ஒன்பது கிரகங்களும்- அதற்குரிய மரங்களும்

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

ஒன்பது கிரகங்களும்- அதற்குரிய மரங்களும்

ஜோதிடம் ஒவ்வொரு கிரகத்துக்கும் மரம், செடி, காய் ,கனி பூக்களை ஒதுக்கியுள்ளது. அதன் விவரங்களை இங்கு காண்போம் சிலவற்றுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் காரகம் வகிக்கின்றன

சூரியன்

பெரிய மரங்கள், மருந்து செடிகள், கோதுமை, நெல், வேர்க்கடலை, தென்னை, ஜாதிக்காய், மசாலா செடிகள், ஓமம், மிளகு, பெரிய காடுகள், நெல்லி, மணிபுங்கம், வெண், தேக்கு, வேங்கை மரம், வாதநாராயண மரம், எட்டி மரம், புங்க மரம், பலா மரம், பனைமரம், செந்தாமரை, பாலைவன முட்செடிகள், புதர்கள், மரங்கள் போன்றவை அனைத்தும் சூரியன் குறிக்கும் தாவரங்கள் ஆகும்.

சந்திரன்

நாவல் மரம், மந்தாரை, நாகலிங்க மரம், அத்தி மரம், தென்னை மரம், கருங்காலி, சிறுநாகப்பூ, பாக்குமரம், கோதுமை, நெல், பழ மரங்கள், இலங்குறுத்துகள், தேயிலை, காப்பி, முட்டைகோஸ், கிழங்கு, காளான், கரும்பு, பூசணி, பார்லி, புல்வகைகள், அனைத்து பூஞ்செடிகள், வெள்ளரி, சங்குப்பூ, உணவு சம்பந்தமான அனைத்து விவசாய பயிர்களும் சந்திரன் சார்ந்தவை.

செவ்வாய்

கருங்காலி, வேப்பமரம், நீர் கடம்பை, வில்வம், புரசு, கொடுக்காய்ப்புளி மரம், வன்னி மரம், கருவேல மரம், சீத்தாப் பழ மரம், ஜாதிக்காய், மலை மற்றும் பாறைகள் உள்ள இடங்களில் வளரும் மரங்கள், கசப்பு சுவை தரும் மரங்கள், பூண்டு, வேர்க்கடலை, கடுகு, வெல்லம், தடினமான நெல்வகைகள், சிவப்பு நிற தானிய செடி-மர வகைகள் போன்றவை செவ்வாய் குறிப்பிடும் தாவரங்கள் ஆகும்.

ஒன்பது கிரகங்களும்- அதற்குரிய மரங்களும்

புதன்

புன்னை மரம், முசுக்கொட்டை, இலந்தை மரம், பலா மரம், பூவரச மரம், பனைமரம், தங்க அரளி, செஞ்சந்தனம், மஞ்சள், பூந்தோட்டம், செடி கொடிகள், துளசி போன்ற பவித்திரமான செடிகள் நன்செய் புன்செய் மற்றும் அனைத்து பச்சை இலை உடைய தாவரங்களும் புதனுக்குரியவை.

குரு

மலைவேம்பு, மூங்கில், மரம், நெல்லி, சிம்சுபா, மரம், பூவன் மரம், தூங்குமூஞ்சி மரம், குங்கிலியம், சுந்தரவேம்பு, கள்ளி, மந்தாரை, கடல் அருகில் வளரும் தாவரங்கள், அடர்த்தியான வனப்பகுதி மரங்கள், ஆன்மீகம் சம்பந்தமான மரம் செடிகள், மஞ்சள், பூக்கள், பழமரம், மருந்து சார்ந்த மரங்கள், அனைத்து விதைகள் மூலிகை தாவரம், ரப்பர் மரம், தாமரை நீரில் வளரும் பூக்கள் போன்றவை அனைத்தையும் குரு குறிப்பிடுவார்.

சுக்கிரன்

அத்திமரம், மஞ்சள், கடம்பு, விளாமரம், நந்தியாவட்டை, பலா மரம், வாகை, ருத்ராட்ச மரம், வஞ்சி மரம், சந்தன மரம், எலுமிச்சை மரம், கால்நடைகள் மேயும் புல்வெளிகள், வயல்கள், வாசனை திரவியம் தரும் மரங்கள், இனிப்பான பழங்கள் தரும் மரங்கள், ரப்பர், பருத்தி, தேயிலை, மல்லிகை, மசாலா தாவரம், ஆப்பிள் மரம், பட்டுப் புழு உண்ணும் இலைகள், காய்கறி, ஊறுகாய் மற்றும் பழக்கூழ் தயாரிக்க உதவும் தாவரங்கள், புளிப்பும் இனிப்பும் கலந்த புளியமரம், போன்ற மரங்கள் ஆகிய அனைத்தையும் சுக்கிரன் குறிப்பார்.

ஒன்பது கிரகங்களும்- அதற்குரிய மரங்களும்

சனி

அரசமரம், ஆலமரம், நொச்சி, மகிழமரம், பூ மருது, கோங்கு, தேக்கு, வேம்பு, குள்மொஹார், செம்மரம், சேராங்கொட்டை, எண்ணெய் தரும் மரங்கள், கட்டட வேலைக்கு உதவும் மரங்கள், கடுமை தன்மை உடைய மரங்கள், வாழை, உருளைக்கிழங்கு, பார்லி, குளிரும் இறுக்கமுடைய மரங்கள், புன்செய்நிலம் வாயுவை உண்டாக்கும் காய்கறிகள், பெரிய குழிகள் தேவைப்படும் மரங்கள் போன்றவை சனியின் ஆதிக்கத்தில் வளர்பவை.

ராகு

செங்கருங்காலி, எருக்கு, ஆனைக் குன்றிமணி, மருது, புளியமரம், மஞ்சள், கொன்றை, மந்தாரை, கடம்பு, பரம்பை மரம், பெரிய வனத்தில் உள்ள மரங்கள், காற்றை உருவாக்கும் பெரிய விருட்சங்கள், போதை தரும் தாவரங்கள், விஷச் செடிகள், மாந்திரீகத்திற்கு உதவும் சில செடிகள் போன்றவை ராகுவுக்குரிய தாவரங்கள் ஆகும்.

கேது

காஞ்சிரை, மகிழமரம், வாதாங்கொட்டை, நண்டாஞ்சு, ஆல மரம், முசில மரம், இலுப்பை, பவளமல்லி மரம், பெருமரம், செண்பகமரம், ஆச்சா மரம், கொள்ளுசெடி, செவ்வந்தி செடி, மந்திரீக தாவரங்கள், வேர்கள், உலர்ந்த புல் மூலிகை செடிகள், ஆலமர விழுது, கொடிகள் முட்செடிகள் போன்றவை கேதுவின் தாவரங்களாகும்.

ஜாதகம் தொடர்பான தங்களின் கேள்விகளை கீழ்காணும் Telegarm குழுவில் இணைந்து தெரிவிக்கலாம் …

Astrosiva telegram


Leave a Comment

error: Content is protected !!