சரஸ்வதி உபாஸன மந்திரம்
செய்ய வேண்டிய பூஜை விதி :
சரஸ்வதி உபாஸன மந்திரம் புரட்டாசி மாதம் நவராத்திரி காலத்தில் உதயம் ஸ்நானம் செய்து அனுஷ்டானம் முடித்து சுத்தமானயிடம் மெழுகி கோலம் போட்டு புத்தகங்களை ஒரு ஆசன பலகையின் மெது அடுக்கி வைத்து சந்தனம் ,குங்குமம் ,புஷ்பம் சாத்தி மேற்கண்ட விவரப்படி சக்கரம் செப்பு தட்டில் வரைந்து அபிஷேகம் அலங்காரம் செய்து முன்னதாக அடியிற்கண்டபடி பூஜை செய்து தூப தீபம் கொடுத்து தியானம் செய்து மூல மந்திரம் செபிக்கவும் .
தியானம்
ஓம் மஹா மாயே மஹாப் ரபஞ்ஞே சர்வசஸஸாஸ்த்ர விசாரதா
அக்ஷணி கர்ம பெந்தஸ்து புருஷோத்து ஜஸ்தம்
மூல மந்திரம்
ஓம் சரஸ்வதி வாக்விலாசனி யென்றே நாவின்மேல்
விளையாடுக மூகாம்பிகே ஓம் ,ஸ்ரீம் ,ஹ்ரீம் ,பிரம புத்திரியே நமக
இந்தபடி நவராத்திரி 9நாளும் தினம் 108 உரு செபிக்கவும்
பூஜை விவரம்
அவல் ,கடலை ,தேங்காய் ,பழம் ,வெற்றிலை ,பாக்கு ,புஷ்பம்,சந்தானம் ,குங்குமம் ,சாம்பிராணி ,சுண்டல் ,வடை பாயசம் வைத்து பூசிக்கவும்
இதன் நனமை :
விசேஷ வித்தை உண்டாகும் ,சரஸ்வதி அனுக்கிரகம் உண்டு .