
கன்னி ராசி
இதன் அதிபதி: புதன்
உருவம்: கன்னிப்பெண்
வகை: உபய ராசி
தத்துவம்: நிலம்
நிறம்: கலப்பு நிறம்
கடவுள்: மகாலக்ஷ்மி
குறிப்பு : இங்கு புதன் உச்சம் , சுக்ரன் நீசம்.
சனி அமர்ந்த இட பலன்
சனி எந்த இடத்தில் அமர்கிறாரோ அந்த இடத்து பலன்களை கெடுக்க மாட்டார். ஆனால் என்ன ஒன்று மிக தாமதமாக கொடுப்பார். இதன் பலனாக கன்னி ராசியில் ரொம்ப காலமாக திருமணம் முடியாமல் இருக்கும் பையன், பெண்களுக்கு இப்போது திருமணம் கூடிவரும். 7-ஆமிடத்தில் அமரும் சனி இவ்வளவு நாட்களாக கன்னி ராசியினரின் தாமதமான திருமணத்தை நடத்தி செய்வார்.
2025 மார்ச் 29 முதல் ஏப்ரல் 27 வரை
இப்போது கன்னி ராசியின் 7-ஆமிடத்தில் அமரும் சனிபகவான் பூரட்டாதி நட்சத்திரம் வழியே பலன் தருவார் இப்போது திருமணங்கள் கூடிவரும். அதிலும் காதல் திருமணத்திற்கு வெகு வாயப்புண்டு. உங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் நல்ல வேலை கிடைக்கும் வேலையில் அறிவு சார்பு அதிகமிருக்கும். வீடு வாங்க கடன் கிடைக்கும் மாணவர்கள் கல்வியில் வெகு ஈடுபாடு கொள்வர் சினிமா கலைஞர்கள் சிலர் திருமணம் செய்துகொள்வர்.
சிலர் வீடு கட்டுவர் சினிமா கலைஞர்கள் பங்குதாரருடன் சேர்ந்து சினிமா தயாரிப்பர். பங்கு வர்த்தக வகுப்புகளுக்கு செல்வீர்கள் சிலரின் பிரிந்து போன வாழ்க்கைத்துணை வீடு வந்து சேர்வார் சிலரின் தாயார் உடல்நலக் குறைவை சந்திப்பார் வாழ்க்கைத் துணை ஒரு வியாபாரம் ஆரம்பித்து விடுவார். உங்களுடன் வேலை செய்பவர்களை கூட்டாக சேர்த்து ஒரு தொழில் வியாபாரம் ஆரம்பித்து விடுவீர்கள் நிறையக் கன்னி ராசியினர் அறிவு, குழந்தை, விளையாட்டு, போட்டி, பந்தயம் இவை சார்ந்த கடை ஆரம்பித்து விடுவீர்கள்.
2025 ஏப்ரல் 27 முதல் 2026 மே 17 வரை
இந்நேரத்தில் கன்னி ராசியின் 7-ல் இருக்கும் சனிபகவான் உத்திரட்டாதி நட்சத்திரம் எடுத்துக்கொள்வார் இப்போது தம்பதிகளுக்குள் வாரிசு விஷயமாக மன பேதம் உண்டாகும். சிலர் சினிமா எடுப்பதில் பிஸியாகிவிட உங்கள் வாழ்க்கைத் துணை வெகு எதிர்ப்பு காட்டுவார். இதுபோல் பங்குவர்த்தக முதலீடு அது சார்ந்த கடன் விஷயத்தில் ரொம்ப விவாதம் உண்டு. கடன் வாங்கும் விஷயம், வீடு வாங்க வியாபாரம் ஆரம்பிக்க வாங்கும் கடன் விஷயமாக பெரிய வாக்குவாதம் வரும்.
உங்கள் வியாபார பங்குதாரரின் சீர் கெட்ட லட்சணம் பற்றி வீட்டில் அலசப்படும். உங்களின் யூங்கள் ஒன்றும் வாழ்க்கைக்கு சரிப்படாது என்று குத்திக் காண்பிக்கப்படும். மந்திரி பதவி வகிப்பவர்களை அவர் சேர்ந்த கூட்டணி ‘வெளங்கவே வெளங்காது’ என விமர்சனம் வைக்கப்படும். வீட்டில் வாஸ்து குற்றம் உள்ளது என புலம்பல் அதிகம் உங்கள் தாயாருக்கும் மனைவிக்கும் உள்ள சண்டையின் சத்தம் அதிகமாகும். ஆக கன்னி ராசியினர் எதைச் செய்தாலும் அவர் வாழ்க்கைத்துணை அதில் குற்றம் கண்டுபிடிப்பார் இதுதான் 7-ல் சனி செல்லும் பலன்.
