திருவொற்றியூர் வடிவுடை அம்மன்
வடிவுடை அம்மன் வரலாறு:
சென்னை சுற்றுவட்டாரத்தில் மூன்று அம்பிகை இச்சா ,கிரியா, ஞான சக்திகளாக இருந்து வருகின்றனர். இதில் இத்தளம் ஞானசக்திக்குரியது. சென்னையில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் திருவெற்றியூரில் பல ஆண்டுகள் பழமைவாய்ந்த வடிவுடை அம்மன் ஆலயம் உள்ளது.
வடிவு என்றால் அழகு என்று அர்த்தம். பவுர்ணமி தினத்தன்று காலையில் மேலூர் திருவுடையம்மன், மதியத்தில் திருவொற்றியூர் வடிவுடை அம்மனையும், மாலையில் திருமுல்லைவாயில் கொடியுடை அம்மனையும் தரிசனம் செய்வதன் மூலம் இறை அருளை பரிபூரணமாக பெறலாம்.இங்கு வடிவுடையம்மன் ஞாபகசக்தி பெற்றவளாய் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
பரிகாரம் :
இவள் ஞானத்தின் உருவமாக விளங்குகிறாள் எனவே நல்ல குழந்தைகளும், நல்ல கணவன் கிடைக்க வேண்டி ஆயிரக்கணக்கான மகளிர் பவுர்ணமி தினங்களில் வந்து அம்மனை வழிபடுவர்.
சிவபெருமான் இத்தலங்களில் மூன்று வடிவங்களில் உள்ளார் .
1.உருவமற்ற வடிவம்-அக்னி அல்லது வெளிச்சம்
2.உருவம் கொண்ட வடிவம்-பாம்பு புற்று, சுயம்புலிங்கம் (இந்த லிங்கத் தை கிருத்திகை மாதத்தின் பவுர்ணமி தினத்தன்று காணலாம்)
3.வர்ணிக்க முடியாத வடிவம்-பாம்பு புற்றுக்குள் தொடமுடியாத ரூபம்
இம்மூன்று வடிவங்களையும் ஒரே சந்நிதியில் தொடர்ந்து சென்று சிவனையும் அம்மனையும் வழிபட்டால் நமது வேண்டுதல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.