திருச்சானூர் பத்மாவதி அம்மன்
வரலாறு:
ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியின் புற எல்லையில் திருச்சானூர் பத்மாவதி அம்மன் ஆலயம் உள்ளது. திருப்பதி வெங்கடேச பெருமாளின் துணைவியார் திருச்சானூர் பத்மாவதி அம்மன் ஆவாள்.
அலமேலு மங்காபுரம் என்று அழைக்கப்படும் திருச்சானூரில் இருக்கும் பத்மாவதி அம்மனை வணங்கிய பின்பு திருப்பதி சென்றால் தான் வெங்கடேஸ்வரரின் பரிபூரண அருள் முழுமையாக கிடைக்கும் என்பது வரலாறு.
சிறப்பு:
திருப்பதி செல்வதற்கு முன் திருச்சானூர் சென்றால்தான் அப்பயணம் பயனுள்ளதாக அமையும். வெங்கடேச பெருமாளின் மீது சினம் கொண்டதால் பத்மாவதி தேவி, சுவர்ணமுகி நதியில் ஒரு புஷ்கரணியில் புதைக்கப்பட்டு இருப்பதை அறிந்து, 12 ஆண்டுகள் தவமிருந்து 13வது ஆண்டு தங்கத்தாமரையிலிருந்து லட்சுமி தேவியின் வடிவமாக தோன்றினால். ஆதலால்தான் கணவனோடு திருப்பதியில் இல்லாமல் திருச்சானூரில் இருக்கிறாள்.
பரிகாரம்:
அன்பும் இரக்கமும் கொண்ட பத்மாவதி தேவியை பக்தியோடு வழிபட்டு பின் திருப்பதி வெங்கடேஸ்வரரை முழு நம்பிக்கையுடன் வழிபட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும்.
வழித்தடம்:
திருப்பதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் திருச்சானூர் என்னும் அலமேலுமங்காபுரம் என்று அழைக்கப்படும் இப் புனித தளத்தில் பத்மாவதி தாயாரின் அழகிய திருக்கோயில் அமைந்துள்ளது. திருப்பதி பேருந்து நிலையம், கோவிந்தராஜ பெருமாள் கோயில் அருகில் இருந்தும் அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் வசதி உள்ளன.