2026 மே 17 முதல் 2027 ஜூன் 3 வரை
இக்காலத்தில், கன்னி ராசியின் 7-ஆமிடத் தில் சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு மாறுவார் காதல் திருமணத்தை நீங்களே ரொம்ப ப்ரயாசைப்பட்டு முடித்துவிடுவீர் கள் உங்கள் வாரிசும், நீங்களும் சேர்ந்து வியாபாரம் ஆரம்பித்து விடுவீர்கள் சிலர் சிறு பிராயத்து நண்பர் அல்லது பூர்விக இட உறவுகள் இவர்களுடன் சேர்ந்து வணிக வளாகம் திறப்பீர்கள்.சிலர் உங்கள் காதலன் காதலியுடன் சேர்ந்து ஒரு வேலையில் தேடி அமர்ந்து கொள்வீர்கள். வட்டி வியாபாரம் தொடங்கலாம்.
நீங்களும் உங்கள் மனைவியும் சேர்ந்து வீடு கட்டிவாடகைக்கு விடுவீர்கள். சிலர் வயதானவர்கள் அல்லது நோயாளிகளுக்கு உணவு சமைத்து வீட்டில் கொண்டு கொடுக்கும் தொழிலை ஆரம்பித்து நடத்துவீர்கள். வீடு வாடகைக்கு விடுவீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் துலங்கும். சினிமா சூட்டிங் சார்ந்து வீட்டை வாடகைக்கு விடுவீர்கள் வீட்டில், தோட்டத்தில் வளர்ந்த மூலிகைகளை, ஆரோக்கியம் சம்பந்த மான தொழிலுக்கு பிள்ளையார் சுழி போட்டுவிடுவீர்கள். கன்னி ராசியின் 7-ல் சனி, உங்களின் சுய சாரத்தில் செல்லும்போது, ஒரு வியாபார யுக்தியை புகுத்துகிறார்.
சனி பார்வை பலன்கள்
சனி தான் இருக்கும் வீட்டிலிருந்து 3, 7. 10-ஆம் வீடுகளை பார்க்கும் தன்மை உடையவர்.
சனியின் 3-ஆம் பார்வை பலன்
சுன்னி ராசிக்கு 7-ல் அமர்ந்த சனி, கன்னி ராசியின் 9-ஆம் வீட்டை உற்று நோக்குகிறார். சனி பார்வை நல்லது கொடுக்க இயலாது. உங்களின் கோவில் பயணத்தைக் குறைப்பார். தினமும் கோவில் தரிசனம், கோவில் பிராகாரம் சுற்றுவது என வழக்கமாக்கிக் கொண்டவர்கள் வாரத்திற்கு ஒரு தடவை என குறைத்துவிடுவார். உங்கள் தந்தையின் பயணம் தடைப்படும். உயர்கல்வி சம்பந்தமாக வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களை அதை அப்புறமா பார்த்துக் கொள்ளலாம் என ஓரமாக அத் திட்டத்தை ஒதுக்கி வைத்துவிடுவார்.
சிலர் பதவி உயர்வுக்கு, பதவி இடமாற்றத் துக்கு காத்துக் கொண்டிருந்தால் என்ன அவசரம் என தடை போட்டு விடுவார். அரசியலில் கண்டிப்பாக பெரிய பதவியை நோக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு பதில் சாதகமாக கிடைக்காது.
உங்கள் மூத்த சகோதரி விஷயமாக ஒரு யோக நிகழ்வு தள்ளிப் போகும். உங்கள் தாயாரின் ஆன்மிக யாத்திரை திட்டம் வேறு தேவிக்கு மாற்றப்படும் நீங்கள்இதுவரையில் உங்கள் பகுதியில் வகித்துவந்த பதவிகளின் காலம் முடிந்துவிட்டது எனக் கூறி விடுவதால், பதவி உங்கள் கையைவிட்டு போய்விடும்.
