புரட்டாசி மாதம் வழிபட வேண்டிய சில முக்கிய பெருமாள் ஆலயங்கள்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Updated on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

பெருமாள் ஆலயங்கள்

பெருமாளுக்கு உகந்த மாதம் புரட்டாசி.இம்மாதம் முழுவதும் பெருமாள் கோவில்களில் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். இருந்தாலும் தற்போதைய சூழ்நிலையில் எல்லோராலும் கோவிலுக்கு செல்ல முடியாது. இந்த சமயத்தில் நீங்கள் வீட்டில் இருந்தபடியே தரிசிக்க வசதியாக கொங்கு நாட்டுக் கோயில்கள் சிலவற்றில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் உங்களுக்காக இதோ இங்கே சேவை சாதிக்கிறார். புருஷோத்தமனை தரிசியுங்கள்! அவனருளால் புண்ணியமும் பெறுங்கள்!

கரிவரதராஜ பெருமாள், சரவணம்பட்டி.

300 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது கோவை சரவணம்பட்டியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் ஆலயம் கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கரிவரதராஜ பெருமாள் சேவை சாதிக்கின்றார். வேற்று மத தளபதி போரில் வெற்றிபெற இப்பெருமாளை வேண்டிச் சென்று வெற்றியுடன் திரும்பி, திருப்பணிக்காக ஏராளமான தொகை தந்தார். சிவபெருமானுக்கான உரித்தான வில்வம் இங்கு தல விருட்சம். தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்படும் ஆலயம் கோவை- சத்தியமங்கலம் சாலையில் சரவணம்பட்டி பஸ் நிறுத்தத்திற்கு அருகே அமைந்துள்ளது இவ்வாலயம்.

பெருமாள் ஆலயங்கள்

 அரங்கநாத பெருமாள்(Aranganatha Perumal) ,காரமடை

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு காலத்தில் நீர் நிறைந்த மடைகளில் காரை மரங்கள் முளைத்து அடர்ந்த வனமாக இருந்த இடம் பின்னர் காரமடை என அழைக்கப்படுகிறது. காரை மரங்கள் மருத்துவ குணம் கொண்டது இங்குள்ள காரை மரத்தடியில் சுயம்புத் திருமேனியராக அரங்கநாத பெருமாள் எழுந்தருளியுள்ளார். கோயிலின் வடமேற்கு மூலையில் தலவிருட்சமாக காரை மரம் காணப்படுகிறது. கொங்கு திருவரங்கம் என்று அழைக்கப்படும் இத்தளத்தில் குழந்தை பேறு வேண்டுவோர் தலவிருட்சமான காரை மரத்தில் தொட்டில் கட்டி பிரார்த்தனை செய்கிறார்கள். அதனால் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. 

ருக்மணி, சத்யபாமா சமேத கிருஷ்ணன்,நீலிகோணம்பாளையம்

சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் கண்ணனை குலதெய்வமாகக் கொண்டவர்கள் எழுப்பப்பட்டு இன்று பெரும் கோயிலாக திகழ்கிறது. ருக்மணி, சத்யபாமா சமேத கிருஷ்ணன் கோவில் கோகுலாஷ்டமி இத்தலத்தின் பிரதான திருவிழாவாகும். இங்கு நடக்கும் திருக்கல்யாண வைபவத்தில் திருமணத்தடை உள்ளவர்கள் கலந்துகொண்டு வேண்டினால் விரைவில் திருமணம் நடைபெறுகிறது. இக்கோயிலில் சிங்கநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை எதிரே உள்ள சாலையில் உள்ளது.

தண்டிகை அரங்கநாத பெருமாள்,கணுவாய்ப்பாளயம்

கோவை மாவட்டம் நெ-4 வீரபாண்டி பிரிவில் இருந்து தாயனூர் செல்லும் பாதையில் உள்ள கணுவாய்பாளையம் பகுதியில் தண்டிகை அரங்கநாத பெருமாள் கோயில் கொண்டுள்ளார். முன்னர் மைசூர் மகா மாகாணத்தில் வாழ்ந்தவர்கள் குடும்பத்துடன் இடம்பெயர்ந்த போது தங்கள் இஷ்ட தெய்வமாக வணங்கிய இப்பெருமாளை தண்டிகையில் எழுந்தருளச் செய்து இப்பகுதிக்கு கொண்டு வந்ததால் தண்டிகை அரங்கநாதப் பெருமாள் என்ற திருநாமம் சூட்டி வழிபடுகின்றனர் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருவிழா போல் வழிபாடுகள் இத்தளத்தில் நடைபெறுவது சிறப்பு .

சீதா, லக்ஷ்மண ,சமேத ராமர்(Seetha,Lakshmana,Samedha Ramar) ,தொட்டபுரம்

ராமபிரான் இலங்கை நோக்கி சென்று கொண்டிருந்த போது வழியில் ஓரிடத்தில் வனப்பகுதியில் அசுரன் ஒருவன் கோபத்துடன் பெரும் மலையாக உருவெடுத்தது அவரைத் தடுத்தான் உடனே ராமபிரான் அங்கிருந்த பாறையில் முழந்தாளிட்டு அம்பெய்து மலையை இரண்டாகப் பிளந்து அசுரனை வதம் செய்தார் ராமபிரான் முழந்தாளிட்டு அம்பு எய்த இடம் ராமர் பாதம் என போற்றப்படுகிறது. தற்போதைய ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்துள்ள தொட்டபுரம் பகுதியில் உள்ள இப்பாறையில் ராமர் ,லட்சுமணர், சீதை, அனுமன், விநாயகர் திருவுருவங்கள் வடிக்க பெற்று கோவில் கட்டப்பட்டு சிறப்பாக வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. 

