அழகிய சிங்க பெருமாள் கோயில்
நமக்கெல்லாம் மன நிம்மதியையும், தைரியத்தையும் கொடுக்கக் கூடிய ஒரே இடம் பெருமாள் சன்னதிதான். எப்பேர்ப்பட்ட பிரச்சனைகள் வந்தாலும் அதையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு சர்வ சாதாரணமாக நிற்பதற்கு அடிப்படைக் காரணம் பெருமாள் கோயில் என்பது உண்மை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிடித்தமான இடம் இருப்பது போல பெருமாளுக்கே பிடித்தமான இடம் ஒன்று இருக்கிறது. அப்படி பெருமாளே தானே விரும்பி அமர்ந்த இடம்தான் ‘திருவேளுக்கை’ என்னும் புனித ஸ்தலம்.
இது காஞ்சிபுரம் ‘விளக்கொளிப்பெருமாள்’ கோவிலுக்கு நேர் எதிரில் உள்ளது. மூன்று நிலை கோபுரம் ஒரு பிரகாரம் என சின்ன கோயிலாக இது காணப்பட்டாலும், மூர்த்தி பெரியது.
மூலவர்- ஸ்ரீ அழகிய சிங்கப்பெருமாள் இன்னொரு பெயர் ஸ்ரீ முகுந்த பெருமாள்.
விமானம்- கனக விமானம்
தாயார்- வேளுக்கை வல்லித் தாயார்.
தீர்த்தம்- கனக சரஸ் தீர்த்தம்
அமர்ந்த நிலையில் காட்சி கொடுக்கிறார்.
பிருகு முனிவருக்கு வெகு நாட்களாக ஒரு ஆசை. இயல்பான வடிவத்தோடு காட்சி தந்த பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது எப்படி இருந்திருப்பார் என்று. இந்த காட்சியை தனக்கு மட்டும் காட்ட வேண்டும் என்று இந்த ஸ்தலத்தில் தவம் கொண்டிருந்தார். பிருகு முனிவரின் வேண்டுகோளை அறிந்து பெருமாள் நரசிம்ம மூர்த்தியாக கனக விமானத்தின் கீழ் காட்சியளித்ததாக புராண வரலாறு கூறுகிறது.
இன்னொரு வரலாறும் உண்டு.
இரண்யனைக் கொன்ற பின்னர் அவரை சேர்ந்த அசுரர் கூட்டம் நரசிங்க மூர்த்தியை தாக்க வந்தது. அந்த அசுரர் கூட்டத்தை வீறு கொண்டு தாக்கி அவர்களை துரத்தினார் பெருமாள். அவர்கள் நரசிங்க மூர்த்தியின் வேகத்திற்கு அஞ்சி ஓடும் பொழுது அவர்களை துரத்தி வந்த பெருமாள் குளிர்ச்சியான இயற்கை எழில் மிக்க இந்த ஸ்தலத்திற்கு வந்ததும் அப்படியே ஆனந்தமாக இங்கேயே அமர்ந்துவிட்டார்.
இதையும் கொஞ்சம் படிங்க : நீங்கள் பிறந்த லக்னத்தின் அடிப்படையில் உங்களுக்கு எப்படிபட்ட மனைவி அமைவாள் ?திருமண வாழ்க்கை யோகமா ?அவயோகமா ?
ஒருவேளை ஓடிப்போன அசுரர்கள் திரும்பி வந்தால் அவர்களை எதிர்க்க இந்த இடமே மிகவும் உத்தமம் என்று பகவான் நினைத்து யோக நரசிம்ம மூர்த்தியாக அருள்பாளித்து நின்று தரிசனம் தருகிறார்.
பேயாழ்வார் திருமங்கை ஆழ்வார் இத்தலத்தை பற்றி பாடி இருக்கின்றனர்
ஸ்ரீ அழகிய சிங்கப்பெருமாளை வழிபட்டால் கிடைக்கும் பலன்
அன்றாடம் நாம் ஏதாவது ஒரு விஷயத்திற்கு சம்பந்தமில்லாத நபர்களுக்காக பயந்து சாகிறோம். எந்த காரியமும் சரிவர செய்ய முடியாமல் ஏதோ ஒரு பயத்தில் நடுங்கிக் கொண்டிருப்பவர்களும், கெட்ட கனவுகளால் அவதிப்படுபவர்களும், தாதாக்களினாலும், குண்டர்களினாலும், பிளாக்மெயில் செய்பவர்களினாலும் கஷ்டப்படுகிறவர்கள். படிக்க முடியாமல் திண்டாட கூடிய மாணவ மாணவிகளும் தெரிந்தோ தெரியாமலோ தவறு செய்து விட்டு அதனால் தன் எதிர்கால வாழ்க்கை வீணாகப் போய்விடுமோ? என்று நினைப்பவர்களும் இங்குள்ள நரசிம்மரை தரிசனம் செய்து தங்கள் உள்ள கிடக்கை பிரார்த்தனையாக செய்தால், அதை பகவான் நல்லபடியாக மாற்றி நடத்தி வைப்பார். மனப் பயம் உடனே விலகும்.
கோவில் இருப்பிடம்