உங்கள் இளைய சகோதரன் திருமணம் சிக்கலாகும். உங்கள் பணியாளர்கள் செய்நன்றி மறப்பர். உங்கள் குத்தகை ஒப்பந்தம் ஒத்தி வைக்கப்படும். இரண்டு சக்கர வாகனம் பழுதாகும். கூடவே உங்கள் கைபேசியும் ரிப்பேர் ஆகும்.

சனியின் 7-ஆம் பார்வை பலன்
சனி தனது ஏழாம் பார்வையால்,கன்னி ராசியைப் பார்க்கிறார். இப்போது உங்களுக்கே ரொம்ப சோம்பேறித்தனம் வந்துவிடும். தினமும் நடைபயிற்சி வழக்கம் கொண்டவர்கள் இப்போது அதனை மேற்கொள்ளமாட்டீர்கள். எப்போதும் சற்று அழுக்கு மூட்டையாக இருப்பீர்கள். குளிப்பதற்கே கடுப்பாக இருக்கும். நீங்கள் என்ன நினைத்தாலும் அது உடனே எதிர் மறையாக நடந்துவிடும். இதனால் உங்களுக்கு ‘என்னடா வாழ்க்கை’ இது என பெரும் சலிப்பு வந்து ஒட்டிக்கொள்ளும். வேலைக்கு அடிக்கடி விடுமுறை எடுப்பீர்கள். உங்கள் தொழில் செய்யும் இடத்தில் பணியாளர்கள் வாக்குவாதம் செய்வர்.
உங்களின் நிறம் மங்கி, முக லட்சணம் குறைந் ததுபோல் உணர்வீர்கள் சிலருக்கு முகத்தில் தேமல்போல் படரும் கொஞ்சம் முட்டாள் தனமாக தத்திபோல் நடந்துகொள்வீர்கள் அவ்வப்போது ஏதாவது உடல்நலக்குறைவு போல மனதில் தோன்றும். ஆக மொத்தத் தில் சனிபகவான். உங்கள் ராசியை நேர் பார்வையாக பார்ப்பதால், சற்று லூசுமாதிரி பித்தனைப்போல் சோம்பேறியாக மாறி விடுவீர்கள் சனியின் நேர் பார்வை பலனிது
சனியின் 10-ஆம் பார்வை பலன்
சனி தனது 10-ஆம் பார்வையால் கன்னி ராசியின் 4-ஆமிடத்தை நன்கு பார்க்கிறார் 4-ஆமிடம் எனும்போது. முதலில் தாயார் என்றுதான் ஞாபகத்துக்கு வரும். சனி பார்வைபடுவதால் உங்கள் தாயார் ஆரோக்கியம் பற்றி யோசிப்பது நல்லது. உங்கள் வீட்டில் பழுது பார்க்கும் செலவுண்டு. வாகன ரிப்பேர் வரும். கிணற்றை தூர் வார வேண்டியிருக்கும்.
கல்வி கொஞ்சம் பின்னடைவு பெரும். ஏனோ உங்கள் நம்பிக்கைகள் சற்று குறையும். குடும்பங்களில் சில பெண்கள் சில சிறிய குற்றச்சாட்டுக்கு ஆளாவார்கள். உங்கள் சொந்த வீட்டில் அரசாங்கம் ஒரு வில்லங்கம் உள்ளது எனக் கூறி உங்களை அலைக் கழிக்கும். அல்லது உங்கள் மூத்த சகோதரி, இந்த வீட்டில் என் பங்கு எங்கே என சண்டைக்கு வருவார். இதன் எதிரொலியாக நீதிமன்றத்தில் வழக்கு ஆரம்பித்துவிடுவீர்கள்.
உங்கள் தோட்டம் அல்லது பண்ணை வீட்டில் ஒரு அரசியல்வாதி தொல்லை தருவார். உங்கள் வீட்டில் பரம்பரை புதையல் இருக்கிறது என ஒரு பயல் உங்களை நன்கு மொட்டை அடித்துவிடுவான் ஜாக்கிரதை பசு, மாடு எங்காவது சென்றுவிடும். ஆக சனியின் பார்வை படும் ஆம் வீடு நாஸ்தியாகிவிடும்.
