திருவெம்பாவை பாடல் 19
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்
றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்
றுரைப்போம்கேள்
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ
ரெம்பாவாய்.
பொருள் :
எங்கள் பெருமான்! தலைவனே! எங்கள் உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என் றங்கப் பழஞ்சொற் புதுக்குமெம் அச்சத்தால்
உனக்கொன்றுரைப்போம்கேள்
கையில் இருக்கும் குழந்தை உனக்கே அடைக்கலமாகும்” என்று பலகாலமாக வழங்கி வருகின்ற பழமொழியைப் புதுப்பிக்கிறோம் என்று அஞ்சிக் கொண்டே உன்னிடம் ஒன்று சொல்வோம், கேட்பாயாக.
எங்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங்
எம் கொங்கைகள் உன் அன்பர்கள் அல்லாதாரின் தோள்களைச் சேராதிருக்கட்டும். எம் கரங்கள், உனக்கன்றி, மற்றொருவருக்கு, எந்தப் பணியும் செய்யாதிருக்கட்டும். இரவும் பகலும்,எம் விழிகள், உன்னையன்றி, வேறொரு பொருளைக் காணாதிருக்கட்டும் ..
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ
ரெம்பாவாய்
இவ்விதமான எங்கள் வேண்டுகோளை நீ நிறைவேற்றுவாயாகில், சூரியன் எத்திசையில் உதித்தால் எங்களுக்கு என்ன?