Homeஅடிப்படை ஜோதிடம்லக்னம் பற்றிய சிறப்பு தகவல்கள்

லக்னம் பற்றிய சிறப்பு தகவல்கள்

லக்னம் (லக்னபுள்ளி )

மேஷ லக்னத்தில் பிறந்தவர்களுக்கு(லக்னபுள்ளி ) 0° முதல் 3°-20° வரை லக்னம் உதயமாகி செவ்வாயும் வலுத்து இருந்தால் மிகவும் நல்லது.

ரிஷப லக்னக்காரர்களுக்கு நடுவயது மத்திம வயது இவை சௌக்கியமாக இருக்கும். இதில்(லக்னபுள்ளி ) 13°- 20 °முதல் 16°முதல் 40° வரை பிறந்திருந்தால் வாழ்க்கை உயர்வாக இருக்கும். சுக்கிரன் லக்னத்தில் அல்லது 7-ல் இருந்தாலும் நல்ல உயர்வு உண்டு.

மிதுன லக்னக்காரர்கள்(லக்னபுள்ளி ) 26°- 40°முதல் 30° பாகை வரை பிறந்திருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். புதன் லக்னத்தில் இருந்தால் வாழ்க்கை மேலும் உயர்வாக இருக்கும்.

கடக லக்னக்காரர்களுக்கு இதன் அதிபதியாகிய சந்திரனைப் போலவே இந்த லக்னத்தில் பிறந்தவர் வாழ்நாள் முழுவதும் உயர்ந்தும் தாழ்ந்தும் மாறி மாறி வாழ்க்கை அமையும் மனைவிக்கு அடக்கமானவர்(லக்னபுள்ளி ) 0°-3°-20° வரை ஜனனம் ஆனால் வாழ்க்கை உயர்வாக அமையும்.

மருத்துவ ஜோதிட குறிப்புகள்

சிம்ம லக்னக்காரர்கள் தாய்க்கு வேண்டியவர்(லக்னபுள்ளி ) 13°-20°முதல் 16°-40° வரை பிறந்து இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

கன்னி லக்னக்காரர்கள் 26°-40° முதல் 30°வரை பிறந்து இருந்தால் வாழ்க்கை சிறப்பாக அமையும்.

துலாம் லக்னக்காரர்களில் கடைப்பகுதியில் இவர்களுக்கு மேன்மை உண்டு இதில் 0° முதல் 3°-20°வரை பிறந்தவர்களாக இருந்தால் மிகவும் சிறப்படைவார்கள்.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் இளமையில் நோய்வாய்ப்படுவார்கள் குரு வலுவாக அமைந்து இந்த லக்னத்தில் 13°-20° முதல் 16°-40°வரை பிறந்து இருந்தால் உயர்ந்த வாழ்வு உண்டு.

தனுசு லக்னக்காரர்கள் 25°-40°முதல் 30°வரை ஜனனமானால் தரமான நல்ல வாழ்க்கை உண்டு

மகர லக்னத்தில் பிறந்தவர்கள் மூத்த பெண்களின் சேர்க்கையால் அவமானம் பழி உண்டாகலாம் இதில் 0° முதல் 3°-20°வரை பிறந்திருந்தால் சிறந்த வாழ்க்கை உண்டு.

கும்பம் லக்கினகாரர்கள் 13°-20°முதல் 16°-40°க்குள் பிறந்திருந்தால் வாழ்க்கை உயர்வாக அமையும்.

மீன லக்னத்தில் பிறந்தவர்கள் அதிக உழைப்பில்லாதவர்கள் வெளிநாட்டு தொடர்பால் உதவிகள் உண்டு இந்த லக்னத்தில் 26°-40°முதல் 30°பாவிக்குள் பிறந்தால் அதிகம் முன்னேற்றம் உண்டு குரு லக்னத்தில் வழி பெற்றால் மேலும் உயர்வாக வாழ்க்கை அமையும்.

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!