கன்னி ராசி உத்திரம் ( 2,3 4 ம் பாதங்கள்) நட்சத்திரத்துக்கு சனி பெயர்ச்சி பலன்கள்
வாழ்க்கைத் துணையால் தொல்லை , சங்கடம் அதிகமாகும் , சொந்த வாழ்வில் மிகவும் எதிர்பார்த்த வெற்றி கை நழுவிப் போகும். மாணவர்களுக்கு நல்ல காலம் என சொல்ல முடியாது , மாணவர்கள் ஒவ்வொரு விஷயத்தில் வெற்றி பெறுவதற்கும் அதிக உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும். சோம்பல் இல்லாமல் வேலை செய்தால் மட்டுமே இந்த சனி பெயர்ச்சி காலத்தை மாணவர்களால் சமாளிக்க முடியும்
இளம் வயதினரின் திருமண கனவுகள் நிறைவேறும். வேலை வேலை என சனி வேலைப் பளு அதிகம் தருவார். அதற்கு ஏற்ப பலனும் கிடைக்கும் . இட மாற்றம் , பதவி உயர்வுடன் கிடைக்கும்
நிதி நிலைமையில் சீரான தன்மை உருவாகும் . தாமதம் ஆனாலும் வருவாய் கெட்டுப் போகாது
சமூக காரியங்கள் நல்ல வேலைகள் கோவில் திருப்பணிகள் உறவினர்கள் வீட்டு திருமணம் நடத்தி வைத்தல் போன்ற நல்ல விஷயங்களை ஈடுபடுவதற்கு இந்த சனி பெயர்ச்சி கன்னி ராசி உத்திரம் நட்சத்திர அன்பர்களுக்கு வழிவகை செய்து கொடுக்கும்
ஒன்றுக்கு பலவாக கடமைகள் அதிகரித்து அதிகரித்து உடல் ஆரோக்கியம் அதனால் சோர்வடைந்து பாதிக்கப்படும் சனி கொடுக்கும் வேலைப்பளுவை தாங்குவது தான் இந்த சனி பெயர்ச்சி உங்களுக்கு வைக்கும் சோதனை
எலும்பு தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் அதனை சரிவர கவனித்துக் கொள்ள வேண்டும் பணி சுமை அதிகமாக இருப்பதால் உடல் பலவீனத்தின் காரணமாக எலும்புகள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு, என்னதான் கவனமாக இருந்தாலும் தவறான மருத்துவ சிகிச்சை அமைந்து விடுவதற்கு சனி பெயர்ச்சி ஒரு தூண்டுகோலாக இருக்கும் ஆகவே ஒன்றுக்கு பலமுறை யோசித்து முடிவு எடுக்கவும்.
அதிகமான பணி சுமை என்பது மட்டும் இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் தவிர்க்க இயலாத ஒரு விஷயம் ஆகவே கன்னி ராசி உத்திரம் நட்சத்திர நண்பர்கள் ஓடி ஓடி உழைப்பதற்கு தயாராக இருங்கள். பலன் கிடைப்பது தாமதம் இருக்கும் அங்கீகாரமும் கிடைக்கும் ஆனால் தாமதமாக அளவு குறைவாக கிடைக்கும் இதை புரிந்து கொண்டு இந்த சனி பெயர்ச்சி காலத்தில் உழைப்பை நிறுத்தாமல் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது
கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திர அன்பர்களுக்கான சனி பெயர்ச்சி பலன்கள்
கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திர அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி காலம் நன்மை பயப்பதாக இல்லை. உறவு நிலைகளில் அதிக சிக்கல்களை உருவாக்கும் சனியின் பார்வை. மன உறுதியை முற்றிலும் இழக்கச் செய்யும் வகைக்கு சனியின் பாதிப்பு ஹஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு. இருக்கும்
தொடர்ச்சியான பலவீனமான எண்ணங்கள் தொடர்ச்சியான எதிர்மறை சிந்தனைகளை சனி தனது தாமோ குணத்தால் தூண்டிக்கொண்டே இருப்பார்.
தவறான சிந்தனைகளுக்கு வழி வகுத்து தீய பழக்கங்களுக்கு ஆட்படுத்துவார். கடன் வாங்க தூண்டும் அளவுக்கு செலவுகளை அதிகப்படுத்தி நிதி நிர்வாகத்தின் மீது தனது தாக்கத்தை அதிகமாக செலுத்தும் சனி.
