Homeஅடிப்படை ஜோதிடம்நட்சத்திர குறிப்புகள் :சுவாதி நட்சத்திரம்

நட்சத்திர குறிப்புகள் :சுவாதி நட்சத்திரம்

சுவாதி நட்சத்திரம் 

  • சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செயல்களை மிகவும் தைரியமாக முடிப்பார்கள்.தங்களுடைய காரியங்களில் அரசர்களாக இருப்பார்கள். சிலர் பணம் கொடுக்கல்-வாங்கல் தொழிலில் ஈடுபடுவார்கள்.
  • சிலர் வணிக  பொருள்களுக்கு ஏஜெண்டுகளாக இருப்பார்கள்.பண விவகாரங்களில் மிகவும் கவனம் உள்ளவர்கள்.வர்த்தகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். இனிமையாகப் பேசுவார்கள்.
  • இரக்க குணம் உள்ளவர்கள்.நேர்மையானவர்கள்.தன் தர்மத்தை பற்றி பெருமையாக நினைப்பார்கள்.அலங்காரப் பிரியர்கள்.பெயர் புகழுடன் இருப்பார்கள். 
  • சிலர் கதைகள் எழுதுவார்.சமூக சேவகர்களாக இருப்பார்கள்.எப்போதும் உற்சாகத்துடன் செயல்படுவார்கள்.வீடு வாங்கினால் அது கலைநயத்துடன் இருக்க விரும்புவர்
  • நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு R ,T  ஆகிய ஆங்கில எழுத்துக்களில் பெயர் ஆரம்பிக்க வேண்டும்.

யோனி-மகிஷம் 

கணம்-தேவ கணம் 

நாடி-அனந்த நாடி 

அதிபதி-வாயுதேவன் 

கிரகம்-ராகு 

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நோய் பாதிப்பு உண்டானால் அது குணமாவதற்கு 17 நாட்கள் ஆகும்.நோய் குணமாக வாயோர கணேதி  மந்திரத்தை கூற வேண்டும்.நெய்யை தானமளிக்க வேண்டும்.அர்ஜுன மரத்தை வழிபட வேண்டும். 

  • பிறக்கும்போது ராகு பகவான் 6-ல் இருந்தால் வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரும். 
  • ராகு சந்திரனுடன் எட்டில் இருந்தால் சீதளம் பிடிக்கும் 
  • ராகு செவ்வாயுடன் 6,8,12ல் இருந்தால் அடிக்கடி ஜுரம் வரும். 
  • குழந்தை வளர்ந்த பிறகு பிடிவாத குணம் அதிகமாக இருக்கும். 
  • ராகு, லக்னத்தில் சூரியன் இருந்தால் சூரிய கிரகணத்தால் விஷப் பூச்சிக் கடியால்  ஜுரம் வரும். 
  • ராகு சனி செவ்வாயுடன் எட்டில் இருந்தால், இளம் வயதில் நிறைய கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதாயிருக்கும், திருமண வாழ்க்கையில் பல பிரச்சனைகள் ஏற்படும்.
  •  ராகு சந்திரன் செவ்வாய் 8 ,12ல் இருந்தால் சீதளம் உண்டாகும். கபம் கட்டும்.
சுவாதி நட்சத்திரம்

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய ஆலயம்:

கோயில்: சித்துக்காடு தாத்திரீஸ்வரர் கோயில்

அம்மன்: பூங்குழலி

தல வரலாறு: 

படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா ஆகியோர் நெல்லிவனத்தில் சிவலிங்கம் நிறுவி வழிபட்டனர். சித்தர் தவமிருந்த பகுதியானதால் இப்பகுதி சித்தர்காடு, சித்துக்காடு என அழைக்கப்பட்டது. . நெல்லி மரத்தடியில் இருப்பதால் சிவனுக்கு “தாத்திரீஸ்வரர்’ என்று பெயர். “தாத்திரீ’ என்றால் “நெல்லி.

சிறப்பு:

சுவாதி நட்சத்திரத்தினர் இங்கு சிவனை வழிபட்டால் செல்வ வளமிக்க வாழ்வு உண்டாகும். திருமணயோகம் விரைவில் கைகூடும். இங்கு குபேரருக்கு நெல்லிக்காய் ஊறுகாயுடன், தயிர்சாதம், புளியோதரை படைத்து வழிபட்டால் யோகவாழ்வு அமையும்.

இருப்பிடம்: 

சென்னை பூந்தமல்லி- தண்டுரை வழியில் 8 கி.மீ.,

திறக்கும்நேரம்: 

காலை8- 10, மாலை 5-7

உங்களுக்கு எழும் சந்தேகங்கள் ,என்னிடம் நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை Comment Box ல் தெரிவிக்கவும் ...விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

error: Content is protected !!