அபயவரத குபேர லட்சுமி நரசிம்மர், இலுப்பநத்தம்

கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகை அருகில் உள்ள இலுப்பநத்தம் கிராமத்தில் சேவை சாதிக்கும் லட்சுமி நரசிம்மர் குபேர திசையான வடக்கு நோக்கி சேவை சாதிப்பதால் அபய வரத குபேர லட்சுமி நரசிம்மர் என போற்றப்படுகிறார் இங்கு சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெறும் சுதர்சன ஹோமம் வழிபாட்டில் கலந்து கொண்டால் தொழில் ,வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து முன்னேற்றம் ஏற்படும். எதிரிகள் தொல்லை அகலும் ,துயரங்கள் விலகும், நீண்டநாள் நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ருக்மணி, சத்தியபாமா ,சமேத வேணுகோபால சுவாமி, தொட்டம்பாளையம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையம் கிராமத்தில் ருக்மணி, சத்யபாமா, சமேத வேணுகோபால சுவாமி எழுந்தருளி யுள்ளார் பொதுவாக வேணுகோபால சுவாமி தனது வலது பக்கமாக  புல்லாங்குழல் ஊதும் கோலத்தில் சேவை சாதிப்பார் ஆனால் இத்தலத்தில் தனது இடப்பக்கமாக புல்லாங்குழல் எந்தியிருப்பது சிறப்பு .இவரை வழிபட்டு தொடங்கும் செயல்கள் யாவும் நல்லபடி நடக்கும் என்பது நம்பிக்கை. 

பெருமாள் ஆலயங்கள்

வெங்கடேச பெருமாள், பரமேஸ்வரன் பாளையம்

 சூரிய ,சந்திர கிரகணங்கள் ஏற்படும் தோஷத்திற்கு மிகச் சிறந்த பரிகாரத் தலம். கோவை பரமேஸ்வரன்பாளயத்தில் அமைந்துள்ள வெங்கடேசப்பெருமாள் கோயில் கிபி 800 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது. இப்பகுதியை ஆண்ட வீர பாண்டியன் ,வீர நாராயணன் ஆகியோர் திருப்பணி செய்த ஆலயம் மூலவர் வெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி ,பூதேவியுடன் சங்கு சக்ரதாரியாக நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார் .அவரது பார்வை பூமியை நோக்கி இருப்பதால் பூமி சம்பந்தப்பட்ட தொழில் செய்வோருக்கு உகந்த கோவில்.திருப்பதி செல்ல இயலாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றுவர்.

ஸ்ரீதேவி, பூதேவி, சமேத பெருமாள், தேவம்பாளையம்

கோவை சத்தியமங்கலம் சாலையில் உள்ள கோவில்பாளையத்தில் இருந்து கரூர் செல்லும் வழியில் சுமார் ஒரு 1 கி.மீ  உள்ளது தேவம்பாளையம் ஆதியில் பெருமாள் மட்டுமே இங்கு எழுந்தருளிய நிலையில் சான்றோர்களின் அறிவுரைப்படி 2015 ஆம் ஆண்டில் ஸ்ரீதேவி, பூதேவி இருவரையும் பிரதிஷ்டை செய்தனர் .எளிமையான கிராம கோயிலாக இருந்தாலும் பிரசித்தி பெற்ற காரமடை அரங்கநாதர் கோயிலை போலவே அனைத்து விழாக்களும் வைபவங்களும் நடைபெறுவது சிறப்பு குழந்தை பேறு இல்லாதவர்கள் இப்பெருமானை வழிபட்டு பயன் பெறுகின்றனர்

சொர்ண லட்சுமி நரசிம்மர் ,கோனார் பாளையம்

ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் அருகே மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோனார் பாளையம் பகுதியில் பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய மகா லட்சுமி நரசிம்மரை பஞ்சலோகத்தில் வடித்து பிரதிஷ்டை செய்து அதன்கீழ் என் உற்சவ மூர்த்தியும் வைத்து வழிபடுவோருக்கு அனைத்தையும் அருள்வேல் எனக்கூறி மறைந்துள்ளார் அதன்படி பிரதிஷ்டை செய்தனர் லட்சுமி சமேதராக எழுந்தருளியிருக்கும் நரசிம்மரின் திருமேனி பஞ்சலோகத்தால் அமைக்கப்பட்டு பொன்போல பிரகாசிப்பதால் இவர் சொர்ண லட்சுமி நரசிம்மர் என போற்றப்படுகிறார் .

கரிவரதராஜ பெருமாள் ,கோவில் புதூர்

வைகுண்ட வாசனான பெருமாள் பூவுலகில் தாம் அருள்பாலிக்கும் தளத்தை காராம் பசுவை தானாக பால் சொரிய வைத்து அடையாளம் காட்டுவது உண்டு அத்தகைய தலங்களுள் ஒன்று ஈரோடு மாவட்டம் புன்செய்புளியம்பட்டி அருகில் உள்ள கோவில்புதூர். இங்குள்ள கோயிலில் மூலவர் கரிவரதராஜ பெருமாள் கருவறையில் நின்ற நிலையில் மேல் இரு திருக்கரங்களில் சங்கு சக்கரம் தாங்கி கீழ் இடது கரத்தை தனது இடுப்பில் இழுத்து வலது கரத்தால் அபய முத்திரை காட்டி சேவை சாதிக்கிறார் தன்னை நாடி வருவோர் இல்லங்களில் சுபகாரியங்கள் கைகூட வைக்கும் பெருமாள் சன்னதியில் வலம்புரி சங்கினால் தரப்படும் துளசி தீர்த்தம் உடல் பிணிகளை நீக்கும் வல்லமை படைத்தது.

Leave a Comment

error: Content is protected !!