சுக்கிர தோஷம் உள்ளவர்களும், சுக்கிரனின் அருள் வேண்டுபவர்களும் ஒருமுறை இந்த திவ்ய தேசம் சென்றுவாருங்கள் !!!

ASTROSIVA AUTHOR

By ASTROSIVA

Published on:

Follow Us

திருமண பொருத்தம் பார்த்தல் |Thirumana Porutham calculator

🤝Join our Whatsapp Channel💚

265 பக்கம் முழு ஜாதகம் PDF | Detailed Birth Horoscope Report

உங்களுடைய ராசி நட்சத்திரத்தை தெரிந்து கொள்ள

FREE TAMIL HOROSCOPE ONLINE BIRTH CHART GENERATOR

திவ்ய தேசம் –திருவெள்ளியங்குடி

பிரார்த்தனைக்கு மதிப்பு கொடுத்து , உடனடியாக தரிசனம் தந்து அருள் பாலிப்பதையே குறிக்கோளாகக் கொண்டிருப்பவர் எம்பெருமாள்.ஒரு தடவை தரிசனம் கொடுத்தால் போதாதா என்று கேட்காமல் , தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அவ்வப்போது தரிசனம் கொடுத்து சந்தோஷப்படுத்துவார். அவ்வளவு இளகிய உள்ளம் கொண்ட பெருமாள் திருவெள்ளியங்குடி ஊரில் இன்றைக்கும் பக்தர்களது குறைகளைநேரடியாகவே கேட்கிறார்.

அப்படிப்பட்ட புகழ்பெற்ற கோயில் கும்பகோணம் – அணைக்கரை செல்லும் வழியில் சேங்கானூரில் அருகே கண்ணுக்கெட்டியத் தூரத்தில் அமைந்திருக்கிறது. கும்பகோணம் ஆடுதுறை பேருந்தில் சென்று முட்டக்குடியில் இறங்கினால் கொஞ்ச தூரம் நடக்க வேண்டியிருக்கும். இரண்டு பிராகாரங்களுடைய இந்தக் கோவிலின்

திருவெள்ளியங்குடி

மூலவர் கோலவில்லி இராமன்.

உற்சவர் சிருங்கார சுந்தரன்.

தாயார் மரகதவல்லி.

தீர்த்தம் சுக்ல பிரம்ம , பரசுராம, இந்திர தீர்த்தம்.

தலவிருட்சம் வாழை ,

விமானம் புஷ்கலாவர்த்தக விமானம் !

ஸ்தல விருஷ்ஷம் கதலி.

சுக்ரன்,ப்ரம்மா,இந்திரன் , பராசுரர் , மயன் , மார்க்கண்டேயர் பூமி தேவி ஆகியோர்களுக்கு திருமால் நேரிடையாக தரிசனம் தந்து அவர்களுடைய குறைகளை சாபத்தைப் போக்கியதாக புராண வரலாறு.

திரேதாயுகத்தில் பிரம்ம புத்திரம் என்றும், துவாபர யுகத்தில் சைந்திர நகரம் என்றும் , கலியுகத்தில் பார்க்கவபுரம் என்றும் இந்த ஸ்தலத்திற்கு பெயர். நவகிரகங்களில் ஒருவரான சுக்கிரன் தனக்கிருந்த சாபம் நீங்க இங்கு தங்கி கோலவில்லி ராமனை வழிபட்டதால் சாபம் நீங்கியவுடன் இந்த ஸ்தலத்திற்கு சுக்கிர புரியாக பெயரிட்டதாக வரலாறு. வெள்ளிக்கு மறுபெயர் சுக்கிரன். அதனாலே திருவெள்ளியங்குடி என்று பெயர் வந்தது.

மயன் ,இங்கு தங்கி தவம் செய்தான் . பெருமாள் , மயனுக்கு சங்கு சக்கரதாரியாக காட்சியளித்தார். ஆனால் மயனோ தனக்கு இராமனாக திருக்காட்சி தர வேண்டும் என்று கேட்டதால் தன் கையிலிருந்த சக்ரங்களை கருடனிடம் கொடுத்து விட்டு வில் அம்புடன் இராமனாக மயனுக்கு காட்சி தந்ததால் இறைவனுக்கு கோலவில்லி ராமன் என்று பெயர்.

கருடனுக்கு சங்கு சக்கரங்கள் இருந்ததால் கருடன் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இது வேறு எந்த திருமால் ஸ்தலங்களிலும் காண முடியாத அதிசயம். பெரிய வாச்சான் பிள்ளையின் அவதார ஸ்தலம். சேங்கானூர் என்பதால் இந்த ஸ்தலத்திற்கு இன்னொரு சிறப்பு. திருமங்கையாழ்வார் இத்தலத்தைப் பற்றி பாடியிருக்கிறார். மயனுக்குக் காட்டிய இராமர் தரிசனத்தை திருமங்கையாழ்வாருக்கும் பகவான் பிரத்யட்சமாகக் காட்டினார் என்பது இன்னொரு தகவல்.

திருவெள்ளியங்குடி

பரிகாரம் :

எத்தனையோ பிரார்த்தனைகள் செய்தும் பகவான் இரங்கவில்லையே என்று வருத்தப்படும் பக்தர்கள் இங்கு வந்து செய்கின்ற பிரார்த்தனைகள் அனைத்திற்கும் பகவான் எப்படியாவது பரிகாரம் தந்து காப்பாற்றி விடுவார். கடன் தொல்லையால் ஏற்படும் பிரச்சனைகள் ; தொழிலில் தேக்கநிலை , கோர்ட் வழக்குகள் . நோயின் உபாதைகளினால் கஷ்டப்படுகிறவர்கள் குழந்தைகள் சரியானபடி நடந்து கொள்ளாமல் அவர்களால் துன்பப்படுகிறவர்கள். மனநிம்மதியை அடிக்கடி இழப்பவர்கள் எல்லோரும் இங்கு வந்து பெருமாளை சரணடைந்தால் போதும். அவர்களது கஷ்டங்கள் அனைத்தும் விலகிவிடும். இன்னும் சொல்லப் போனால் அவர்களுக்கு மறுபிறவி என்பதே இருக்காது.

கோவில் இருப்பிடம்

Leave a Comment

error: Content is protected !!