குமரி அம்மன்
குமரி அம்மன் வரலாறு :
முன்னொரு காலத்தில் தேவர்களை அடக்கி ஆண்ட பாணா சுரன் என்ற அசுர குல அரசனை ,பராசக்தியால் மட்டுமே அழிக்க முடியும். எனவே தீய சக்தியை அழிக்க பராசக்தியை வேண்டுங்கள் என்று திருமால் கூறினார். அதன்படி தேவர்கள் பராசக்தியை வேண்டி ஒரு பெரு வேள்வி செய்தனர். வேள்வி முடிவில் பராசக்தி தோன்றி பானாசுரன் தலைமையில் நிகழும் தீய செயல்களை ஒழித்து ஒழுங்கும்- அறமும் உலகில் நிலைபெறச் செய்வதாக உறுதி மொழிந்தாள் .அன்று முதல் அவள் மூன்று கடல்கள் கூடும் கன்னியாகுமரியில் கடும் தவம் புரிந்தாள்
சிறப்பு:
கன்னியாகுமரியில் கடும் தவம் புரிந்த பராசக்தியை மணம் புரிய சிவபெருமான் விரும்பினார்.அசுர தலைவன் ஒரு கன்னியால்தான் அழிக்கப்படுவான் என்பது பிரம்ம தேவனால் விதிக்கப்பட்டிருந்தபடியால் திருமணம் நடந்தால் பாணா சுரனின் அழி வுத்திறன் கெட்டுவிடும் என்பதால் திருமணம் நிறுத்தப்பட்டு அதன் பின் என்றும் கன்னியாகவே தவத்தைத் தொடர்ந்தாள்.
எனவே திருமணத்திற்கு என்று செய்யப்பட்ட உணவு வகைகள் எல்லாம் வகை வகையான மணலாக மாறின
3000 ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த கன்னியாகுமரி அம்மன் கோயில், 11 தீர்த்த குளங்களுடன் தொடர்பு கொண்டிருப்பது இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும்.தேவி என்றால் புனிதம் என்று பொருள். தேவி கன்னியாகுமரி சிறுமியாக அருள்பாலிக்கிறாள்.
அம்மன் எப்பொழுதும் மாலையை கையில் பிடித்தவாறு காட்சியளிக்கிறார் ஏனெனில் அவளுடைய மணவாளனுக்காக காத்து இருக்கிறாள் என்பது ஐதீகம். நல்ல கணவன் அமைவதற்கு கன்னிப்பெண்கள் அம்மனை வழிபட்டு சிவப்பு நிற புடவை மற்றும் நெய்விளக்கு வழங்குவது வழக்கம். குமரியம்மன் அணிந்திருக்கும் வைர மூக்குத்தி பிரசித்திபெற்றது.
வழித்தடம்
கன்னியாகுமரி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் கோவில் வழியாக செல்கின்றன