திவ்ய தேசம் 48 : உலகளந்த பெருமாள் கோயில் – காஞ்சிபுரம்
புகழ்பெற்ற திருக்கோயில்களை கொண்ட காஞ்சிபுரத்தில் எத்தனையோ வரலாற்று பெருமைமிக்க கோவில்கள் உண்டு. எம்பெருமான் சேவை சாதிப்பது எப்படி எல்லாம் பார்க்க வேண்டுமோ அப்படி எல்லாம் பார்க்கலாம். திருமாலும் தான் எடுத்த சில அவதார காட்சிகளை தன்னுடைய பக்தர்கள் வேண்டி கேட்ட பொழுது இடம், பொருள், ஏவல் பார்க்காமல் மறுபடியும் காட்டி பக்தர்களை பரவசப்படுத்தியிருக்கிறார். அப்படி பகவான் எடுத்த அவதார காட்சிகளில் ஒன்று தான் “உலகளந்த பெருமாள்’ தரிசனம். அதை இங்கே ஆனந்தமாக தரிசனம் செய்யலாம்.
சுமார் 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மேற்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம், இரண்டு பிரகாரங்களையும் உடையது.
மூலவர் உலகளந்த பெருமாள் நின்ற திருக்கோலம். |
விமானம் ஸார ஸ்ரீஹர விமானம். |
தீர்த்தம் நாக தீர்த்தம் |
எம்பெருமாள் நின்ற திருக்கோளத்தில் 35 அடி உயரமும் 24 அடி கொண்ட நிலையில் தனது இடது காலை விண்ணோக்கி தூக்கியும், இடது கரத்தின் இரண்டு விரல்களையும், வலது கரத்தில் ஒரு விரலையும் உயர்த்தி காட்டி மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார். |
தாயார் ஸ்ரீ ஆரணவல்லித் தாயார் |
‘மகாபலி’ சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் வேண்டி வாமன அவதாரம் எடுத்த இறைவன் மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைக்க, மகாபலி இறைவனது திருவடியின் கீழ் அகப்பட்டு பாதாள உலகில் வீழ்ந்தான். அப்பவும் மகாபலி சக்கரவர்த்திக்கு ஒரு ஆசை பகவானின் திருக்கோலத்தை முழுமையாக காண இயலவில்லையே என்றெண்ணி பாதாள உலகத்திலேயே பெருமாளை நோக்கி தவம் செய்தான். இந்த தவத்திற்கு மகிழ்ந்த பெருமாள் இந்த தலத்திலேயே மகாபலிக்கு உலகளந்த திருக்கோலத்தை மறுபடியும் காட்சியாக தந்தார். திருமங்கையாழ்வார்,திருமழிசையாழ்வர் பாசுரம் செய்த தலம்
கல்லெடுத்து கல்மாரி காத்தாய் என்றும் காமரு பூங்கச்சி ஊரகத்தாய் என்றும் வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாயென்றும் வெஃகாவில் துயிலமர்ந்த வேந்தே என்றும் மல்லடர்ந்து மல்லரை யன்றட்டா யென்றும் மாகீண்ட கைத்தலத்தென் மைந்தா வென்றும் சொல்லெடுத்து தன் கிளியைச் சொல்லே யென்று துணை முலைமேல் துளிசோரச் சோர்கின்றாளே. -திருமங்கையாழ்வார் |
பரிகாரம் :
எத்தனையோ தவறுகளை செய்து கொண்டு இருந்தாலும் அத்தனையும் தாண்டி பகவான் மீது பற்று வைத்து நாம் செய்த பாவங்களுக்கெல்லாம் நிச்சயம் மன்னிப்பு கேட்டு விடலாம். பகவான்தான் கருணை கடலாயிற்றே! நிச்சயம் நம்மை மன்னிப்பதோடு நேரடியாகவும் காட்சி தந்து நம்மை குறை இல்லாத மனிதனாக வாழ வைப்பார் என்ற புனிதமான பக்தியோடு இந்த கோயிலுக்கு வருகிறவர்களுக்கு ‘மகாபலி’ சக்கரவர்த்திக்கு காட்சி தந்தது போல் பெருமாள் தினமும் காட்சி தந்து அருள்வார். தெரிந்து செய்திருந்தாலும் இல்லை தெரியாமல் செய்திருந்தாலும் அத்தனை பாவங்களையும் மன்னித்து அனுக்கிரகம் கிடைக்கும் அருமையான புனித ஸ்தலம் இது.
கோவில் இருப்பிடம்