அபித குஜலாம்பாள் அம்மன்
அபித குஜலாம்பாள் அம்மன் வரலாறு:
திருவண்ணாமலையில் அமைந்துள்ள உண்ணாமலை அம்மன் அபிதகுஜலாம்பாளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்
அபித குஜலாம்பாள் அம்மன் சிறப்பு:
உண்ணாமலையம்மன் மக்களின் மேல் கொண்ட கருணையினால், அம்மனின் மார்பில் தானாக பால் சுரந்து இந்தப் பாலை யாரும் அருந்த மாட்டார்கள் (உண்ண மாட்டார்கள்) எனவே இந்த அம்மனுக்கு உண்ணாமுலை என்ற பெயர் வந்தது.
இந்தப் பால் திருவண்ணாமலையில் சிதறி குளமாக மாறியது இந்த குளத்திற்கு முலைப்பால் தீர்த்தம் என்று பெயர் வந்தது.
இங்கு சிவபெருமான் பிரம்மா மற்றும் விஷ்ணுவின் ஆணவத்தை அடக்கி அர்த்தநாரீஸ்வரராக பக்தர்களுக்கு காட்சி தந்தார்.
பரிகாரம்:
நாம் திருவண்ணாமலை சென்று பௌர்ணமி தினங்களில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் வணங்கி வந்தால் கல்யாண வரம், குழந்தை வரம், வியாபாரத்தில் விருத்தி அடைவது, உத்தியோக உயர்வு என்ற அனைத்து வேண்டுதலும் நிறைவேறும் என்பது ஐதீகம்.
வழித்தடம்:
திருவண்ணாமலை மாநகரத்தில் மையப் பகுதியில் அமைந்திருக்கும் இத்திருத்தலத்திற்கு திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து கோவிலில் வாசலுக்கே பேருந்துகள் வந்து செல்கின்றன.


