சந்தோஷி மாதா ஆலயம்
வரலாறு:
துர்க்கையின் அம்சமான சந்தோஷி மாதா ஆலயம் மும்பைக்கு அருகில் உள்ள தஹானு என்ற மலைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. அவ்விடத்தில் ஆதிவாசிகள் அதிகம். ஆடு, மாடு மேய்க்கும் ஒரு ஆதிவாசியின் கனவில் வந்து தன்னை வெளிப்படுத்திக் கொண்டு, அவ்விடத்தில் உள்ள குகையில் இருப்பதாக கூறி அங்கு தனக்கு சிலை அமைக்கும் படி ஆதிசக்தி ரூபமான சப்தச்சிருங்கி மாதா கூறினாள். ஆதிவாசியும் தேவி சொல்லியவாறு தேவி சுயம்புவாக குகையில் இருப்பதைக் கண்டு வியந்து தேவிக்கு அழகிய ஆலயம் ஒன்றை எழுப்பினார் என்கிறது வரலாறு.
சிறப்பு :
சந்தோஷி மாதா திருப்தியின் தேவியாக வழிபடப்படுகிறாள்.சந்தோஷம் என்றால் நிறைவு ,இன்பம், திருப்தி. நினைத்த காரியம் கைகூட சந்தோஷி மாதா விரதம் இருப்பது சிறப்பாகும்.
பரிகாரம்:
பக்தர்கள் சந்தோஷிமாதா விரதத்தை 16 வெள்ளிக்கிழமைகள் பக்தியுடனும் நம்பிக்கையுடனும் மேற்கொண்டு அம்மனுக்கு மலர்கள், வாசனை பொருட்கள், ஒரு கிண்ணத்தில் கச்சா சக்கரையும், கொண்டைக் கடலையும் வழங்க வேண்டும். ஒரு நாளில் ஒரு வேளை மட்டுமே சாப்பிட வேண்டும். பிறருக்கு புளிப்பான அல்லது கசப்பான உணவை அளிக்க கூடாது. எவரையும் துன்புறுத்தவோ எவருடனும் சண்டை போடவோ கூடாது. இவ்விரதத்தை கடைபிடிப்பவர் வாழ்க்கையை நிம்மதியாக வாழலாம். பக்தர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம். நினைத்த காரியம் முடிந்தவுடன்’உதயபன்’ என்னும் சடங்கை நடத்த வேண்டும்.
வழித்தடம்:
மும்பையில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கில் அமைந்துள்ள தஹானுவிற்கு மும்பையில் இருந்து கார், பேருந்துகளில் செல்லலாம். மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அகமதாபாத் செல்லும் ரயிலில் தஹானுரோட் ஸ்டேஷனில் இறங்கி செல்லலாம்.
Google Map :