திருமண உறவுகள் மிகவும் கவனமாக கையாளப்பட வேண்டும் மிக சமீபத்தில் திருமணம் நடந்திருந்தால் ஆழமான விரிசல்களை சனிப்பெயர்ச்சி உருவாக்கிட கூடும்
மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த இயலாத அளவுக்கு சனியின் தாக்கம் ஹஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும். ஆனாலும் மாணவர்களின் வெற்றியை சனி தட்டிப் பறிப்பது இல்லை. வெற்றிக்கு அதிகம் உழைக்க வேண்டியிருக்கும் அல்லது உழைப்புக்கு ஏற்ற அளவுக்கு மதிப்பெண்கள் பெறாமல் அல்லது அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம் தோல்வி ஏற்படுவதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு இல்லை சனி அந்த சோதனையை கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திர நண்பர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சியில் தரப்போவது இல்லை
எதிர் கருத்து கொண்டவர்களால் ஏமாற்றப்படும் சூழல் ஹஸ்தம் நட்சத்திரக்காரர்களுக்கு உருவாகும். அதனால் பிறர் தரும் உறுதிமொழிகளை /சத்தியங்களை நம்புவதற்கு முன்பு பலமுறை யோசித்துப் பிறகு முடிவு எடுக்கவும் மிகுந்த பழக்கம் உள்ளவர்களாலும் ஏமாற்றப்படும் சூழல் காணப்படுகிறது
பயணங்களால் ஆதாயம் கிடைக்கும். ஆனால் பெரிய அளவு ஆதாயம் இருக்காது என்றாலும் மிக முக்கியமான பயன்கள் பயணங்களால் கிடைக்கும். ஆகவே பயணத்தை தவிர்க்க வேண்டாம். பூர்வீக சொத்துகளில் இருந்த தடை விலகும் ஆனால் சொத்தை விற்பதற்கு அதிக சிரமம் உண்டாகும் டாக்குமெண்ட் பிரச்சினைகள் விலகிவிடும். ஆனாலும் சொத்தை விற்பதில் இருக்கும் தடை அப்படியே இருக்கும் இந்த சனி பெயர்ச்சி கடந்த பிறகு தான் அந்த தடை விலகும்
ஆன்மீக ,தெய்வம் சார்ந்த விஷயங்களில் கோவில் சார்ந்த விஷயங்களில் சலிப்பு ஏற்படும் காலமாக காணப்படுகிறது. இதனால் தயக்கமும், பயமும் கொள்ள வேண்டாம். இந்த சனி பெயர்ச்சி முடிந்த பிறகு நிலைமை சரியாகும்.
கடன் வாங்குதல், கடன் கொடுத்தல் போன்ற வரவு செலவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.அதிகம் ஏமாற்றப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. பெற்றோர்கள் மாமனார் மாமியாருடன் இருந்த உறவு நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
கன்னி ராசியின் சித்திரை நட்சத்திர , (1 ,2 பாதங்கள்) அன்பர்களுக்கு சனி பெயர்ச்சி பலன்கள்
தீமையும் நன்மையும் சரிசமமான அளவில் கலந்து இந்த சனி பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு கிடைக்கும்.
கல்வி மேம்பாடு உத்தியோக உயர்வு பணியிட மாற்றம் சம்பள உயர்வு நிதிநிலை உயர்வு போன்றவற்றில் அதிக முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம். புதிய வேலை வாய்ப்புகள் புதிய ப்ராஜெக்ட்டுகள் புதிய வியாபார வாய்ப்புகளை சனி உருவாக்கித் தருவார். போட்டிகள் அதிகம் இருந்தாலும் அவற்றை சமாளிக்க கூடிய அளவுக்கு மனோ பலத்தையும் உடன் பலத்தையும் திறமை பலத்தையும் சனி தேவைக்கு அதிகமாகவே உருவாக்கி தருவார். உற்சாகத்திற்கு குறைவு இருக்காது.பெண் ஜாதகர்களுக்கு வேலை வாய்ப்பு வியாபார வாய்ப்பு அதிகமாக உருவாகும்.
