சுப்ரமணிய உபாஸன மந்திரம்
மூல மந்திரம்:
ஓம் நமோ நமசிவாய மயில்வாகனா பாலசுப்பிரமணியா
ஐயும் கிலியும் சரஹணபவா மம வசி வசி ஸ்வாஹா
என 10008 உரு செபிக்க சித்தியாகும் .
அறுகோணம் போட்டு மத்தியில் ஓங்காரமெழுதி அறுகோண முனையில் சரஹணபவா என்று பிரதக்ஷணமாக செப்பு தகட்டில் எழுதி பூஜை செய்து செபிக்கவும் .
மேற்படி பூஜை விவரம்
காலையில் நதி அல்லது குளம் அல்லது கிணறுகளில் குளித்துவிட்டு சுத்த வஸ்திரம் நார்மடி கட்டிக்கொண்டு விபூதியணிந்து அனுஷ்டானம் முடித்து தனியான இடத்தில் மெழுகி கோலமிட்டு ,கும்பத்தில் ஜலம் வைத்து கும்பவஸ்திரம் பட்டு சாத்தி ,மாவிலை போட்டு அதன்மேல் தேங்காய் வைத்து கும்பத்திற்கு முன் வாழையிலை போட்டு தேங்காய் ,பழம் ,வெற்றிலை ,பாக்கு பாயசம் ,பஞ்சாமிருதம் வத்தி கொளுத்தி வைத்து சூடம் ,சாம்பிராணி தீபம் தூபம் கொடுத்து மேற்படி மூல மந்திரம் சொல்லி மேற்படி உரு செபிக்க சித்தியாகும்.வில்வபலகை முக்கியம் அல்லது மாம்பலகை ஆசனத்திலிருந்து செய்யவும்.41 நாளையில் மேற்படி உரு செபித்து முடிக்கவும்.
இதன் நன்மை :
பேய் பிடித்த பெண்களுக்கு முன் போய் நின்ற உடனேயே பேய் விலகிவிடும் .மேற்படி மூல மந்திரம் 108 விபூதியில் மேற்படி சக்கரம் எழுதி செபித்து மேற்படி பெண்களுக்கு போடபூராவாய் எந்த பிசாசும் ஓடிவிடும்.காய்ச்சல் ,பயம் ,சிலந்தி பரு முதலிய எந்த வியாதிக்கும் விபூதியிட சௌக்கியமாம்.
ஐயா வணக்கம்
இது எந்த நூல் என்று அறிந்துகொள்ள வேண்டும் ஐயா