எத்தனை சம்பாதித்தாலும் ஒன்றுமே சேர்க்க முடியவில்லை என்ற மனக்குறை கொஞ்சம் இருக்கும். வந்த பொருள் சேர்ப்பதற்கு அதிகம் சிரமப்பட வேண்டி இருக்கும். ஆனாலும் நிதிநிலை சீராகவே இருக்கும். உடல் நிலையில அதிக சோர்வும் மனக்குழப்பங்களும் உருவாகிக் கொண்டே இருக்கும்.ஜுரம் காரணம் இல்லாத நவீன ஜுரங்கள் வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவிற்கு உடல்நிலை மோசமாகும். ஆகவே கவனமாக இருக்க வேண்டும். சிறு சிறு விபத்துகள் உருவாவதற்கு வாய்ப்பு உண்டு.
நண்பர்கள் உடன் வேலை செய்பவர்கள் உறவினர்கள் பொறாமையால் பாதிப்புகள் உண்டாகும். ஆகவே இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவும். தடைப்பட்ட திருமணங்கள் இந்த சனி பெயர்ச்சி காலத்தில் நல்ல முன்னேற்றம் கண்டு கைகூடி வரும். புத்திர பாக்கியம் அமையும்.
புதிய மனிதர்களின் உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். ஆனால் அவர்கள் உங்களை பயன்படுத்தி உயர்ந்து கொள்வதற்கு முயற்சி செய்வார்கள். அந்த விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கடந்த காலத்தில் செய்த தவறுகளால் ஏற்பட்ட இழப்புகள் பெருமளவு சரி செய்யப்பட்டு நஷ்டங்கள் குறைக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனாலும் அதற்கு அதிகம் உழைக்க வேண்டியிருக்கும் அந்த உழைப்புக்கு இந்த காலத்தில் பலன் கிடைத்து விடும் என்பதே கவனத்தில் கொள்ள வேண்டும்.
வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வெளிநாட்டிலிருந்து பண ஆதாயம் வெளிநாட்டிலிருந்து வியாபார தொடர்புகள் எதிர்பார்த்து இருப்பவர்கள் ஓரளவு நன்மை அடைவார்கள் என்று சொல்லலாம்.
கன்னி ராசிக்கு சனிப்பெயர்ச்சி மொத்த பலன்
சனி, தான் இருக்கும் இடத்திலிருந்து நல்ல பலன் கொடுத்தாலும் ராசியை நேர் பார்வை பார்ப்பதால் ஜாதகரை சோபைஇழக்கச் செய்துவிடுவார் கோவில் வழிபாடு குறைந்து தெய்வ நம்பிக்கையும் குறையும். எனவே சப்தம சனி சற்று சுமாரான பலனைத் தருவார்.
சனி வக்ர பலன்
2025 ஜூலை 12 முதல் நவம்பர் 27 வரை சனி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வக்ரம் அடைகிறார். அப்போது வீட்டில் சண்டை வாக்கு வாதம் குற்றம் சுமத்துவது இவை குறையும் வாய்ப்புண்டு.
2026 ஜூலை 26 முதல் டிசம்பர் 10 வரை ரேவதி நட்சத்திரத்தில் வக்ரம் ஆவார். இந்நேரத்தில் நீங்கள் ஆரம்பித்த தொழில் சற்று மெதுவாக நடக்கும் வக்ரம் நீங்கியவுடன் தொழில் சரியாகும்.
வக்ர நிலையின்போது திருவாரூர் எட்டுக்குடி திருக்குவளை கோளிலிநாதர் வழிபாடு சிறப்பு.
பரிகாரங்கள்
அரக்கோணம் மங்கம்மா பேட்டை நீலதேவி சமேத சனீஸ்வரர் ஆலயம் சென்று வணங்கவும் இங்கு சனீஸ்வரர் திருக்கல்யாண கோலத்தில் அமர்ந்துள்ளார். பௌர்ணமி தோறும் சத்யநாராயணர் பூஜை செய்யலாம்.
ஊனமுற்றவர்களின் திருமணத்தின் போது தேவை கேட்டறிந்து உதவவும். சனீஸ்வரருக்கு எள் மிட்டாய் நிவேதனம் செய்து அங்கு வருபவர்களுக்கு கொடுக்கவும். ஸ்ரீகிருஷ்ணாபுரம் (திருநெல்வேலி) ஆஞ்சநேயரை வணங்கவும் அனுமன் ஸ்துதி கூறவும்.